எந்த பிராண்ட் காராக இருந்தாலும் சரி டிரைவருக்கு இந்த டிஸ்பிளே அவசியம்! 10 லட்ச ரூபாய் காரிலும் கிடைக்குது!
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை (Digital Instrument Cluster Display) என்பது ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கும் திரை ஆகும். சரியாக ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்பக்கத்தில், ஓட்டுனர் எளிதாக சாலையையும் பார்த்துக் கொண்டு அதேநேரம் இந்த திரையையும் பார்த்துக் கொண்டு காரை ஓட்டும் வகையில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையை வழங்குகின்றனர்.
இந்த திரையின் மூலமாக காரை பற்றிய விபரங்களை அறிவதன் மூலம் அதற்கேற்ப டிரைவிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ள முடியும். சில வருடங்களுக்கு முன்பு வரையில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஆனது செமி-டிஜிட்டல் தரத்திலும், ரிவர்ஸ்-எல்இடி தரத்திலும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களில் கூட இந்த வசதி பரவலாக வழங்கப்படுகிறது.

டாடா பஞ்ச் (Tata Punch): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) ரக காரான பஞ்ச் காரில் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் 10.25 இன்ச்சில் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது. விலைமிக்க வேரியண்ட்களாக இருப்பினும், அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே உள்ளன. இன்னும் சொல்லப்போனால், பஞ்ச் காரின் எலக்ட்ரிக் வெர்சனான பஞ்ச் இவி காரில் கூட ரூ.10 லட்சத்திற்குள் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் எஸ்யூவி கார் இதுவாகும். இந்த காரின் குறைவான விலை கொண்ட மிட்-வேரியண்ட்களில் 8 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): மேற்கூறப்பட்ட டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக ஹூண்டாய் விற்பனை செய்யும் மைக்ரோ-எஸ்யூவி கார், எக்ஸ்டர் ஆகும். விலை குறைவான ஹூண்டாய் காரான இதில் மிட்-வேரியண்ட்களில் இருந்தே 4.2 இன்ச்சில் வண்ண டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (maruti Suzuki Swift): கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது. விலைமிக்க டாப் வேரியண்ட்டாக இருப்பினும், ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பதினால்தான் செமி-டிஜிட்டல் திரை வழங்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக விளங்கும் அல்ட்ராஸில் ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது. இத்தகைய திரை உடன் கிடைக்கும் அல்ட்ராஸ் கார் வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் சற்று குறைவாக உள்ளன.

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): ரெனால்ட் நிறுவனத்தின் எம்பிவி (MPV) ரக காராக விளங்கும் டிரைபர் ஆனது இந்தியாவிலேயே விலை குறைவான எம்பிவி காராக விளங்குகிறது. 7 இருக்கைகள் உடன் உருவாக்கப்படும் டிரைபர் எம்பிவி காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது.

சிட்ரோன் சி3 (Citroen C3): பிரெஞ்சு-ஸ்டைலில் உருவாக்கப்படும் ஹேட்ச்பேக் ரக கார் இதுவாகும். இந்த காரின் மிட்-வேரியண்ட்டான ஃபீல் (Feel) வேரியண்ட்டில் இருந்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது. இந்த விலை குறைவான சிட்ரோன் காரில் 10.2 இன்ச்சில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை பற்றிய விபரங்களை காரை ஓட்டும் டிரைவர் அறிவது அவசியம் ஆகும். அந்த விபரங்களை டிஜிட்டல் தரத்தில் பெறும்போது டிரைவருக்கு கார் ஓட்ட எளிமையானதாக இருக்கும். இதற்கு வழிவகை செய்யும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உடன் இந்த கார்களை வெறும் ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









