மார்க்கெட்டில் ஏற்கனவே பயங்கர ஃபேமஸு... ஜிஎஸ்டி-யும் குறைச்சிட்டாங்களா!! ரோடு முழுக்க இனி இந்த கார்கள் தான்!
இந்தியாவில் சிறிய ரக கார்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பின் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) சீர்திருத்தத்திற்குப் பிறகு விலை குறைய உள்ளன. ஜிஎஸ்டி மாற்றத்தின் படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளமும், 1200சிசி பெட்ரோல் அல்லது 1500சிசி டீசல் என்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதனை காட்டிலும் குறைந்த சிசி என்ஜின் கொண்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி (CNG) மற்றும் எல்பிஜி (LPG) வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-இல் இருந்து 18% ஆகக் குறைகிறது.
முன்னர் இந்த வகை வாகனங்களுக்கு 1% முதல் 3% வரை இருந்த இழப்பீட்டு செஸ் (Cess) முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 2.0 அறிவிக்கப்பட்ட பிறகு, ரூ.10 லட்சம் விலைக்குள் கிடைக்கும் கார்களின் விலைக் குறைப்பை பல கார் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பாதுகாப்பிற்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும், சிறப்பு அம்சங்களுக்கும் அல்லது செயல்திறனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி ரூ.10 லட்சத்திற்குள் பல்வேறு சிறந்த கார்கள் விற்பனையில் உள்ளன.

டாடா பன்ச் (Tata Punch): இந்தியாவின் மிக பாதுகாப்பான மற்றும் பிரபலமான மைக்ரோ-எஸ்யூவி கார்களில் இது ஒன்று ஆகும். 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் (87 hp) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பிற்குப் பிறகு சுமார் ரூ.85,000 வரை இந்த காரில் சலுகை கிடைக்கிறது. சிறிய அளவிலான இந்த எஸ்யூவி கார் ஆனது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு சிறந்த தேர்வு ஆகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இது ஹேட்ச்பேக் (Hatchback) கார் பிரிவில் நீண்டகாலமாகவே பிரபலமான மாடலாகும். ஜிஎஸ்டி சலுகைக்குப் பிறகு சுமார் ரூ.58,000 வரை ஸ்விஃப்ட் காரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. தினசரி நகரப் பயன்பாட்டிற்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வு ஆகும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): டாடா பன்ச்-க்கு போட்டியாக களமிறங்கிய ஹூண்டாயின் மைக்ரோ-எஸ்யூவி கார் இதுவாகும். ஜிஎஸ்டி சலுகைக்குப் பிறகு சுமார் ரூ.89,000 வரை விலை குறைந்துள்ளது. நவீன அம்சங்கள் கொண்ட உயரமான எஸ்யூவி காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் உள்ளது. விசாலமான மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபினுக்கு இது பெயர் பெற்றது. ஜிஎஸ்டி சலுகைக்குப் பிறகு சுமார் ரூ.60,000 வரை விலை குறைந்துள்ளது. நவீன தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த மற்றும் விசாலமான ஹேட்ச்பேக் கார் தேவைப்படும் குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ் ஆகும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios): பிரீமியம் உணர்வையும், சௌகரியமான பயண அனுபவத்தையும் வழங்குகிறது. 1.2 லிட்டர் காபா பெட்ரோல் என்ஜின் இதில் பயன்படுத்தப்படுகிறது. ஜிஎஸ்டி சலுகைக்குப் பிறகு சுமார் ரூ.74,000 வரை விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஆடம்பரமான கேபின் உடன் மென்மையாக நகரத்திற்குள் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

டாடா டியாகோ (Tata Tiago): பாதுகாப்பான எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகக் இது கருதப்படுகிறது. உறுதியான வடிவமைப்பு மற்றும் நல்ல மதிப்பை இது வழங்குகிறது. ஜிஎஸ்டி சலுகைக்குப் பிறகு சுமார் ரூ.75,000 வரையில் டியாகோ காரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. உறுதியான பட்ஜெட்டில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான காரை தேடுபவர்களுக்கும், முதல்முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வு.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR): இது குடும்பங்களிடையே மிகவும் பிரபலமான கார் ஆகும். இதன் நடைமுறைத் தன்மை மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கு இது பெயர் பெற்றது. ஜிஎஸ்டி சலுகைக்குப் பிறகு சுமார் ரூ.57,000 வரை விலை குறைப்பை பெற்றுள்ள வேகன்ஆர் கார், அதிக இடவசதி மற்றும் மிகக் குறைந்த இயக்கச் செலவுகளை விரும்பும் பெரிய குடும்பங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): செக்மெண்ட்டிலேயே சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் காம்பாக்ட் எஸ்யூவி கார் இது ஆகும். ஜிஎஸ்டி சலுகைக்குப் பிறகு சுமார் ரூ.1.40 லட்சம் வரை எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் அம்சங்கள் நிறைந்த கார் விரும்பும் ஓட்டுநர் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): குளோபல் என்சிஏபி (Global NCAP) கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர ரேட்டிங் பெற்ற டாடா நிறுவனத்தின் மற்றொரு கார் இதுவாகும். ஜிஎஸ்டி சலுகைக்குப் பிறகு சுமார் ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பை பெற்றுள்ளது. பன்முக என்ஜின் தேர்வுகள் கொண்ட பிரீமியம் மற்றும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎஸ்டி விலை குறைப்புக்கு முன்பு இருந்தே இந்த கார்கள் மார்க்கெட்டில் பிரபலமானவை ஆகும். தற்போதைய விலைக் குறைப்பால், இந்த சிறிய ரக கார்களின் விற்பனை, குறிப்பாக சிறு நகரங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எளிய வரி அமைப்பு ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையின் விற்பனையை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









