நம்ம ஊருக்கு தேவை இல்லைனு நிறைய பேர் சொல்வாங்க... 10 லட்ச ரூபா கார்களில் கூட கிடைக்கும்போது எதுக்கு விடனும்?
டிஃபாகர் (Defogger) ஆனது அதன் பெயருக்கேற்ப, ஆங்கிலத்தில் ஃபாக் எனப்படும் பனியை அகற்றுவதாகும். அதாவது, காரின் ஜன்னல் கண்ணாடிகளில் பனி படிவதை தடுப்பதுதான் டிஃபாகரின் வேலை ஆகும். குறிப்பாக, காரின் பின்பக்க விண்ட்ஷீல்டில் பனி படிவதை தடுப்பதற்கு தான் டிஃபாகரின் தேவை அவசியமானதாக இருக்கும். ஏனெனில், முன்பக்க விண்ட்ஷீல்டில் படியும் பனியை எளிதாக வைபர் மூலம் அகற்றிவிடலாம்.
இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் கார்களின் நடுத்தர மற்றும் டாப் வேரியண்ட்களில் பின்புற விண்ட்ஷீல்டிற்கான டிஃபாகர் ஒரு நிலையான அம்சமாக வழங்கப்படுகிறது. டாடா பன்ச், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், நிசான் மேக்னைட் ஆகியவை இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. பின்புற டிஃபாகர் வசதியுடன், ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் இந்த பரிந்துரைக்கப்பட்ட கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா பன்ச் (Tata Punch): டாடா பன்ச் ஒரு மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) கார் ஆகும். இதன் 5-நட்சத்திர குளோபல் என்சிஏபி (Global NCAP) பாதுகாப்பு மதிப்பீடும், உறுதியான கட்டமைப்பும் பாராட்டப்படக் கூடியவை ஆக உள்ளது. பின்புற டிஃபாகர் வசதியுடன் கிடைக்கக் கூடிய இந்த காரின் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.6.20 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): ஸ்விஃப்ட் ஒரு பிரபலமான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும். இது அதன் சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பகத்தன்மைக்காக மார்க்கெட்டில் பிரபலமானதாக உள்ளது. பின்புற டிஃபாகர் உடன் கூடிய வேரியண்ட்களின் விலைகள் ரூ.7.53 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

நிசான் மேக்னைட் (Nissan Magnite): மேக்னைட் ஒரு ஜப்பானிய-ஸ்டைல் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் ஆகும். இது குறைவான விலையில் பல தொழிற்நுட்ப அம்சங்களை வழங்குகிறது. அந்த வகையில், பின்புற டிஃபாகர் வசதியுடன் கூடிய இந்த காரின் உயர்ரக வேரியண்ட்களின் விலைகள் ரூ.8.60 லட்சம் முதல் தொடங்குகின்றன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): மேலே கண்ட டாடா பன்ச் காருக்கு போட்டியான இந்த ஹூண்டாய் மைக்ரோ-எஸ்யூவி கார் நவீன, அம்சங்கள் நிறைந்த தொகுப்பை வழங்குகிறது. சந்தையில் மிகுந்த போட்டியான எஸ்யூவி கார் பிரிவில் சந்தைப்படுத்தப்படும் எக்ஸ்டர் காரின் சில வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்குள் பின்புற டிஃபாகர் உடன் கிடைக்கின்றன.

டாடா அல்ட்ரோஸ் (Tata Altroz): அல்ட்ரோஸ் ஆனது டாடா மோட்டார்ஸின் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். பாதுகாப்பு உணர்வுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். பின்புற டிஃபாகர் வசதியுடன் கூடிய இந்த காரின் எக்ஸ்.இசட் வேரியண்ட்டின் விலை ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இந்த டாடா காரும் 5-நட்சத்திர குளோபல் என்சிஏபி மதிப்பீட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): டாடா அல்ட்ரோஸ் காருக்கு போட்டியாக பிரீமியம் ஹேட்ச்பேக் காராக விற்பனை செய்யப்படும் பலேனோ, அதன் நடுத்தர மற்றும் உயர் வேரியண்ட்களில் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது. பின்புற டிஃபாகர் வசதியுடன் கிடைக்கும் ஜீட்டா மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்களின் விலைகள் ரூ.8.43 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பனி காலங்களில் டிஃபாகரின் தேவை மிகவும் அதிகமாக இருக்கும். இல்லையேல், நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் காரை எடுக்கும் முன்னர் மேனுவலாக காரின் பின்பக்க விண்ட்ஷீல்டில் படிந்திருக்கும் பனியை அகற்ற வேண்டி இருக்கும். ஆட்டோமேட்டிக்காக இது நடக்க வேண்டும் என விரும்புபவர்கள் மேலே கூறப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம். இவ்வாறு படியும் பனிகளை அகற்றினால் தான், காருக்குள் இருந்து கண்ணாடி மூலமாக காரின் பின்பக்கத்தை தெளிவாக பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









