10 லட்ச ரூபாய் கார்களில் இந்த வசதி எல்லாம் இருக்குறதே பலருக்கு தெரியாது! கொஞ்சம் விசாரித்தால் போதும்!
இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களில் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதி அரிதாகவே கிடைக்கிறது. பெரும்பாலான கார்களில் கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான் இருந்தாலும், சாவியில் உள்ள ரிமோட் மூலம் காருக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் இருந்தே என்ஜினை இயக்க வைக்கும் வசதி சற்று விலைமிக்க கார்களில் தான் வழங்கப்படுகின்றன.
ரூ.10 லட்சத்திற்குட்பட்ட விலையில் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதியுள்ள சில கார்கள் ஆட்டோமேட்டிக் (AMT/ AT) கியர்பாக்ஸ் உடன் கூடிய உயர் ரக மாடல்களாகவே உள்ளன. குறிப்பாக ஹேட்ச்பேக் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி கார் பிரிவுகளில் இந்த வசதி பரவலாக வழங்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ்: இந்த காரின் சில ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் 'iRA' எனப்படும் டாடா மோட்டார்ஸின் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆப் மூலம் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதி கிடைக்கிறது. இதன் வழியாக, நீங்கள் காருக்குள் நுழைவதற்கு முன்பே என்ஜினை ஆன் செய்து, கேபினின் வெப்பநிலையை தீர்மானிக்கலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 'ப்ளூலிங்க்' கனெக்டட் கார் டெக்னாலஜி கொண்ட டாப் வேரியண்ட்களில் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ: மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் காரான பலேனோ மற்றும் அதன் ரீ-பேட்ஜ் வெர்சனான டொயோட்டா க்ளான்ஸாவின் குறிப்பிட்ட ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில், 'கனெக்டட் கார் டெக்னாலஜி' தொகுப்பின் ஒரு பகுதியாக ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகிறது.

டாடா டியாகோ இவி: டாடா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான எலெக்ட்ரிக் காரான டியாகோ இவி -இன் சில நடுத்தர வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள் வருகின்றன. அவற்றில் மொபைல் போன் செயலி வழியாக ரிமோட் ஸ்டார்ட்/ ஸ்டாப் செயல்பாட்டை மேற்கொள்ள முடிகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர்: ஹூண்டாயின் மைக்ரோ-எஸ்யூவி காரான எக்ஸ்டரின் எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் கனெக்டட் கார் அம்சங்களுடன் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதி இடம்பெறுகிறது. ஹூண்டாயின் மாடர்னான காராக விளங்கும் எக்ஸ்டரில் இன்னும் பல நவீன தொழிற்நுட்ப அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ: முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் வெர்சனாக இது கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மஹிந்திரா எஸ்யூவி காரின் எம்.எக்ஸ் மற்றும் ஏ.எக்ஸ் வேரியண்ட்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.10 லட்சத்திற்குட்பட்ட விலையில் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதியுடன் கிடைக்கின்றன.

நிசான் மேக்னைட்: நிசான் மேக்னைட்டின் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட சில டாப் வேரியண்ட்கள் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதி உடன் கிடைக்கின்றன. ஜப்பானிய கார் நிறுவனமான நிசானில் இருந்து தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு காராக மேக்னைட் விளங்குகிறது.

ரெனால்ட் கைகர்: கைகரின் டாப் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களிலும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் ஒரு முக்கிய அம்சமாக வழங்கப்படுகிறது. மேலே கூறப்பட்ட நிசான் மேக்னைட் காரும், ரெனால்ட் கைகர் காரும் ஒரே பிளாட்ஃபாரத்தில்தான் உருவாக்கப்படுகின்றன. கைகரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.76 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரிமோட் என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதியைப் பெற, வாடிக்கையாளர்கள் பொதுவாக கார்களின் டாப் வேரியண்ட்களை அல்லது பிரத்யேக ஆக்சஸெரீகளைத் தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு இது சற்று பிரீமியம் தரத்திலான அம்சம் என்றாலும், ரூ.10 லட்சத்திற்குள் மேலே கூறப்பட்ட கார்களுள் ஒன்றை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









