இந்த 10 லட்ச ரூபாய் கார்களில், டிரைவர் எந்தவொரு டென்ஷனும் இல்லாம ஓட்டலாம்! கண் முன்னே எல்லாமே இருக்கும்!

பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல நவீன கார்களில் தற்போது செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை இடம்பெறுகிறது. இது டிஜிட்டல் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (MID) உடன் அனலாக் அளவீடுகளையும், அதேநேரம் வாகனத்தை பற்றிய விபரங்களை செமி-டிஜிட்டல் தரத்திலும் வழங்குகிறது. இது நவீன செயல்பாட்டுத் திறனையும், பாரம்பரிய வடிவமைப்பையும் ஒன்றிணைக்கிறது.

10 lakh rupee cars with semi-digital instrument cluster display

டாடா டியாகோ: இந்த டாடா காரின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே வழங்கப்படுகிறது. இதில் மையப் பகுதியில் உள்ள திரை காரின் வேகம், எரிபொருள் அளவு மற்றும் பிற தகவல்களைக் காட்டுகிறது. புதிய டிஸ்பிளே கொண்ட பதிப்பு, எக்சைட் வேரியண்டில் இருந்து கிடைக்கிறது.

10 lakh rupee cars with semi-digital instrument cluster display

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: டியாகோவிற்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் காரில், ஸ்போர்ட்ஸ் ட்ரிம் முதல் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. இதில் 5.3-இன்ச் MID வழங்கப்படுகிறது. இது எரிபொருள் திறன் மற்றும் பயணிக்கக்கூடிய தூரம் போன்ற தகவல்களை வழங்குகிறது.

10 lakh rupee cars with semi-digital instrument cluster display

ஹூண்டாய் அவ்ரா: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் ரக கார்களுள் ஒன்றான இதில், எஸ்.எக்ஸ் வேரியண்ட் முதல் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் வழங்கப்படும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கிடைக்கிறது. அவ்ரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.98 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

10 lakh rupee cars with semi-digital instrument cluster display

ரெனால்ட் டிரைபர்: குறைந்த விலையில் கிடைக்கும் இந்த அளவில் பெரியதான எம்பிவி ரக காரில் நிலையான LED டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை வழங்கப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே ரெனால்ட் க்விட் காருடன் ஒத்ததாக உள்ளது. இது பல்வேறு செயல்பாடுகளுக்கான விபரங்களை டிஜிட்டல் தரத்தில் வழங்குகிறது.

10 lakh rupee cars with semi-digital instrument cluster display

ஹூண்டாய் எக்ஸ்டர்: காம்பாக்ட் எஸ்யூவி ரக கார்களை பொறுத்தவரையில் இந்த ஹூண்டாய் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது. சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் இந்த டிரைவருக்கான டிஸ்பிளே டிஜிட்டல் தரத்தில் வழங்கப்படுவது எக்ஸ்டரில் மட்டுமே ஆகும். இதன் 8-இன்ச் திரை, ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவ் மோடுகளையும் காட்டுகிறது.

10 lakh rupee cars with semi-digital instrument cluster display

டாடா பன்ச்: குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற இந்த டாடா மாடலின் மிட்-ஸ்பெக் அகம்பிளிஷ்ட் பிளஸ் வேரியண்ட்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை வழங்கப்படுகிறது. இது இந்த காரின் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்குப் பக்கத்தில் வழங்கப்படுகிறது.

10 lakh rupee cars with semi-digital instrument cluster display

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ்: இந்த மாருதி ஹேட்ச்பேக் காரின் டெல்டா பிளஸ் டர்போ வேரியண்ட், பத்து லட்ச ரூபாய்க்குள் (புது டெல்லியில் ஆன்-ரோடு விலை) கிடைக்கிறது. இதில் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே கொண்ட நிலையான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை வழங்கப்படுகிறது.

10 lakh rupee cars with semi-digital instrument cluster display

கியா சைரோஸ்: இந்த லேட்டஸ்ட் கியா காரின் எச்டிகே வேரியண்ட், பத்து லட்ச ரூபாய் விலைக்குள் 12.3 இன்ச்சில் டிரைவருக்கான பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது இந்த செக்மெண்ட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். எச்டிகே வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை சுமார் 10.02 லட்சம் ரூபாய் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காருக்குள் டிரைவருக்கு முன்னால் இருக்கும் ஸ்டீயரிங் சக்கரம், விண்ட்ஷீல்டின் அமைப்பு மற்றும் டிரைவருக்கு அருகில் இருக்கும் பொருட்கள் என இவை எல்லாவற்றையும் சேர்த்து டிரைவருக்கான பயணம் சூழல் என்பார்கள். இது சமீப காலங்களில் வெகுவாக மேம்பட்டு உள்ளது. அதற்கு ஒரு காரணமாக விளங்கும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் திரை கொண்ட இத்தனை கார்களை ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 25, 2025, 5:00 [IST]
English summary
Best cars with semi digital instrument cluster display under 10 lakhs tata tiago and hyundai aura
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X