கார் ஓட்டும் பலருக்கு இந்த பிரச்சனை இருக்கு! 10 லட்ச ரூபாயில் கார் வாங்கும்போது இது இருக்கானு கவனியுங்க!

கார் முதன்முதலாக உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இப்போது வரையில் கார் ஓட்டும்போது பலருக்கு சவாலாக இருக்கும் விஷயம் என்றால், அது ரிவர்ஸில் காரை பார்க் செய்வது ஆகும். நெரிசலான பகுதிகளில் இரு வாகனங்களுக்கு இடையே காரை கொண்டு போய் நிறுத்துவது என்றாலே சிலருக்கு கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். இதனாலேயே அத்தகைய சூழல்களை கையாள்வதற்காக தனியாக டிரைவர்களை பணியில் அமர்த்துபவர்களும் இருக்கின்றனர்.

ஆனால், இன்றைய கால மாடர்ன் உலகில் இதற்கும் தீர்வு கண்டுப்பிடிக்கப்பட்டு விட்டது. அதுதான், ரியர் பார்க்கிங் சென்சார்கள் (Rear Parking Sensors) ஆகும். காரை ரிவர்ஸில் கொண்டு சென்று பார்க் செய்வதற்கு ஏதுவாக சென்சார்கள் பயன்படுத்துவதால், இதனை ரிவர்ஸ் (Reverse) பார்க்கிங் சென்சார்கள் எனவும் அழைக்கின்றனர். இத்தகைய சென்சார் வசதி உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களில் சிறந்தவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

cars with reverse parking sensors

டாடா பஞ்ச் (Tata Punch): எந்த லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாலும், பஞ்ச் காரை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரூ.10 லட்சத்திற்குள் பல தொழிற்நுட்ப வசதிகள் உடன் கிடைக்கும் பஞ்ச் காருக்கு குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனையில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. இதற்கு, இந்த காரில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதியும் வழங்கப்படுவது ஒரு முக்கிய காரணம் ஆகும்.

cars with reverse parking sensors

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): டாடா பஞ்ச் காருக்கு விற்பனையில் போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் அளவில் சிறியதான மைக்ரோ-எஸ்யூவி கார் தான், எக்ஸ்டர் ஆகும். இந்த காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் (Airbags) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. விலைமிக்க டாப் வேரியண்ட்டாக இருப்பினும், அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.10 லட்சத்திற்குள் இருந்தே துவங்குகிறது.

cars with reverse parking sensors

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் மற்றொரு விலை குறைவான கார் இதுவாகும். எக்ஸ்டர் எஸ்யூவி ரக காராக இருக்கும் நிலையில், கிராண்ட் ஐ10 நியோஸ் ஆனது ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும். எக்ஸ்டரை காட்டிலும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஹூண்டாய் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

cars with reverse parking sensors

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி, இந்திய அளவிலேயே அதிக பேரால் வாங்கப்பட்டு வரும் காராக ஸ்விஃப்ட் விளங்குகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரில் பல அசத்தலான அம்சங்கள் புதியதாக சேர்க்கப்பட்டன. அவ்வாறுதான் ஸ்விஃப்ட் காரில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

cars with reverse parking sensors

டாடா அல்ட்ராஸ் (Tata Altorz): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக விளங்கும் அல்ட்ராஸ் அதன் வலிமையான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் மூலம் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற காராகும். அல்ட்ராஸின் அனைத்து வேரியண்ட்களிலும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதி ஆனது வழங்கப்படுகிறது.

cars with reverse parking sensors

ரெனால்ட் கைகர் (Renault Kiger): இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் எஸ்யூவி கார் இதுவாகும். குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 4-ஸ்டார் ரேட்டிங் (Rating)-ஐ பெற்ற கைகரில் டாப் வேரியண்ட்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேரா மற்றும் 4 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்டாக இருப்பினும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்குள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களை காட்டிலும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆனது சற்று பிரீமியம் தரத்திலான அம்சமாகும். இத்தகைய கேமரா உடன் ரூ.10 லட்சத்திற்குள் ரெனால்ட் கைகர் கார் கிடைக்கிறது என்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த கார்களில் எந்த காரை ரிவர்ஸ் பார்க்கிங் உதவி வசதி உடன் வாங்க விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 10, 2025, 5:00 [IST]
English summary
Best cars with reverse parking sensors in india under 10 lakhs tata punch and hyundai exter
மேலும்... #parking sensor #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X