10 லட்ச ரூபா காரில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாம்னு இப்போ தான் தெரியுது! இத்தனை கார்கள் கிடைக்குதா?

சமீபத்திய காலத்தில், பல நவீன கார்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இவை செயற்கை தோல் (Leatherette Upholstery) இருக்கை உறைகள் மற்றும் உயர்தர உள் அலங்காரங்களை கொண்டுள்ளன. ரூ.10 லட்சம் விலைக்குள் கிடைக்கும் கார்களில் உண்மையான தோல் அரியது என்றாலும், கீழ்காணும் உயர்தர கார்கள் மற்றும் சிறப்புப் பதிப்பு கார்கள் வழக்கமான துணி இருக்கைகளை விட ஆடம்பரமான உணர்வைத் தருகின்றன. செயற்கை தோல் இருக்கை உறைகள் மற்றும் கேபின் அலங்கரிப்புகள் உடன் வரும் சில சிறந்த கார்கள் இங்கே...

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): ஹூண்டாய் அவ்ரா ஒரு கச்சிதமான செடான் (Sedan) ரக கார் ஆகும். இதன் உயர்தர வேரியண்ட்கள், மேம்பட்ட & அம்சங்கள் நிறைந்த உள் அலங்காரத்தை வழங்குகின்றன. இதன் கேபின் கருப்பு மற்றும் சாம்பல் நிற கலவையில் வருகிறது. டேஷ்போர்டு மற்றும் கியர் லிவரை சுற்றிலும் பழுப்பு நிற சாடின் பினிஷிங் இதனை மேலும் அழகாக்குகிறது.

best 10 lakh rupee cars with premium leatherette upholstery

வழக்கமான இருக்கைகள் துணியால் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்டீயரிங் போன்ற அதிகம் பயன்படுத்தப்படும் பாகங்கள் உயர்தர செயற்கை தோல் கவரால் மூடப்பட்டு உள்ளன. இது அவ்ரா காரில் ஒரு ஆடம்பரமான அனுபவத்தை அளிக்கிறது. இருக்கைகள் மிதமான குஷனிங் உடன் நீண்ட பயணங்களுக்கும் ஏற்ற வசதியான சாய்வு கோணத்தைக் கொண்டுள்ளன.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடா அல்ட்ராஸ் ஒரு ஹேட்ச்பேக் ரக காராக இருந்தாலும், பயன்படுத்தும் போது இது உயர்தர உணர்வை அளிக்கிறது. இதன் உறுதியான கட்டுமானம் மிகவும் பாராட்டப்படுகிறது. வேரியண்ட்டிற்கு ஏற்ப பல உள் அலங்கார கலர் ஆப்ஷன்கள் இதில் கிடைக்கின்றன. உதாரணமாக, அல்ட்ராஸ் ரேசர் பதிப்பில், ஆரஞ்சு வண்ணங்களுடன் கூடிய முழு கருப்பு நிற உட்புற கேபின் ஆனது செயற்கை தோல் இருக்கைகள் உடன் கிடைக்கிறது.

best 10 lakh rupee cars with premium leatherette upholstery

இந்த காரின் உயர்தர வேரியண்ட்களில், பெரிய 10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒற்றை-பலகை எலக்ட்ரிக் சன்ரூஃப் (Electric Sunroof) மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் போன்ற அம்சங்கள் அடங்குகின்றன. குறிப்பாக ரேசர் பதிப்பு, இருக்கைகள் உட்பட முழுமையான செயற்கை தோல் இருக்கை உறைகளைக் கொண்டுள்ளது. இது காருக்குள் அமர்பவர்களுக்கு பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது.

கியா சொனெட் (Kia Sonet): கியா சொனெட்டின் சில உயர்தர வேரியண்ட்கள் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டை மிஞ்சினாலும், சில வேரியண்ட்கள் இந்த விலைக்குள் உயர்தர உள் அலங்காரத்தை வழங்குகின்றன. சொனெட் காரின் கேபினில் முழுவதும் உயர்தர பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, இந்த காரின் இருக்கைகள் செயற்கை தோலால் மூடப்பட்டு வழங்கப்படுகின்றன.

best 10 lakh rupee cars with premium leatherette upholstery

சொனெட் எக்ஸ்-லைன் (X-Line) வேரியண்ட்டில் தனித்துவமான தோற்றத்திற்காக கருமையான செயற்கை தோல் இருக்கைகள் இடம்பெறுகின்றன. 10 லட்ச ரூபாய் விலைக்கு, 10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் உயர்தர வேரியண்ட்களில் ஒற்றை-பலகை எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற பல அம்சங்கள் உடன் சொனெட் கிடைக்கிறது.

நிசான் மேக்னைட் (Nissan Magnite): நிசான் மேக்னைட் ஒரு பட்ஜெட்டுக்கு ஏற்ற காம்பாக்ட் எஸ்யூவி (Compact-SUV) ரக கார் ஆகும். இதன் கேபின் அலங்கரிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதன் உள் கேபின் அலங்காரம் ஆனது கருப்பு மற்றும் பழுப்பு என்கிற இரட்டை வண்ண கலவையில், பளிச்சிடும் தையல்கள் உடன் வடிவமைக்கப்படுகிறது.

best 10 lakh rupee cars with premium leatherette upholstery

ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் கியர் லிவரில் செயற்கை தோல் பினிஷிங் கொடுக்கப்படுகிறது. இருக்கைகள் நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறு நல்ல குஷனிங்கை வழங்குகின்றன. இந்த நிசான் காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 9 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சில வேரியண்ட்களில் வயர்லெஸ் சார்ஜிங் பேட் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.

ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq): சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில் சமீபத்தில் புதிதாக அடியெடுத்து வைத்த ஸ்கோடா கைலாக், அதன் உயர்தர உள் அலங்காரத்திற்காகப் கஸ்டமர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இது 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஒற்றை-பலகை எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் போன்ற பல பிரீமியம் அம்சங்களை வழங்குகிறது.

best 10 lakh rupee cars with premium leatherette upholstery

கைலாக் காரின் உட்புறத்தில் இருக்கைகளில் செயற்கை தோலுடன் துணியும் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. இது கேபினுக்கு மேலும் பிரீமியம் உணர்வை சேர்க்கிறது. சில வேரியண்ட்களில் முன் இருக்கைகள் எலக்ட்ரிக் பவர் மூலம் சரிசெய்யக்கூடியவை மற்றும் காற்றோட்ட வசதியுடன் வருகின்றன. இந்த விலை வரம்பில் இது ஒரு கவனிக்கத்தக்க கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் வெளிப்பக்கத்தை விட காரை வாங்குபவர்கள் அதிகம் கவனிப்பது காரின் உட்புறத்தையே ஆகும். காரின் உட்புறம் தான் பயணிக்கும் பயணிகளின் மனநிலையை செட் செய்கிறது. இதனால், அதிக விலையிலான கார்களை வாங்க முடியாவிடினும் ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த கேபின் அலங்கரிப்பு உடன் வரும் மேற்கூறப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 1, 2025, 5:00 [IST]
English summary
Best cars with premium leatherette upholstery under 10 lakhs hyundai aura and tata altroz
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X