10 லட்ச ரூபாய்க்குள் வாங்கும்போது காரில் இதை முக்கியமா நோட் பண்ணுங்க! சஸ்பென்ஷன் செட்-அப் தான் ரொம்ப முக்கியம்

எந்தவொரு காருக்கும் முக்கியமான பாகம், அதன் சஸ்பென்ஷன் (Suspension) ஆகும். விலையயர்ந்த கார்களில் மிகவும் பிரீமியம் தரத்திலான சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்படும் நிலையில், ரூ.10 லட்சத்திற்குள் விலை குறைவான கார்களில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு பரவலாக மக்பெர்சன் ஸ்ட்ரட் (MacPherson Strut) வழங்கப்படுகிறது. இன்னும் வேறு சில சஸ்பென்ஷன் செட்-அப்களும் விலை குறைவான கார்களில் வழங்கப்படுகின்றன என்றாலும், பரவலாக அதிக எண்ணிக்கையிலான கார்களில் வழங்கப்படுவது மக்பெர்சன் ஸ்ட்ரட் ஆகும்.

ஏனென்றால், மக்பெர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் செட்-அப் ஆனது குறைந்த செலவில் தயாரிக்கக் கூடியதாகவும், எந்தவொரு காரிலும் பொருத்தக்கூடிய அளவிற்கு காம்பெக்ட்டான வடிவிலும் உருவாக்கப்படுகிறது. அதேநேரம் மற்ற பிரீமியம் தரத்திலான சஸ்பென்ஷன் செட்-அப்பை போன்று நீண்ட நாட்களுக்கு நம்பகத்தன்மையை வழங்கும் மக்பெர்சன் ஸ்ட்ரட் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cars with macpherson strut front suspension

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக அல்ட்ராஸ் விளங்குகிறது. பிரீமியம் தரத்திலான கார் என சொன்னாலும், அல்ட்ராஸின் எக்ஸ்-ஷோரும் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.6.89 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

cars with macpherson strut front suspension

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்த கார் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ விளங்குகிறது. இந்த மஹிந்திரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் வரையில் உள்ளன.

cars with macpherson strut front suspension

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) ரக காராக நெக்ஸான் விளங்குகிறது. அதாவது, 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட நெக்ஸான் காரிலும் மக்பெர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது. நெக்ஸானின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.00 லட்சத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் வரையில் உள்ளன.

cars with macpherson strut front suspension

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக கிராண்ட் ஐ10 நியோஸ் விளங்குகிறது. ரூ.5.98 லட்சத்தில் இருந்து ரூ.8.62 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் இந்த ஹூண்டாய் கார் ஆனது முதல்முறையாக கார் ஓட்டி பழகுவதற்கு ஏற்ற காராக உள்ளது.

cars with macpherson strut front suspension

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று, ஸ்விஃப்ட் ஆகும். ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.64 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் காரின் சிறப்பே அதன் ஸ்டைலிஷான தோற்றம் ஆகும்.

cars with macpherson strut front suspension

ரெனால்ட் கைகர் (Renault Kiger): ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு ஓரளவுக்கு சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் கைகரும் ஒன்றாகும். நெக்ஸானை போன்று சப்-காம்பெக்ட் எஸ்யூவி ரக காரான கைகரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.30 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் உள்ளன. அதாவது, நெக்ஸானுக்கும் இதற்கும் விலையில் பெரிய வித்தியாசம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்பெர்சன் ஸ்ட்ரட் மிகவும் சொகுசான பயணத்தை வழங்கக்கூடியதாக இல்லையென்றாலும், எவ்வளவு சுமையை வேண்டுமாயினும் தாங்கக் கூடியதாக உள்ளதால் பெரும்பாலான கார் கம்பெனிகள் இதனை விரும்புகின்றன. இவ்வாறு பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் உடன் கார் வாங்க விரும்புகிறீர்கள் எனில், மேலே கூறப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 4, 2025, 22:00 [IST]
English summary
Best cars with macpherson strut front suspension under 10 lakhs tata altroz mahindra xuv3xo
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X