காரின் விலைகள் 10 லட்ச ரூபாயை தாண்டி போகல! சரியான ஒன்றை வாங்கி போடுவதுதான் பெரிய விஷயம்!
கீலெஸ் எண்ட்ரீ & புஷ்-பொத்தான் ஸ்டார்ட் (Keyless Entry & Push-Button Start) வசதிகள் கடந்த பல வருடங்களாகவே கார்களில் வழங்கப்பட்டு வரும் அம்சங்களுள் ஒன்று ஆகும். அதாவது, சாவியை நுழைத்து கதவை திறந்து செல்ல வேண்டும் என்றில்லாமல், டிஜிட்டல் சாவி மூலமாக எளிதாக காருக்குள் நுழையும் வசதி தான் கீலெஸ் எண்ட்ரீ ஆகும்.
அதேநேரம், புஷ்-பொத்தான் ஸ்டார்ட் என்பது என்ஜினை ஸ்டார்ட் செய்து காரை ஸ்டார்ட் செய்ய ஒரு பொத்தானை அழுத்தினாலே போதும் என்பதற்கு வழிவகுப்பது ஆகும். இந்த இரு வசதிகளும் கீ-ஃபாப் (Key-fob) எனப்படும் அதிநவீன டிஜிட்டல் சாவியின் மூலமாக செயல்படுகின்றன. இந்த வசதிகள் உடன் ரூ.10 லட்சத்திற்குள் விற்பனைக்கு கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா பஞ்ச் (Tata Punch): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அளவில் சிறியதான எஸ்யூவி காராக விளங்கும் பஞ்ச் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் கீலெஸ் எண்ட்ரீ & புஷ்-பொத்தான் ஸ்டார்ட் வசதிகள் வழங்கப்படுகின்றன. விலைமிக்க வேரியண்ட்களாக இருப்பினும், இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே உள்ளன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ரூ.10 லட்சத்திற்குள் அதிக தொழிற்நுட்ப வசதிகள் அடங்கிய கார் எனும்போது, அதில் எக்ஸ்டர் காரை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தொழிற்நுட்ப வசதிகள் அடங்கிய எக்ஸ்டர் காரிலும் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட விலைமிக்க வேரியண்ட்களில் கீலெஸ் எண்ட்ரீ & புஷ்-பொத்தான் ஸ்டார்ட் வசதிகள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் கைகர் (Renault Kiger): மேற்கூறப்பட்ட டாடா, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்யும் எஸ்யூவி காரான கைகரிலும் இன்னும் குறைவான விலையிலேயே கீலெஸ் எண்ட்ரீ & புஷ்-பொத்தான் ஸ்டார்ட் வசதிகள் வழங்கப்படுகின்றன. ரெனால்ட் பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மூன்றே மூன்று கார்களுள் கைகர் ஒன்றாகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று ஸ்விஃப்ட் ஆகும். ஸ்விஃப்ட் காரின் இசட்.எக்ஸ்.ஐ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்களில் இந்த அதிநவீன வசதிகளை மாருதி சுஸுகி வழங்குகிறது.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): ஸ்விஃப்ட் காரை காட்டிலும் பிரீமியம் தரத்திலான மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் (Hatchback) காரை வாங்க நினைப்பவர்களுக்கு பலேனோ ஏற்றதாக இருக்கும். இந்த காரின் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட விலைமிக்க வேரியண்ட்களில் புஷ்-பொத்தான் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகிறது.

டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza): மேலே குறிப்பிடப்பட்ட பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா கார், கிளான்ஸா ஆகும். பலேனோவின் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் கிளான்ஸா காரிலும் விலைமிக்க வேரியண்ட்களில் புஷ்-பொத்தான் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகிறது. அவற்றின் விலைகளும் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாகவே உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், பிரபலமான டாடா நெக்ஸான் (Tata Nexon) காரிலும் கீலெஸ் எண்ட்ரீ & புஷ்-பொத்தான் ஸ்டார்ட் வசதிகள் வழங்கப்படுகின்றன என்றாலும், அதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்தை தாண்டி செல்கின்றன. ஆக, இந்த அதிநவீன வசதிகள் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கார் வாங்க விரும்புபவர்கள் மேற்கூறப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









