இந்த டெக்னாலஜி இல்லாம, 10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்காதீங்க! விபத்தில் இருந்து தப்பிக்க கண்டிப்பா வேணும்!

இந்தியாவில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் பல பிரபலமான கார்களில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) எனும் பாதுகாப்பு அம்சம் அனைத்து வேரியண்ட்களிலும் தற்போது ஸ்டாண்டர்ட்டாக வழங்கப்படுகிறது. இந்த ESC ஆனது ESP (எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்) என்றும் அழைக்கப்படுகிறது.

இது, சாலையில் இயக்கத்தின் போது கார் சறுக்குவதைத் தடுக்க உதவுகிறது. அதாவது, சறுக்கலை உணரும்போது தானாகவே குறிப்பிட்ட சக்கரங்களுக்கு பிரேக்குகளை செலுத்தி, காரை நிலைநிறுத்துகிறது. 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில், ESC உடன் வரும் சிறந்த கார்கள் சிலவற்றை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

cars with electronic stability control

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): கடந்த 2024ஆம் ஆண்டில் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில், விலை குறைவான எண்ட்ரீ-லெவல் எல்.எக்ஸ்.ஐ (LXi) வேரியண்ட் உட்பட அனைத்து வேரியண்ட்களிலும் ESC ஸ்டாண்டர்ட்டாக வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.6.49 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

cars with electronic stability control

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): இந்த பிரீமியம் தரத்திலான டாடா ஹேட்ச்பேக் காரின் ஆரம்ப வேரியண்ட்டில் இருந்தே ESC பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. மேலும், குளோபல் என்சிஏபி (Global NCAP) பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ள அல்ட்ராஸ் காரின் விலை ரூ.6.89 லட்சத்தில் தொடங்குகிறது.

cars with electronic stability control

டாடா டியாகோ (Tata Tiago): டாடா நிறுவனத்தின் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றான டியாகோவும், அனைத்து வேரியண்ட்களிலும் ESC-ஐ ஸ்டாண்டர்ட்டாக வழங்குகிறது. இத்தனைக்கும் அல்ட்ராஸை காட்டிலும் விலை குறைவானதாக டியாகோ விளங்குகிறது. இதன் விலை ரூ.5.50 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

cars with electronic stability control

டாடா பன்ச் (Tata Punch): இந்த மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) கார் அதன் எஸ்யூவி கார்களுக்கே உண்டான வடிவமைப்பு மற்றும் உயர் பாதுகாப்பு மதிப்பீட்டின் காரணமாக அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக உள்ளது. இதில் ESC ஸ்டாண்டர்ட்டாக வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.6.13 லட்சத்தில் தொடங்குகிறது.

cars with electronic stability control

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): பன்ச்சிற்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்டரில் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சமாக ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், இந்த காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் ESC வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.6.00 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

cars with electronic stability control

நிசான் மேக்னைட் (Nissan Magnite): நிசானில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு காரான மேக்னைட்டின் டாப்-எண்ட் டெக்னா வேரியண்ட்களில் ESC ஸ்டாண்டர்ட்டாக வழங்கப்படுகிறது. இது நேச்சுரல் அஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.5.62 லட்சத்தில் தொடங்குகிறது.

cars with electronic stability control

ரெனால்ட் கைகர் (Renault Kiger): நிசான் மேக்னைட்டிற்கு ஒரு சிறந்த மாற்றாக கைகர் விளங்குகிறது. இந்த கைகர் மாடலிலும், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஒரு நிலையான பாதுகாப்பு அம்சமாக கொடுக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் ஆரம்ப விலை ரூ.5.76 லட்சம் ஆகும். இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவான ஒரு தேர்வை வழங்குகிறது.

cars with electronic stability control

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இந்த 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி (MPV) காரிலும் ESC ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சமாக உள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் இடையே சிறந்த சமநிலையை வழங்குகிறது. அளவில் பெரியதான எம்பிவி காராக இருப்பினும் டிரைபரின் விலை ரூ.5.76 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால கார்களில் அத்தியாவசியமான அம்சமாக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மாறி வருகிறது. ஏனெனில், பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சமாக இருப்பதால் இதனை கார் வாங்கும் பலரும் தங்களது கார்களில் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். அத்தகையவர்களுள் நீங்களும் ஒருவர் என்றால், மேற்கூறப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 23, 2025, 5:00 [IST]
English summary
Best cars with electronic stability control priced under 10 lakhs maruti suzuki swift tata altroz
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X