10 லட்ச ரூபாய்க்குள் அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் உடன் இதில் ஒரு காரை வாங்கலாம்!! பல பிராண்ட்களில் கிடைக்குது!

கிரவுண்ட் கிளியரென்ஸ் (Ground Clearance) என்பது காரின் அடித்தளத்திற்கும், தரைக்கும் இடையேயான தூரம் ஆகும். இன்றைய காலத்தில் பலர் கார் வாங்கும்போது இதனை உன்னிப்பாக கவனிக்கின்றனர். ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களைத் தேடுபவர்களுக்கு, என்ட்ரி-லெவல் எஸ்யூவிகளும் சில முரட்டுத்தனமான தோற்றமுடைய ஹேட்ச்பேக்குகளும் சிறந்த தேர்வுகளாகும். இந்த பிரிவில் டாடா நெக்ஸான் அதிகபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக விளங்குகிறது. ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10 lakh rupees cars with highest ground clearance

டாடா நெக்ஸான் (Tata Nexon): ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில், 208மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த கார், 5-ஸ்டார் குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் இவி எனப் பல என்ஜின் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கும் நெக்ஸான், நவீன, போல்டான வடிவமைப்புடன் பிரீமியம் தரத்திலான கேபினை வழங்குகிறது.

10 lakh rupees cars with highest ground clearance

நிசான் மேக்னைட் (Nissan Magnite): நெக்ஸானை காட்டிலும் இன்னும் குறைந்த விலையில் ரூ.6 லட்சம் ஆரம்ப விலையுடன், 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இது, பிரிவில் மிகவும் மலிவான ஆப்ஷன்களில் ஒன்றாகும். ஒரு டர்போ என்ஜின் உட்பட இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மேக்னைட் கிடைக்கிறது. ஸ்டைலான வெளிப்புறமும், சிறந்த தொழிற்நுட்ப அம்சங்களும் மேக்னைட்டின் சிறப்பம்சங்கள் ஆகும்.

10 lakh rupees cars with highest ground clearance

ரெனால்ட் கைகர் (Renault Kiger): மேலே குறிப்பிடப்பட்ட மேக்னைட் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த ரெனால்ட் எஸ்யூவி காரும் ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் கிடைக்கிறது. நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் இதில் கிடைக்கின்றன. விலை குறைவான காராக இருப்பினும், ஸ்டைலான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

10 lakh rupees cars with highest ground clearance

மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo): ரூ.8.5 லட்சம் என்கிற ஆரம்ப விலையில், 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன், லேடர்-ஆன்-பிரேம் கட்டுமானத்துடன் ஒரு உறுதியான கட்டமைப்பைக் கொண்ட காராக பொலிரோ நியோ விளங்குகிறது. இது டீசல் என்ஜின் மற்றும் ரியர்-வீல் டிரைவ் உடன் வருகிறது. இந்த காரில் ஏழு பயணிகள் வரை அமரலாம்.

10 lakh rupees cars with highest ground clearance

டாடா பன்ச் (Tata Punch): ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில், 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த டாடா எஸ்யூவி காரும் 5-ஸ்டார் குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது ஆகும். பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் இவி ஆப்ஷன்களில் பன்ச் கிடைக்கிறது. சிறந்த பயண அனுபவம் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற சிறிய அளவிலான காராக இது விளங்குகிறது.

10 lakh rupees cars with highest ground clearance

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber): இது 7 இருக்கைகள் உடன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான எம்பிவி ரக காராக விளங்குகிறது. ரூ.5.8 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கும் டிரைபர் 182மிமீ-இல் போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மிகவும் மலிவான 7 இருக்கை எம்பிவி காராக விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் உடன் கார் வாங்கும்போது தைரியமாக எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லலாம். இதனாலேயே, 10 லட்ச ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படும் கார்களில் கூட அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் வழங்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட அத்தகைய கார்களுள் ஒன்றை இந்த பண்டிகை காலத்தில் வாங்கி மகிழுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 5:00 [IST]
English summary
Best cars with highest ground clearance priced under 10 lakhs tata nexon and nissan magnite
மேலும்... #ground clearance #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X