சின்ன விளக்கு தான்... இரவு பயணத்தில் ரொம்ப தேவையா இருக்கும்! 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் கார்கள்

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில கார்களில், பின் இருக்கைகளில் வாசிப்பதற்கான விளக்கு (Rear Reading Lamp) வசதி கிடைக்கிறது. குறிப்பாக, இந்த விளக்கு இரவு நேர பயணங்களின் போதும், காரில் பயணத்தப்படி புத்தகம் வாசிப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இந்த வசதி உடன் வரும் கார்களை பற்றிய விவரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, ஹோண்டா அமேஸ் போன்ற பிரபல கார்களின் உயர் ரக வேரியண்ட்களில் இந்த அம்சம் பரவலாக கிடைக்கிறது. இந்த வசதிகள் பெரும்பாலும் இந்த கார்களின் மிட்-ரேஞ்ச் முதல் டாப்-எண்ட் வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன. பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் பின் இருக்கை வாசிப்பு விளக்குடன் கிடைக்கும் சில சிறந்த கார்கள் இங்கே...

10 lakh rupee cars with rear reading lamp

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் உயர் ரக வேரியண்ட்களில், அதாவது ஆல்ஃபா மற்றும் சில பீட்டா வேரியண்ட்களில் பின் இருக்கை வாசிப்பு விளக்குகள் கிடைக்கின்றன. இவை பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. மேலும், இந்த காரின் பின் இருக்கை ஏசி வென்ட்கள் போன்ற வசதிகளும் பயணிகளுக்கு கூடுதல் சௌகரியத்தை அளிக்கின்றன.

10 lakh rupee cars with rear reading lamp

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் நன்கு வடிவமைக்கப்பட்ட கேபினுடன் பின் இருக்கை வாசிப்பு விளக்கு போன்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன. இது ஐ20 காரின் டாப்-எண்ட் அஸ்டா வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் வேரியண்ட்டாக இருப்பினும், இது நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்பிற்குள் வருகிறது. ஐ20 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.87 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் வரையில் உள்ளன.

10 lakh rupee cars with rear reading lamp

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): காம்பாக்ட் செடான் கார்கள் பிரிவில் ஹோண்டாவின் ஒரு வலுவான போட்டியாளரான அமேஸ், பின் இருக்கை பயணிக்களுக்கான ஏசி வென்ட்கள் உடன், அதன் டாப் விஎக்ஸ் (VX) மற்றும் இசட்.எக்ஸ் (ZX) வேரியண்ட்களில் பின் இருக்கை கேபின் விளக்கு போன்ற நடைமுறை அம்சங்களை வழங்குகிறது. அமேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.41 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் உள்ளன.

10 lakh rupee cars with rear reading lamp

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): 5-நட்சத்திர குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீடு உடன் பிரீமியம் உட்புற வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸ், அகம்ப்ளிஷ்ட் எஸ் (Accomplished S) போன்ற அதன் டாப் வேரியண்ட்களில் பின் இருக்கை கேபின் விளக்கு வசதியுடன் கூடிய மற்றொரு சிறந்த தேர்வாகும். இந்த டாடா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.30 லட்சம் முதல் ரூ.10.51 லட்சம் வரையில் உள்ளன.

10 lakh rupee cars with rear reading lamp

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): சந்தையில் மிக பிரபலமாக இருக்கும் இந்த காம்பாக்ட் செடான் கார், அதன் இசட்.எக்ஸ்.ஐ (ZXi) மற்றும் ZXi+ வேரியண்ட்களில் பின் இருக்கைகளில் விளக்கை வழங்குகிறது. டிசையரின் இந்த வேரியண்ட்கள் பத்து லட்ச ரூபாய்க்குள் சந்தையில் கிடைக்கின்றன. டிசையரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.30 லட்சம் முதல் ரூ.10.51 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தினந்தோறும் காரை பயன்படுத்துவதற்கு தேவையான அம்சங்களுள் பின் இருக்கைகளில் வழங்கப்படும் இந்த விளக்கும் ஒன்றாகும். ஏனெனில், தொலைத்தூர பயணங்களின் போது இந்த விளக்கின் தேவை இன்றியமையாதது ஆகும். இத்தகைய அம்சத்துடன் 10 லட்ச ரூபாய்க்குள் மேற்கூறப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம் என்பது சிறப்பான விஷயமாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 24, 2025, 5:00 [IST]
English summary
Best cars with rear reading lamp priced under 10 lakh rupees in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X