இந்த டெக்னாலஜி இல்லாம கார் வாங்குவது சுத்தம் வேஸ்ட்... 10 லட்ச ரூபாய் காரில் கூட கிடைக்கும்போது கவலை எதுக்கு?

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கு உள்ளான பட்ஜெட்டில், பல கார்கள் ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல் (Hill-Hold Control) வசதி உடன் கிடைக்கின்றன. இது ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA) வசதி என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக, ஆட்டோமேட்டிக் அல்லது உயர் ரக மேனுவல் கார் மாடல்களில் இந்த அம்சம் கிடைக்கிறது. ஹேட்ச்பேக்குகள் (Hatchbacks), காம்பாக்ட் எஸ்யூவிகள் (Compact SUVs) மற்றும் ஒரு எம்.பி.வி (MPV) ரக கார் என ரூ.10 லட்சத்திற்குள் பல்வேறு விதமான கார்களில் இந்த வசதி கிடைக்கிறது.

10 lakh rupees cars with hill-hold control feature

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்த பிரபலமான ஹேட்ச்பேக் கார், அனைத்து வேரியண்டுகளிலும் ஹில்-ஹோல்ட் கன்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்குகிறது. 2024 இறுதி நிலவரப்படி, இதன் விலை ரூ.5.79 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரை உள்ளது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடலில், அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படுகின்றன.

10 lakh rupees cars with hill-hold control feature

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): பலேனோ மற்றும் அதன் டொயோட்டா பதிப்பான கிளான்ஸா (Glanza) ஆகியவற்றின் அனைத்து AMT (ஆட்டோமேட்டிக்) வேரியண்ட்களிலும், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) உடன் கூடிய ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.10 லட்சம் வரை தற்சமயம் உள்ளது. இந்த காரின் சில உயர் வேரியண்ட்களில் 360 டிகிரி கேமரா வசதியுடன், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ESP கிடைக்கிறது.

10 lakh rupees cars with hill-hold control feature

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios): இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார், தனது உயர் வேரியண்ட்களில் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட்டை வழங்குகிறது. இதன் விலை ரூ.5.47 லட்சம் முதல் ரூ.7.92 லட்சம் வரை உள்ளது. இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படுகின்றன.

10 lakh rupees cars with hill-hold control feature

சிட்ரோன் சி3 (Citroën C3): சிட்ரோன் சி3 தனது டாப்-ஸ்பெக் வேரியண்ட்களில் ஹில்-ஹோல்ட் கண்ட்ரோலை வழங்குகிறது. இதன் ஆரம்ப வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்கு கீழ் வந்தாலும், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல் வசதி உள்ள குறிப்பிட்ட வேரியண்ட்களை சரிபார்த்து வாங்குவது நல்லது. இதன் விலை ரூ.6.23 லட்சம் முதல் ரூ.10.19 லட்சம் வரை ஆகும்.

10 lakh rupees cars with hill-hold control feature

டாடா நெக்ஸான் (Tata Nexon): பாதுகாப்பு மற்றும் நவீன தொழிற்நுட்ப அம்சங்களுக்காக டாடா நெக்ஸான் ஒரு சிறந்த தேர்வாகும். இதன் அனைத்து வேரியண்ட்களிலும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ESC ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படுகிறது, ரூ.10 லட்சத்திற்குக் கீழ் சில அடிப்படை வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இதன் விலைகள் ரூ.7.32 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இருப்பினும் டாப் வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்தை தாண்டி செல்லும். 5-ஸ்டார் குளோபல் என்சிஏபி (Global NCAP) பாதுகாப்பு மதிப்பீட்டை நெக்ஸான் பெற்றுள்ளது.

10 lakh rupees cars with hill-hold control feature

ரெனால்ட் கைகர் (Renault Kiger): இந்த காம்பாக்ட் எஸ்யூவி அனைத்து வேரியண்ட்களிலும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA) மற்றும் ESC ஆகியவற்றை நிலையான அம்சமாக வழங்குகிறது. பல வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, கைகரின் விலைகள் ரூ.5.76 லட்சம் முதல் ரூ.10.34 லட்சம் வரை உள்ளன.

10 lakh rupees cars with hill-hold control feature

நிசான் மேக்னைட் (Nissan Magnite): கடைசியாக 2023ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பிறகு, மேக்னைட் அனைத்து வேரியண்ட்களிலும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA) வசதியை நிலையான அம்சமாக வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, இதன் விலை ரூ.6.00 லட்சம் முதல் ரூ.10.94 லட்சம் வரை ஆகும்.

10 lakh rupees cars with hill-hold control feature

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): இந்த மஹிந்திரா காரிலும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் வசதி உள்ளது. இருப்பினும், எந்தெந்த வேரியண்டுகளில் இது உள்ளது என்பதை வாங்குவதற்கு முன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் விலைகள் ரூ.7.28 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன. இந்த காரின் பல வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.

10 lakh rupees cars with hill-hold control feature

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இந்தியாவின் விலை குறைவான எம்பிவி காரான டிரைபர், அதன் அனைத்து வேரியண்ட்களிலும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA) மற்றும் ESC ஆகியவற்றை நிலையான அம்சமாக வழங்குகிறது. அளவில் பெரியதான இந்த எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.5.76 லட்சம் முதல் ரூ.8.60 லட்சம் வரை உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல் வசதி ஆனது ஏறுமுகமான மலைப்பாதைகளில் காரில் ஏறும்போது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். சரிவை நோக்கி கார் தானாக சறுக்கிக் கொண்டு வருவதை தடுப்பதற்காக இந்த வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு, மிகவும் அவசியமான மற்றும் பாதுக்காப்பான அம்சமாக விளங்குவதினாலேயே ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களில் கூட இந்த கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 16, 2025, 5:00 [IST]
English summary
Best cars with hill hold control feature priced under 10 lakhs maruti suzuki swift and baleno
மேலும்... #hill assist #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X