10 லட்ச ரூபா காரில் இதை நிறைய பேர் எதிர்பார்க்க மாட்டோம்! மார்க்கெட்டில் இத்தனை கார்கள் கிடைக்குது!
பின்பக்க கண்ணாடிக்கான வைப்பர் மற்றும் வாஷர் (Wiper & Washer) வசதியுடன் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில சிறந்த கார்களில் டாடா பன்ச், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் ஆகியவை அடங்குகின்றன. இந்த அம்சங்கள் பொதுவாக நடுத்தர மற்றும் உயர் ரக வேரியண்ட்களில் வழங்கப்படுவதால், கார் வாங்கும் முன் குறிப்பிட்ட வேரியண்ட்டின் விவரக்குறிப்புகளை சரிபார்ப்பது அவசியம்.
டாடா பன்ச் (Tata Punch): மைக்ரோ-எஸ்யூவி காரான இது அதன் உயரமான இருக்கை பொசிஷன், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உறுதியான வடிவமைப்புக்காகப் பிரபலமானது. பின்புற வைப்பர் & வைபர் உடன் இந்த கார் குளோபல் என்சிஏபி (Global NCAP)-இல் உயர் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது.

ஆதலால் இந்த கார் சிட்டி டிரைவிங்கிற்கும், சாலைகளில் உள்ள பள்ளங்களை சமாளிப்பதற்கும் ஏற்றது. டாடா பன்ச்சின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.5 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. பின்புற வைப்பர் & வைப்பர் வசதியுடன் கூடிய வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கின்றன.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இது ஒரு பிரபலமான மற்றும் எரிபொருள் சிக்கனமான ஹேட்ச்பேக் கார் ஆகும். இது அதன் அனைத்து வேரியண்ட்யிலும் சிறந்த விருப்பமாக உள்ளது. இதன் இசட்.எக்ஸ்.ஐ (ZXi) வேரியண்ட்டில் பின்புற வைப்பர் & வாஷர் சிஸ்டம் மற்றும் பின்புற டிஃபாகர் ஆகியவை ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

மிருதுவான என்ஜின் மற்றும் அதிக மைலேஜ் காரணமாக நகர்ப்புற பயணங்களுக்கு ஸ்விஃப்ட் கார் சிறந்ததாக விளங்குகிறது. இத்தகைய ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.5.79 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரை உள்ளன. ZXi வேரியண்ட் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): கிராஸ்ஓவர் எஸ்யூவி கார்களுக்கே உண்டான ஸ்டைலும், ஹேட்ச்பேக் நடைமுறைத்தன்மையும் கலந்த கலவையாக ஃபிரான்க்ஸ் உள்ளது. இதன் ஜெட்டா வேரியண்ட்டில் பின்பக்க வைப்பர் & வாஷர், டச்ஸ்கிரீன் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.

நன்கு நிமிர்ந்த டிரைவிங் பொசிஷன் மற்றும் நவீன தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் காம்பாக்ட்டான காரை விரும்புபவர்களுக்கு ஏற்றதான ஃபிரான்க்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.85 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. வைப்பர் & வாஷர் உடன் கிடைக்கும் ஜெட்டா வேரியண்ட் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இது ஒரு தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும். இது, கொடுக்க்கும் பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்குகிறது. இதன் நடுத்தர மற்றும் உயர் ரக வேரியண்ட்கள் பின்புற வைப்பர் & வாஷர் சிஸ்டம் மற்றும் பிற பிரீமியம் அம்சங்கள் உடன் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

முதல் முறையாக கார் வாங்குபவர்கள் அல்லது நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு எக்ஸ்டர் சிறந்தது. தற்சமயம் எக்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.21 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன. ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் வைப்பர் & வாஷர் பொருத்தப்பட்ட இந்த காரின் வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, இந்த லிஸ்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) கார்களையும் சேர்க்கலாம். பின்பக்க விண்ட்ஷீல்டுக்கான வைப்பர் & வாஷர் தேவைப்படாதது போன்று நம்மில் சிலருக்கு தோன்றலாம். ஆனால், இவை மழைக்காலங்களில் காருக்கான முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாக விளங்குகின்றன. எனவே, ரூ.10 லட்சம் வரம்பிற்குள் தேவையான அம்சங்களை வழங்கும் கார்களைச் சரிபார்த்து வாங்குவது முக்கியம்.


Click it and Unblock the Notifications









