ஃபேக்ட்ரியில் கார் உருவாகும்போதே இதையும் பொருத்தி விடுகின்றனர்! ரூ.10 லட்சத்திற்குள் வாங்கிடலாம்...

காரில் முன் இருக்கையில் அமர்பவர்களுக்கு எந்த அளவிற்கு சவுகரியங்கள் வழங்கப்படுகிறதோ அதே அளவிலான சவுகரியங்கள் பின் இருக்கை வரிசையில் அமர்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றே இன்றைய காலத்தில் கார் வாங்குபவர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில், முன் வரிசையில் வழங்கப்படும் ஏசி வசதி ஆனது பின் இருக்கை வரிசைக்கும் வழங்கப்பட்டால் நன்றாக இருக்குமே என பலரும் விரும்புகின்றனர்.

ஒரு சமயத்தில் இவ்வாறு விரும்புபவர்கள் தங்களது கார்களுக்கு என்றே தனியாக பின் இருக்கை வரிசைக்கு ஏசியை வாங்கி பிரத்யேகமாக பொருத்திவந்த நிலையில், இப்போது எல்லாம் விலை குறைவான கார்களில் கூட பின் இருக்கை வரிசை பயணிகளுக்கு ஏசி வசதியை கார் கம்பெனிகளே தங்களது தொழிற்சாலையில் பொருத்தி வழங்குகின்றன. அவ்வாறு, பின் வரிசை இருக்கை பயணிகளுக்கும் ஏசி வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி இனி பார்க்கலாம்.

cars with rear ac vents priced under 10 lakhs

ஹூண்டாய் கார்கள் (Hyundai Cars): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து ரூ.10 லட்சத்திற்குள் நான்கு கார்களில் பின் வரிசை இருக்கை பயணிகளுக்கும் என்று பிரத்யேகமாக ஏசி வசதி வழங்கப்படுகிறது. அந்த நான்கு ஹூண்டாய் கார்களாவன, கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS), அவ்ரா (Aura), எக்ஸ்டர் (Exter) மற்றும் ஐ20 (i20) ஆகும்.

இதில், கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் மக்னா (Magna) வேரியண்ட்டில் இருந்தும், அவ்ரா காரில் எஸ் (S) வேரியண்ட்டில் இருந்தும், எக்ஸ்டர் காரில் எஸ் வேரியண்ட்டில் இருந்தும், ஐ20 காரில் மக்னா வேரியண்ட்டில் இருந்தும் பின் வரிசை இருக்கையில் அமரும் பயணிகளுக்கு ஏசி வசதி வழங்கப்படுகிறது.

cars with rear ac vents priced under 10 lakhs

மாருதி சுஸுகி கார்கள் (Maruti Suzuki Cars): மாருதி சுஸுகி கார்கள் அவற்றின் குறைவான விலையினாலும், அதிகப்படியான மைலேஜினாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. அதேநேரம் சில மாருதி சுஸுகி கார்களில் அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ரியர் ஏசி வெண்ட்ஸ் (Rear AC Vents)-உம் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட சில கார்களில் வழங்கப்படுகிறது.

ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட அந்த சில மாருதி கார்கள், டிசைர் (Dzire) மற்றும் பலேனோ (Baleno) ஆகும். இதில், டிசைர் காரில் வி.எக்ஸ்.ஐ (VXi) வேரியண்ட்டில் இருந்தும், பலேனோ காரில் ஜெட்டா (Zeta) வேரியண்ட்டில் இருந்தும் பின் வரிசை இருக்கை பயணிகளுக்கு ஏசி வசதி வழங்கப்படுகிறது.

cars with rear ac vents priced under 10 lakhs

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தின் லேட்டஸ்ட் எஸ்யூவி (SUV) ரக காராக விற்பனையில் கலக்கிக் கொண்டிருக்கும் கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அப்கிரேட் வெர்சனாக மஹிந்திராவின் லேட்டஸ்ட் டிசைனில் உருவாக்கப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் தோற்றத்திற்காக இந்த காரை பலரும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் விலை குறைவான எம்.எக்ஸ்1 (MX1) வேரியண்ட்டில் இருந்து பின் வரிசை இருக்கை பயணிகளுக்கும் ஏசி வசதி ஆனது வழங்கப்படுகிறது. எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் எம்.எக்ஸ்1 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, டாடா பஞ்ச் (Tata Punch), டாடா நெக்ஸான் (Tata Nexon) உள்ளிட்ட பிரபலமான கார்களிலும் ரியர் ஏசி வெண்ட்ஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும், இவற்றை காட்டிலும் மேலே குறிப்பிடப்பட்ட கார்கள் பிரபலமானவை ஆக இருப்பதால், அவற்றை இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். ஏற்கனவே கூறியதுபோல், ரியர் ஏசி வெண்ட்ஸை சிலர் இப்போதும் ஆஃப்டர்-மார்க்கெட்டில் வாங்கி தங்களது காரில் பொருத்திக் கொள்கின்றனர். கார் நிறுவனமே தொழிற்சாலையில் ரியர் ஏசி வெண்ட்ஸை பொருத்தி வழங்கும்போது எதற்காக அந்த ஆஃப்டர்-மார்க்கெட் பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும்...?

More from DriveSpark

Article Published On: Tuesday, August 26, 2025, 5:00 [IST]
English summary
Best cars with rear ac vents in india under 10 lakhs hyundai and maruti suzuki cars
மேலும்... #air conditioner #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X