கார் வாங்கும்போது பலர் கவனிக்காத விஷயம்... பாதுகாப்பில் இருந்து மைலேஜ் வரை இதுதான் அடிப்படை!!

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் ரூ.10 லட்சம் விலை கொண்ட பெரும்பாலான கார்கள் 'ரேடியல் டியூப்லெஸ்' (Radial Tubeless) டயர்களுடன் வருகின்றன. டயர் தயாரிப்புத் துறையில், ரேடியல் ட்யூப்லெஸ் டயர்கள் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளன. ரேடியல் என்பது டயரின் உள் கட்டுமானத்தைக் குறிக்கிறது. இது வழக்கமான டயர்களின் மெல்லிய குறுக்குவெட்டு இரப்பர்களில் இருந்து வேறுபடுகிறது.

ட்யூப்லெஸ் என்ற வார்த்தை, இந்த டயர்களுக்குள் தனி ரப்பர் ட்யூப் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது. டயரும், அதன் விளிம்பும் ஒன்றிணைந்து காற்று புகாத ஒரு அமைப்பை உருவாக்குகின்றன. இந்த வடிவமைப்பு காற்று கசிவைத் தடுக்கிறது. மேலும், இது பஞ்சர் ஏற்படும்போது, காற்றை உடனடியாக இழப்பதைத் தாமதப்படுத்துகிறது. இத்தகைய டயர்கள் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

10 lakh rupee cars with radial tubeless tyres

டாடா பன்ச் (Tata Punch): வலிமையான வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு மதிப்பீட்டிற்காக அறியப்படும் இந்த டாடா கார், இந்தியாவின் மிகவும் பிரபலமான மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும். ரூ.5.50 லட்சம் - ரூ.9.30 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த காரில் 1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. சிஎன்ஜி ஆப்ஷனிலும் பன்ச் கிடைக்கிறது.

10 lakh rupee cars with radial tubeless tyres

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): பல ஆண்டுகளாக இந்தியர்களின் விருப்பமான ஹேட்ச்பேக் காராக விளங்கும் ஸ்விஃப்ட், அதன் சுறுசுறுப்பான செயல்திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளுக்காகப் புகழ்பெற்றது. ரூ.5.79 லட்சம் - ரூ.8.80 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் இந்த மாருதி சுஸுகி காரில் 1.2-லிட்டர் இசட்-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

10 lakh rupee cars with radial tubeless tyres

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): பிரீமியம் ஹேட்ச்பேக் காரான இது, விசாலமான மற்றும் அம்சங்கள் நிறைந்த உட்புறத்தை, மலிவான விலையில் வழங்குகிறது. ரூ.5.99 லட்சம் - ரூ.9.10 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் பலேனோ காரில் 1.2-லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. விசாலமான உட்புறம், அதிக பிரீமியம் அம்சங்கள் மற்றும் அதிக எரிபொருள் சிக்கனம் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

10 lakh rupee cars with radial tubeless tyres

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸ், அதன் வலிமையான கட்டமைப்பின் தரம் மற்றும் பாதுகாப்பிற்காகப் பாராட்டப்படுகிறது. ரூ.6.30 லட்சம் - ரூ.10.51 லட்சத்தில் கிடைக்கும் இந்த கார் 1.2-லிட்டர் பெட்ரோல், 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமன்றி, சிஎன்ஜி-யிலும் கிடைக்கிறது.

10 lakh rupee cars with radial tubeless tyres

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): கிராண்ட் ஐ10 நியோஸ் அதன் ஸ்டைலான வடிவமைப்பு, வசதியான உட்புறம் மற்றும் பல நவீன அம்சங்களுக்காக அறியப்படும் ஒரு சிறந்த நகர்ப்புற கார் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.47 லட்சம் - ரூ.7.92 லட்சம் அளவில் தற்சமயம் உள்ளது. இந்த விலை குறைவான ஹூண்டாய் காரில் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே, சிஎன்ஜி ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது.

10 lakh rupee cars with radial tubeless tyres

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): இந்தியாவின் மிகவும் பிரபலமான செடான் கார் இது ஆகும். ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக, அதனை காட்டிலும் அதிக பூட் பகுதியை வழங்குகிறது. ரூ.6.26 லட்சம் - ரூ.9.32 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் டிசையர் காரில் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

10 lakh rupee cars with radial tubeless tyres

நிசான் மேக்னைட் (Nissan Magnite): மேக்னைட் ஒரு மலிவு விலையுள்ள காம்பாக்ட் எஸ்யூவி கார் ஆகும். இது ஒரு ஸ்போர்டியான சாலை தோற்றம் மற்றும் நல்ல மதிப்புள்ள வசதிகளை வழங்குகிறது. ரூ.5.62 லட்சம் - ரூ.10.76 லட்சம் வரையிலான விலைகளில் 1.0-லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் அல்லது 1.0-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் இந்த காரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் கூடுதல் பாதுகாப்பாக அமைவதுடன், வாகன ஓட்டிகளுக்கு மேம்பட்ட செயல்திறனையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன. மேற்கூறப்பட்ட கார்கள் அனைத்திலும் ரேடியல் டயர்கள் பொருத்தப்படுகின்றன என்றாலும், காரின் வகை, அதன் அம்சங்கள் உள்ளிட்டவற்றை பொறுத்து உங்களது பட்ஜெட் அமையும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 21, 2025, 5:00 [IST]
English summary
Best cars with radial tubeless tyres priced under 10 lakh rupees tata punch and maruti suzuki swift
மேலும்... #tyres #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X