காரின் அழகிற்கு மட்டுமல்ல... பாதுகாப்புக்கும் ரொம்ப முக்கியம்! 10 லட்ச ரூபாயில் கார் வாங்கினாலும் கிடைக்குது!!
2025ஆம் ஆண்டில், இந்தியாவில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் பல பிரபலமான கார்கள் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உடன் கிடைக்கின்றன. பெரும்பாலான கார்களில் ஹாலோஜன் புரொஜெக்டர்கள் ஆரம்பநிலை வேரியண்டுகளில் இருந்தே வழங்கப்படும் நிலையில், LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் பொதுவாக டாப்-ஸ்பெக் வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சில கார்களில் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் இருந்தே புரோஜெக்டர் ஹெட்லைட் வழங்கப்படுகிறது. அந்த கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை ஒரு ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கும் மிகவும் மலிவான ஹேட்ச்பேக் (Hatchback) கார் இது ஆகும். இதன் டெல்டா வேரியண்ட்டில் (தோராயமாக ரூ.6.80 லட்சம் முதல்) இருந்து இந்த ஹெட்லைட் அம்சம் கிடைக்கிறது.

டொயோட்டா கிளான்சா (Toyota Glanza): சுஸுகி-டொயோட்டா கூட்டணியில் மேலே கண்ட பலேனோவின் சகோதர மாடலான கிளான்சா, அதன் என்ட்ரி-லெவல் 'ஜி' (G) வேரியண்ட் (வெறும் ரூ.6.39 லட்சத்தில் இருந்து) உட்பட அனைத்து வேரியண்ட்களிலும் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்குகிறது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): மாருதி சுஸுகியின் பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட்டின் டாப்-ஸ்பெக் இசட்.எக்ஸ்.ஐ+ (ZXI+) வேரியண்டில் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்டாக இருப்பினும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.8.20 லட்சம் முதல் தொடங்குகிறது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): மாருதியின் விலை குறைவான எஸ்யூவி காரான இதன் அடிப்படை எல்.எக்ஸ்.ஐ (LXi) வேரியண்டில் (சுமார் ரூ.8.26 லட்சம்) இருந்தே பை-ஹலோஜன் (Bi-halogen) புரொஜெக்டர் ஹெட்லைட்களை ஸ்டாண்டர்டாக வழங்கும் குறிப்பிடத்தக்க கார் இது ஆகும். இன்னும் சொல்லப்போனால், பிரெஸ்ஸாவின் டாப் வேரியண்ட்களில் இரட்டை LED அமைப்பு கிடைக்கிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இந்த மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) கார் அதன் எஸ்.எக்ஸ் (SX) போன்ற நடுத்தர முதல் உயர் வேரியண்ட்களில் சதுர வடிவில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களை வழங்குகிறது. இத்தகைய ஹெட்லேம்ப்கள் உடன் கிடைக்கும் இந்த காரின் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8 லட்சம் முதல் துவங்குகின்றன.

டாடா பன்ச் (Tata Punch): மேலே கண்ட ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் இந்த டாடா காரில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உயர் 'கிரியேட்டிவ்' (Creative) வேரியண்ட்களில் கிடைக்கின்றன. அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தோராயமாக ரூ.8.85 லட்சம் முதல் தொடங்குகின்றன.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): மேலே கண்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்சன் தான், டிசையர் ஆகும். இதன் டாப் இசட்.எக்ஸ்.ஐ+ (ZXI+) வேரியண்டில் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் இடம்பெறுகின்றன. டிசையரின் இந்த வேரியண்ட்டின் விலை சுமார் ரூ.8.52 லட்சம் முதல் உள்ளது.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): டிசையர் காருக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் செடான் ரக கார், அவ்ரா ஆகும். ஆங்குலர் & பின்னோக்கி வளைக்கப்பட்ட புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உடன், அவ்ரா காரின் எஸ்.எக்ஸ்+ (SX+) அல்லது எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) (SX(O)) போன்ற உயர் ரக வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறந்த இரவுநேரப் பார்வைத்திறனை விரும்புபவர்களுக்கு, LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் பொதுவாக ஹலோஜன் ஹெட்லைட்களைக் காட்டிலும் பிரகாசமான, வெள்ளை நிற ஒளியை வழங்குகின்றன. இவை வழக்கமான ஹலோஜன் ஹெட்லைட்களை காட்டிலும் நீண்ட தொலைவிற்கு ஒளியை வழங்குவதால், LED புரோஜெக்டர் ஹெட்லைட்களை கொண்ட கார்கள் பாதுகாப்பானவைகளாக விளங்குகின்றன. அத்தகைய கார்களை ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம் என்பது சிறப்பான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









