எந்த காரிலும் பார்த்தவுடனே நம்மை உடனே கவர்வது இதுதான்! ரூ.10 லட்சத்தில் கார் வாங்கினாலும் பார்த்து வாங்குங்க!
பட்ஜெட் விலையில் உயர்தர உட்புற அமைப்பைக் கொண்ட கார்களைத் தேடுபவர்களுக்கு, ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலான பிரீமியம் ஹேட்ச்பேக்குகள் (Hatchbacks) மற்றும் மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) கார்கள் சிறந்த தேர்வுகளாகும். இந்த வகை கார்கள், குறிப்பாக அவற்றின் உயர் ரக வேரியண்ட்களில் சிறந்த தரம், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வசதியான இருக்கைகளுடன் கூடிய கேபினை வழங்குகின்றன. அவ்வாறான ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த உட்புற அமைப்பைக் கொண்ட சில கார்கள்...

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் செக்மென்டில் உட்புற அமைப்பிற்கு இது ஒரு பெஞ்ச்மார்க் எனக் கருதப்படுகிறது. இதன் உயர்மட்ட வேரியண்ட்களில் மென்மையான டச் மெட்டீரியல்கள் உடன் கூடிய நவீன டூயல்-டோன் டேஷ்போர்டு உள்ளது, இது ஒரு அதிநவீன உணர்வை அளிக்கிறது. இது சிறந்த இருக்கை வசதியையும், தொடைகளுக்குத் தேவையான சப்போர்ட்டையும் வழங்குகிறது. அல்ட்ராஸ் காரின் டார்க் எடிஷன், முழுவதுமாக கருப்பு நிறத்தில் அமைந்த ஒரு ஆடம்பரமான கேபினைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இது ஒரு தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும். மேலும், இது அதன் செக்மென்டில் உட்புற தரத்திற்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் உயர் ரக வேரியண்ட்களில் செமி-லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய நவீன டூயல்-டோன் கேபின் வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்களில் கேபினுக்குள் தரைகளிலும் விளக்குகள் மற்றும் கேபின் தோற்றத்தை மாற்ற பல்வேறு உட்புற கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): இது ஒரு சிட்டி ஹேட்ச்பேக் கார் ஆகும், இதில் ஆச்சரியமளிக்கும் வகையிலான பிரீமியம் தரத்திலான, நன்கு வடிவமைக்கப்பட்ட கேபின் கொடுக்கப்படுகிரது. இதன் உட்புறம் நடைமுறைக்கு ஏற்றது மற்றும் விசாலமானது. மேலும், இதன் டேஷ்போர்டு வடிவமைப்பு கவர்ச்சிகரமானதாகவும், நேர்த்தியானதாகவும் உள்ளது. டேஷ்போர்டில் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் ஆனது டேஷ்போர்டுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் கைகர் (2025 ஃபேஸ்லிஃப்ட்) (Renault Kiger): இது ஒரு காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும். இது குறிப்பிடத்தக்க வகையில், அதன் குறைவான விலைக்கு சம்பந்தமே இல்லாத மேம்படுத்தப்பட்ட மற்றும் அதிக பிரீமியம் தரத்திலான கேபினைக் கொண்டுள்ளது. கைகரின் 2025 மாடலில் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் உயர் ரக வேரியண்ட்களில் இடம்பெறுகின்றன.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): மாருதி சுஸுகியின் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் அதன் உயர் ரக வேரியண்ட்களில் ஒரு சுத்திகரிக்கப்பட்ட கேபின் அனுபவத்தை வழங்குகிறது. அதற்கேற்ப, சிறப்பான 9 இன்ச் ஸ்மார்ட் பிளே புரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதன் டேஷ்போர்டில் முக்கிய அம்சமாக வழங்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவில் பாதுகாப்பான காம்பாக்ட் எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்று ஆகும். இதன் உட்புற கேபின் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. சில வேரியண்ட்களில் நவீன, மூன்று-வண்ண டேஷ்போர்டு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம், நெக்ஸானின் கேபின் அதிநவீன தோற்றத்தை அளிக்கிறது. மேலும், இந்த காரில் வயர்லெஸ் இணைப்புடன் கூடிய ஒரு பெரிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாங்கும் காரின் வெளிப்புறத்தை காட்டிலும், தினந்தோறும் நாம் அதிகமாக பார்ப்பது காரின் உட்புறத்தை தான். ஆதலால், காரின் உட்புற கேபின் தான் பயணத்தின் போது நமது மனநிலையை தீர்மானிக்கிறது. இத்தகைய முக்கியமான அம்சத்தை ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட மேலே குறிப்பிடப்பட்ட கார்களிலும் சிறப்பானதாக பெறலாம் என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









