காரில் மைலேஜை அதிக பெறனும்னா இது இருக்கனும்! 10 லட்ச ரூபாய்க்குள் வாங்கும் சில கார்களிலும் கிடைக்குது!
இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் அமைப்பு (Idle Start-Stop System) உடன் கூடிய பல கார்கள் சந்தையில் உள்ளன. மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் கார் மாடல்கள் இதில் பிரதானமானவை ஆகும். அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவின் இந்த பிரபலமான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதியைக் கொண்டுள்ளது. மேனுவல் அல்லது ஏஎம்டி (AMT) என எந்த கியர்பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்தாலும் இதனை பெறலாம். ஸ்விஃப்ட் காரின் வி.எக்ஸ்.ஐ (VXi) வேரியண்ட்டில் இருந்து ரூ.10 லட்சத்திற்குள் இந்த வசதி கிடைக்கிறது.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): ஸ்விஃப்ட் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட டிசையர் காம்பாக்ட் செடானும், அதே சிறந்த மைலேஜ் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் அல்லது AMT ஆப்ஷன் உடன் ஐடல் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்தை வழங்குகிறது.

டாடா பன்ச் (Tata Punch): உறுதியான காம்பாக்ட் எஸ்யூவியாக 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ள பன்ச் காரின் பல ஏஎம்டி வேரியண்ட்களில் ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சம் கிடைக்கிறது. அதேபோல், மலிவு விலையிலான டாடா டியாகோ (Tiago) காரிலும் மேனுவல்/ ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சமும், ஏஎம்டி உடன் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): இது ஒரு பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார் ஆகும். இதன் 1.2 லிட்டர் என்ஜின், ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதியுடன் வருகிறது. பலேனோவின் டெல்டா, ஸீட்டா, ஆல்ஃபா போன்ற வேரியண்ட்கள் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR): பலேனோவை போன்று அன்றாட நடைமுறைக்கு மிகவும் உகந்த வேகன் ஆரும், ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் அதிக எரிபொருள் திறன் கொண்டது. 1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களில் விஎக்ஸ்ஐ வேரியண்டில் இருந்து ஆட்டோமேட்டிக் (AGS) கியர்பாக்ஸ் உடன் இது கிடைக்கிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் டாடா பன்ச் மாடலுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் இந்த ஹூண்டாய் கார் ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதியையும், போதுமான தொழிற்நுட்ப வசதிகள் கொண்ட கேபினையும் கொண்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்குக் கீழ், பல்வேறு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் இது கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜ் விரும்பும் பயணிகளை இலக்காக, ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட இந்த கார்கள், போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது என்ஜினைத் தானாகவே அணைக்கும் ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதியையும், குறைந்த எரிபொருள் செலவையும் ஒருங்கிணைக்கின்றன. இதனால், இவை கொடுக்கும் பணத்திற்கேற்ற மிகச் சிறந்த தேர்வுகளாக விளங்குகின்றன. குறிப்பாக, நகர்புறத்தில் வசிப்பவர்களுக்கு காரில் இந்த வசதி அவசியமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









