ரூ.10 லட்சத்தில் கார் வாங்கும்போது இதை பார்த்து வாங்குவது அவசியம்! லாங் ட்ரிப்புக்கு இது இல்லனா ரொம்ப போர்!

காரில் ஜாலியாக பாட்டுக் கேட்டப்படி பயணம் செய்ய யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதுவும் காரின் ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் மூடி விட்டு, ஏசியை போட்டுக் கொண்டு பாடல்களை கேட்பது என்பதே தனி சுகம். இதனாலேயே கார் கம்பெனிகளும் முடிந்தவரையில் தங்களது கார்களில் பிரீமியம் தரத்திலான சவுண்ட் சிஸ்டத்தை வழங்க முயற்சிக்கின்றன. அந்த வகையில், ரூ.10 லட்சத்திற்குள் சிறப்பான சவுண்ட் சிஸ்டத்துடன் கிடைக்கும் சிறந்த கார்களை பற்றி இனி பார்க்கலாம்.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக இருப்பினும் ஐ20 காரின் எக்ஸ்-ஷோரும் விலைகள் (Ex-showroom Prices) ரூ.6- 7 லட்சத்தில் இருந்து உள்ளன. இத்தகைய தரமான கொரியன்-ஸ்டைல் ஹேட்ச்பேக் காரில் போஸ் (Bose) நிறுவனத்தின் 7-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

best cars with premium sound system

ஆனால், இந்த சவுண்ட் சிஸ்டத்தை பெறுவதற்கு ஐ20 காரின் அஸ்டா வேரியண்ட்டை வாங்க வேண்டும். ஐ20 அஸ்டா வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.9.30 லட்சம் என்கிற அளவில் உள்ளது. பிரீமியம் தரத்திலான போஸ் சவுண்ட் சிஸ்டத்தை பெறுவது மட்டுமின்றி, ஐ20 காரில் சிறப்பான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்படுகிறது.

கியா சொனெட் (Kia Sonet): ஹூண்டாய் ஐ20 காரை போன்று கொரியன்-ஸ்டைல் கார், கியா சொனெட் ஆகும். ஆனால், சொனெட் ஆனது 4 மீட்டர் நீளம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இந்த காரில் 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்விட்டர்களை கொண்ட பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

best cars with premium sound system

கியா சொனெட் காரின் எச்டிகே (HTK) வேரியண்ட்டில் இருந்து இத்தகைய பிரீமியம் தரத்திலான சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. சொனெட் எச்டிகே வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.02 லட்சத்தில் இருந்து உள்ளன. எஸ்யூவி காரில் பாட்டு கேட்டப்படி பயணம் செய்வதற்கு இன்னும் சூப்பராக இருக்கும் என்பது மட்டுமின்றி, சொனெட் காரில் இன்னும் நிறைய மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகளை கியா வழங்குகிறது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): ஹூண்டாய் ஐ20 காரை போன்று பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் ரக காராக அல்ட்ராஸ் விளங்குகிறது. ஆனால், ஐ20 காரை காட்டிலும் ஒருபடி மேலாக 8-ஸ்பீக்கர்கள் உடன் ஹர்மன் (Harman) சவுண்ட் சிஸ்டத்தை அல்ட்ராஸ் கார் பெறுகிறது. அல்ட்ராஸ் ஆனது ஸ்டைலிஷான ஹேட்ச்பேக் ரக கார் ஆகும்.

best cars with premium sound system

அதற்கேற்ப, பிரீமியம் தரத்திலான ஹர்மன் சவுண்ட் சிஸ்டம் இந்த காரில் பொருத்தப் படுகிறது. அல்ட்ராஸ் காரின் எக்ஸ்டி (XT) வேரியண்ட்டில் இருந்து ஹர்மன் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அல்ட்ராஸ் எக்ஸ்டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): ஐ20 மற்றும் அல்ட்ராஸ் கார்களுக்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார், பலேனோ ஆகும். பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார் என்பதற்கு இணங்க, அர்கமைஸ் (Arkamys) நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்விட்டர்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

best cars with premium sound system

பலேனோ ஆனது அதன் சிறப்பான மைலேஜ் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையினால் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இத்தகைய காரின் ஆல்பா வேரியண்ட்டில் இருந்து அர்கமைஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. பலேனோ ஆல்பா வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.38 லட்சத்தில் இருந்து உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் சவுண்ட் சிஸ்டம் ஆனது பல்வேறு விதமான வகைகளில் வழங்கப்படுகின்றன. அதாவது, அவற்றை வெவ்வேறு நிறுவனங்கள் உருவாக்கி கார் நிறுவனங்களிடம் வழங்குகின்றன. சொகுசு கார்களில் இதனை காட்டிலும் லக்சரியான சவுண்ட் சிஸ்டங்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ரூ.10 லட்சத்திற்குள் காரை வாங்கும்போது மேலே குறிப்பிடப்பட்ட சவுண்ட் சிஸ்டங்கள் சிறந்தவை என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 17, 2025, 5:00 [IST]
English summary
Best cars with premium audio system in india under 10 lakhs hyundai i20 kia sonet
மேலும்... #car audio system #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X