ஆட்டோமேட்டிக் கார் வாங்குறது முக்கியமில்ல, காரில் இது இருக்குதானு பார்க்கனும்! பலருக்கு இது தெரியுறது இல்ல!

மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox)-க்கு இணையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கொண்ட கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸை போலவே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் பல்வேறு விதமான வகைகளில் கிடைக்கின்றன. அவற்றுள் விலையுயர்ந்தது மற்றும் செயல்படுதிறன் மிக்கது என்று பார்த்தால், அது டிசிடி (DCT) எனப்படும் ட்யூயல்-க்ளட்ச் (Dual-Clutch) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகும்.

இதற்கடுத்து பலர் விரும்பக்கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆக சிவிடி (CVT) எனப்படும் தொடர்ச்சியாக மாறக்கூடிய டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உள்ளது. சிவிடி கியர்பாக்ஸை கொண்ட சில கார்கள் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best cars with cvt gearbox in india

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்யும் இரண்டே இரண்டு கார்களில் அமேஸ் ஒன்று ஆகும். இதனாலோ என்னவோ அமேஸ் காரில் க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) போன்ற பல அசத்தலான அம்சங்களை ஹோண்டா வழங்குகிறது. அந்த வகையில், அமேஸ் காரில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சிவிடி கியர்பாக்ஸ் உடன் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கார், அமேஸ் ஆகும்.

best cars with cvt gearbox in india

நிசான் மேக்னைட் (Nissan Magnite): ஹோண்டாவை போல் மற்றொரு ஜப்பானிய கார் நிறுவனமான நிசானில் இருந்து இரண்டே இரண்டு கார் மாடல்கள் மட்டுமே தற்சமயம் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றான மேக்னைட் காரில் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றுள் ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட வேரியண்ட் என்றால் அது 'அசெண்டா டர்போ சிவிடி' ஆகும்.

best cars with cvt gearbox in india

ரெனால்ட் கைகர் (Renault Kiger): நிசான் மேக்னைட் கார் உருவாக்க பயன்படுத்தப்படும் அதே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட கார், ரெனால்ட் கைகர் ஆகும். இதனால், மேக்னைட்டை போன்று கைகரும் சிவிடி கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. மேலும், சிவிடி கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் வேரியண்ட்டின் விலை கூட மேக்னைட் காருக்கு இணையானதாக உள்ளது.

best cars with cvt gearbox in india

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுள் ஒன்று, ஐ20 ஆகும். ஐ20 காரில் ஹூண்டாய் நிறுவனம் ஐவிடி (iVT) என்கிற பெயரில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை வழங்குகிறது. மேற்கூறப்பட்ட கார்களை காட்டிலும் சற்று விலையுயர்ந்த காராக இருப்பினும், ஐ20 காரில் ஐவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை ரூ.8.89 லட்சத்தில் இருந்தே பெறலாம்.

best cars with cvt gearbox in india

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): ஐ20 காரை காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார், பலேனோ ஆகும். பலேனோவில் வழங்கப்படும் 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேனுவல் கியர்பாக்ஸ் காருக்கு மாற்றாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை வாங்க முன் வருபவர்கள் முடிந்தவரையில் செயல்திறன்மிக்க ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் காரை வாங்க முயற்சிக்கலாம். அதற்கு சிவிடி கியர்பாக்ஸ் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பதால், மேற்கூறப்பட்ட சிவிடி கியர்பாக்ஸ் கார்களுள் ஒன்றை தேர்வு செய்து வாங்கலாம்.

சிவிடி கியர்பாக்ஸ் மட்டுமின்றி, இன்னும் சில ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் இந்தியாவில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், சுருக்கமாக ஏஎம்டி (AMT) எனப்படும் ஆட்டோமேட்டட்-மேனுவல் கியர்பாக்ஸ் கார்களும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன. இவை சிவிடி கார்களை காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய சிறந்த கார்களை பின்னர் இன்னொரு தொகுப்பில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 13, 2025, 23:18 [IST]
English summary
Best cars with cvt gearbox option in india under rupees 10 lakhs check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X