கார் என்ஜினை ஆஃப் பண்ணவுடன் எல்லாம் முடிஞ்சு போகல! 10 லட்ச ரூபா காரில் இந்த வசதி இருக்கானு கவனியுங்க!

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குக் குறைவான விலையில் பல கார்கள் 'ஃபாலோ மீ ஹோம்' (Follow Me Home) ஹெட்லேம்ப் வசதியை வழங்குகின்றன. காரின் என்ஜின் ஆஃப் செய்யப்பட்ட பின்னரும் சிறிது நேரம் வெளிச்சம் தரும் இந்த அம்சம், காரில் இருந்து இறங்கி இருண்ட பகுதிகளில் எளிதாக நகர உதவுகிறது. மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, டாடா நெக்ஸான் போன்ற பிரபலமான கார் மாடல்கள் இந்த அம்சத்துடன் கிடைக்கின்றன.

10 lakh rupee cars with follow me home headlamps

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): ஸ்டைலான உடலமைப்பை கொண்ட இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரின் ரூ.10 லட்சம் மதிப்பிலான பல வேரியண்ட்களில் 'ஃபாலோ மீ ஹோம்' ஹெட்லேம்ப் அம்சம் உண்டு. விசாலமான கேபின், 9-இன்ச் ஸ்மார்ட் பிளே புரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை பலேனோவின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

10 lakh rupee cars with follow me home headlamps

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): பிரீமியம் உணர்வு, நவீன தொழில்நுட்பங்களுக்கு ஐ20 பெயர் பெற்றது. இதன் அஸ்டா மற்றும் டாப் வேரியண்ட்களில் 'ஃபாலோ மீ ஹோம்' ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. மேலே கண்ட பலேனோ காருக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் இந்த ஹூண்டாய் பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு நவீன அம்சங்களும் நுட்பமான வடிவமைப்பும் அதன் பலம் ஆகும்.

10 lakh rupee cars with follow me home headlamps

டாடா நெக்ஸான் (Tata Nexon): உயர் மதிப்பீடு பெற்ற சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரான டாடா நெக்ஸான், "ஃபாலோ மீ ஹோம்" ஹெட்லேம்ப் வசதியைக் கொண்டுள்ளது. 5 நட்சத்திர குளோபல் NCAP பாதுகாப்பு ரேட்டிங், துணிச்சலான வடிவமைப்பால் இது அதன் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்களில் பிரிவில் வலுவான போட்டியாளராக விளங்குகிறது.

10 lakh rupee cars with follow me home headlamps

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்திய சந்தையில் நீண்டகாலமாக பலரால் மிகவும் விரும்பப்படும் காரான ஸ்விஃப்ட், அதன் இசட்.எக்ஸ்.ஐ+ (ZXI+) மற்றும் சில நடுத்தர வேரியண்ட்களில் இந்த அம்சத்தை வழங்குகிறது. ஜாலியான டிரைவிங், நல்ல மைலேஜ், பரந்த சர்வீஸ் நெட்வொர்க் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

10 lakh rupee cars with follow me home headlamps

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): ஹோண்டாவின் இந்த காம்பாக்ட் செடான் ரக கார் அதன் விலைமிக்க விஎக்ஸ் (VX) போன்ற வேரியண்ட்களில் "ஃபாலோ மீ ஹோம்" அம்சத்தைக் கொண்டுள்ளது. சிவிடி (CVT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மென்மையான இயக்கத்திற்கு அமேஸ் பாராட்டப்படுகிறது.

10 lakh rupee cars with follow me home headlamps

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): மைக்ரோ-எஸ்யூவி கார்கள் பிரிவில் ஹூண்டாயின் எக்ஸ்டர் ஆனது அம்சங்கள் நிறைந்த ஓர் சிறந்த தேர்வாகும். இதன் குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் சன்ரூஃப், டேஷ்கேம் போன்ற வசதிகளுடன், கார் ஆஃப் செய்யப்பட்ட பிறகும் செயல்படும் ஹெட்லேம்ப் செயல்பாடும் உள்ளது.

10 lakh rupee cars with follow me home headlamps

டாடா பன்ச் (Tata Punch): டாடா பன்ச் மைக்ரோ-எஸ்யூவி, 5-நட்சத்திர குளோபல் NCAP ரேட்டிங் உடன் வலுவான கட்டமைப்பு தரத்தை வழங்குகிறது. ரூ.10 லட்சத்திற்குக் குறைவான விலையில் இந்த காரின் பல வேரியண்ட்களில் "ஃபாலோ மீ ஹோம்" அம்சம் கிடைக்கிறது. மேலே கண்ட ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு இது போட்டியாக விற்பனை செய்யப்படுகிறது.

10 lakh rupee cars with follow me home headlamps

நிசான் மேக்னைட் (Nissan Magnite): மலிவு விலையில் கிடைக்கும் காம்பாக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றான நிசான் மேக்னைட், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் டாப் வேரியண்ட்களில் 360-டிகிரி கேமரா மற்றும் 'ஃபாலோ மீ ஹோம்' அம்சத்தையும் வழங்குகிறது. 2020இல் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் ஆனது இந்தியாவில் நிசான் நிறுவனம் விற்பனை செய்யும் இரண்டே இரண்டு கார்களுள் ஒன்றாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப்கள் காரை பார்க் செய்த பின் செல்ல வேண்டிய திசையை பயணிகள் அடையாளம் காண்பதற்காக வழங்கப்படும் அம்சமாகும். ஆதலால், இதை காரின் முக்கிய பாதுகாப்பு அம்சம் என்றும் கூறலாம். இத்தகைய வசதி உடன் மேற்கூறப்பட்ட கார்களுள் ஒன்றை ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம் என்பது உண்மையில் அருமையான விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 5, 2025, 5:00 [IST]
English summary
Best cars with follow me home headlamps under 10 lakhs maruti suzuki baleno and hyundai i20
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X