காரில் இருப்பவங்களுக்கு மட்டுமல்ல, ரோட்டில் செல்பவர்களுக்கும் இந்த கார்கள் பெஸ்ட்! 10 லட்ச ரூபாய்க்குள் விலை
இந்தியாவில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் சிறந்த பாதசாரிகள் பாதுகாப்பு வசதியுடன் கூடிய கார்களைப் பற்றி இங்கு காணலாம். இவை, குளோபல் NCAP (GNCAP) மற்றும்/அல்லது பாரத் NCAP (BNCAP) ஆகிய மோதல் சோதனைகளில் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, பாதசாரிகள் பாதுகாப்பு உட்பட ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளன.

டாடா பன்ச் (Tata Punch): GNCAP/ BNCAP சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த காரின் உறுதியான சேசிஸ், இரட்டை ஏர்பேக்குகள், ABS உடன் EBD மற்றும் ISOFIX மவுண்டுகள் உள்ளிட்டவை இந்த காருக்கு சிறந்த கிராஷ் டெஸ்ட் ரேட்டிங்கை பெற்று தந்துள்ளன. பாதசாரிகள் மோதலைக் குறைக்கும் வகையில் இந்த காரின் உடல் அமைப்பு வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.13 லட்சம் முதல் ரூ.9.80 லட்சம் வரை உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர GNCAP/ BNCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த காரில் வலிமையான கட்டுமானத் தரம், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், இரட்டை ஏர்பேக்குகள் (டாப் வேரியண்ட்களில் ஆறு), எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். மோதலை உறிஞ்சும் வகையில் இந்த காரின் தோற்றமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை தோராயமாக ரூ.7.28 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை உள்ளன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்த டாடா எஸ்யூவி காரும், GNCAP/BNCAP சோதனைகளில் பெரியவர்களின் பாதுகாப்பிற்காக 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் அதிக நிலைத்தன்மை கொண்ட அமைப்பு, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), இரட்டை ஏர்பேக்குகள், டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை சிறப்பம்சங்களாக உள்ளன. பாதசாரிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க இது சோதிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7.32 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை உள்ளது.

நிசான் மேக்னைட் (Nissan Magnite): GNCAP சோதனைகளில் 4 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த காரில் மேம்படுத்தப்பட்ட பாதசாரிகள் பாதுகாப்பு அம்சங்கள், இரட்டை ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் (டாப் வேரியண்ட்களில்), ABS உடன் EBD ஆகியவை உள்ளன. இந்த காரின் விலை சுமார் ரூ.5.62 லட்சம் முதல் ரூ.9.90 லட்சம் வரை தற்சமயம் உள்ளது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): GNCAP-இல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டை இந்த கார் பெற்றுள்ளது. உறுதியான ALFA (Agile Light Flexible Advanced) கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில், இரட்டை ஏர்பேக்குகள் (அப்டேட் செய்யப்பட்ட வேரியண்ட்களில் ஆறு), ABS உடன் EBD மற்றும் வலுவான உடல் கட்டமைப்பு உள்ளது. இதன் விலை தோராயமாக ரூ.6.30 லட்சம் முதல் ரூ.10.00 லட்சம் வரை உள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): BNCAP-இல் 4 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த மாருதி செடான் கார் சமீபத்தில்தான் மேம்படுத்தப்பட்டு, ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளன. இது பாதசாரிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் உட்பட BNCAP பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ளது. இதன் விலை ரூ.6.26 லட்சம் முதல் ரூ.9.31 லட்சம் வரை உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோதல் சோதனைகளில் டம்மிகளை வைத்து, விபத்துகளின் போது சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு எந்த அளவிற்கு கார் பாதுகாப்பு கொடுக்கிறது என்பது சோதிக்கப்படுகிறது. அதை வைத்து பார்க்கும்போது, ரூ.10 லட்சத்திற்குள் மேலே கூறப்பட்ட கார்கள் பாதசாரிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications









