பின் இருக்கை பயணிகள் தான் முக்கியம்னு நெனைச்சீங்கனா, ரூ.10 லட்சத்திற்குள் இதில் ஒரு காரை வாங்குங்க!!

இந்தியச் சந்தையில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் சொகுசான பின் இருக்கை வசதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய இரண்டு வாகனங்கள் சிறந்த தேர்வுகளாகும். இவை விசாலமான இடவசதி, வசதியான இருக்கைகள் மற்றும் மென்மையான பயண அனுபவம் ஆகியவற்றை வழங்குகின்றன. எர்டிகாவில் பின் இருக்கைகளை அதிகமாக சாய்த்துக்கொண்டு, நன்கு சவுகரியமாக அமரும் வசதி் உள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga): இந்த எம்பிவி ரக கார் அதன் விலைப் பிரிவில் சிறந்த பின் இருக்கை வசதியை வழங்குகிறது. இதில் பயணிகள் தாராளமாக கால் வைத்துக்கொள்ள இடமும், மென்மையான குஷினும் சொகுசான உணர்வைத் தருகின்றன. பின் இருக்கைகளை அதிகமாக சாய்த்தப்படி அமரும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரில் வழங்குகிறது.

10 lakh rupees cars with lounge-like rear seating

எர்டிகா காரின் பின் இருக்கைகள் பயணிகளின் கால் தொடைக்கு போதுமான குஷினை வழங்குவதோடு, பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வென்ட்களும் வழங்கப்படுகின்றன. எர்டிகாவின் சஸ்பென்ஷன், அதிக பயணிகளுடன் குடும்பப் பயணங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றதாக விளங்கும் எர்டிகா காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.8.80 லட்சம் ஆகும்.

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இது ஒரு காம்பாக்ட் செடான் கார் வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், வியக்கத்தக்க வகையில் உட்புறத்தில் அதிக இடவசதியை வழங்குகிறது. போதுமான அளவில் பயணிகள் கால் வைக்கும் இடமும், நன்கு குஷன் செய்யப்பட்ட இருக்கைகளும் இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த காரில் பின் இருக்கைகளின் சாய்வு கோணம் பயணிகளின் வசதியை மேம்படுத்துகிறது.

10 lakh rupees cars with lounge-like rear seating

உயர் ரக வேரியண்ட்களில் கப் ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் வசதியும் இந்த காரின் பின் இருக்கைகளில் உண்டு. நகர்ப்புறப் பயணங்களுக்காகவே இதன் சஸ்பென்ஷன் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பள்ளங்கள் மற்றும் கரடுமுரடான சாலைகளையும் திறம்பட சமாளித்து மென்மையான பயணத்தை வழங்குகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.7.41 லட்சம் ஆகும்.

மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz): இதன் அடிப்படை வேரியண்ட் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்கு சற்று அதிகமாக (சுமார் ரூ.10.37 லட்சம் எக்ஸ்-ஷோரூம்) இருந்தாலும், பின் இருக்கை பகுதியில் பயணிகள் கால் வைத்துக்கொள்ள அதிக இடவசதிக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது. இது அதிக விலையுள்ள சில லக்சரி செடான் கார்களுடன் போட்டியிடும் அளவுக்கு அதிக இடவசதியைக் கொண்டுள்ளது.

10 lakh rupees cars with lounge-like rear seating

மென்மையான சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் வசதியான, அகலமான பின் இருக்கைகள் போன்ற சிறப்பம்சங்களை கொண்டிருந்தாலும், சியாஸ் காரை புத்தம் புதியதாக தற்போதைக்கு வாங்க முடியாது. ஏனெனில், இந்த பிரீமியம் தரத்திலான செடான் காரின் விற்பனையை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே மாருதி சுஸுகி நிறுத்திவிட்டது. இருப்பினும்,யூஸ்டு-கார் மார்க்கெட்டில் பழைய சியாஸ் காரை ரூ.10 லட்சத்திற்குள் வாங்க முடிந்தால், அது சிறந்த சொகுசு அனுபவத்தை வழங்கும்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): திடமான கட்டமைப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையின் காரணமாக இந்த டாடா கார் தனித்து நிற்கிறது. 90-டிகிரிக்கு திறக்கும் கதவுகள், வாகனத்திற்குள் ஏறுவதையும் இறங்குவதையும் எளிதாக்குகின்றன. இது சில பயணிகளுக்கு ஒரு முக்கியமான அம்சமாகும். மேலும், இந்த காரின் பின் இருக்கை வரிசையில் கால் வைக்க அதிக இடமும், பின் இருக்கைகளில் இரு முனைகளில் அமரும் பயணிகளுக்கான சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்களும் உள்ளன.

10 lakh rupees cars with lounge-like rear seating

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய காலத்தில் கார் பயணங்கள் பல விதங்களில் சவுகரியமானதாக மாறிவிட்டன. ஆனால் கார் உருவாக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே சவுகரியத்துடன் பார்த்து, பார்த்து உருவாக்கப்பட்ட பாகம் என்றால், அது பின் இருக்கைகள் ஆகும். அத்தகைய பின் இருக்கைகள் இப்போது ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களிலேயே சிறப்பானதாக வழங்கப்படுகின்றன என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 11, 2025, 5:00 [IST]
English summary
Best cars with lounge like rear seating under 10 lakh rupees maruti suzuki ertiga and honda amaze
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X