காரில் இந்த வசதி இருந்தாலே டிரைவர் ஹாப்பி... 10 லட்ச ரூபாய்க்குள் காரை சரியா தேர்வு செய்து வாங்கினால் போதும்!

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள (எக்ஸ்-ஷோரூம்) கார்களில், குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் ஓட்டுநர் இருக்கை உயரத்தை சரிசெய்யும் வசதி உள்ளது. இந்த அம்சத்துடன், ஒட்டுமொத்த மதிப்பு, பாதுகாப்பு, நவீன வசதிகள் ஆகியவற்றில் சிறந்த தேர்வுகளாக டாடா பன்ச், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி சுஸுகி பலேனோ போன்ற கார்கள் திகழ்கின்றன.

price 10 lakh rupee cars with driver height adjustment feature

டாடா பன்ச் (Tata Punch): இந்த வசதி, இந்த காரின் அக்கம்ப்ளிஷ்ட், க்ரியேட்டிவ் போன்ற நடுத்தர மற்றும் உயர் ரக வேரியண்ட்களில் கிடைக்கிறது. மைக்ரோ-எஸ்யூவியாக, கவர்ச்சிக்கரமான தோற்றத்தையும், நகரப் பயணங்களுக்கு ஏற்ற நடைமுறை வசதிகளையும் டாடா பன்ச் எஸ்யூவி ஒருங்கிணைக்கிறது. இதன் வலுவான பாதுகாப்பு அம்சங்களும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸும் இதன் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

price 10 lakh rupee cars with driver height adjustment feature

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்த காரின் ZXi மற்றும் ZXi பிளஸ் வேரியண்ட்களில் இருக்கை உயரத்தை சரிசெய்யும் வசதி தரநிலையாகவே வருகிறது. இது ஒரு பிரபலமான மற்றும் நம்பகமான ஹேட்ச்பேக் கார் ஆகும். சுறுசுறுப்பான செயல்திறன், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைந்த பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றுக்கு இது பெயர் பெற்றது.

price 10 lakh rupee cars with driver height adjustment feature

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இந்த அம்சம் எக்ஸ்டரின் நடுத்தர மற்றும் உயர் ரக வேரியண்ட்களில் இடம்பெற்றுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் ஆனது வசதிகள் நிறைந்த மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும். இதன் நவீன வடிவமைப்பு மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட கேபின் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. இதன் உயர் ரக வேரியண்ட்களில் 8 அங்குல தொடுதிரை, சன்ரூஃப் போன்ற அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

price 10 lakh rupee cars with driver height adjustment feature

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): ஓட்டுநரின் இருக்கை உயரத்தை சரிசெய்யும் வசதி ஆனது பலேனோவின் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்களில் கிடைக்கிறது. பலேனோ ஒரு பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார் ஆகும். இது விசாலமான உட்புறம், பல வசதிகள் நிறைந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிறந்த எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் வசதியான இருக்கைகள் நகரப் பயணங்களுக்கும், நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் ஏற்றவையாக உள்ளன.

price 10 lakh rupee cars with driver height adjustment feature

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): இந்த டாடா ஹேட்ச்பேக் காரின் உயர் ரக வேரியண்ட்களில் இந்த வசதி வழங்கப்படுகிறது. இது ஓட்டுநரின் சௌகரியத்தை மேம்படுத்துகிறது. அல்ட்ராஸ் அதன் 5-நட்சத்திர குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் சிறந்த சவாரித் தரத்திற்காக அறியப்படுகிறது. இது சாலைகளில் ஏற்படும் அதிர்வுகளை எளிதாகக் கடந்து, அனைத்து வகையான சாலை சூழல்களுக்கும் ஏற்ற ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

price 10 lakh rupee cars with driver height adjustment feature

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 NIOS): உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை வசதி இந்த ஹூண்டாய் காரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது ஒரு ஸ்டைலான மற்றும் நடைமுறைக்கு உகந்த ஹேட்ச்பேக் கார் ஆகும். நகரப் பயன்பாட்டிற்கு சிறந்த சௌகரியத்தை வழங்குகிறது. மென்மையான ஓட்டம் மற்றும் விலைக்கு ஏற்ற வசதியான உட்புறம் ஆகியவை இந்த காரில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

price 10 lakh rupee cars with driver height adjustment feature

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): ரூ.10 லட்சத்துக்கும் குறைவான இந்த காரின் பல வேரியண்ட்களில் இந்த வசதி உள்ளது. 7 இருக்கைகள் கொண்ட எம்யூவி கார் ஆக, பெரிய குடும்பங்களுக்கு மிகவும் நடைமுறைக்கு உகந்த மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு தேர்வாக டிரைபர் விளங்குகிறது. இது மாடுலர் இருக்கை அமைப்பு மற்றும் சௌகரியத்திற்காக வடிவமைக்கப்பட்ட வலுவான சஸ்பென்ஷன் அமைப்பைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை ஆனது கார் ஓட்டுபவருக்கு கூடுதல் சவுகரியத்தை வழங்குவது மட்டுமின்றி, காரின் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது. ஏனெனில், கார் டிரைவருக்கு முழு சாலையும் தெளிவாக தெரிய வேண்டியது அவசியமாகும். இத்தகைய வசதி கொண்ட கார்களை ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம் என்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 4, 2025, 5:00 [IST]
English summary
Best cars with driver height adjustment feature under price 10 lakhs maruti suzuki swift baleno
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X