10 லட்ச ரூபாயில் கார் வாங்குபவர்கள் முதலில் எதிர்பார்க்கும் வசதி... ஆனா ரெண்டே 2 கார்களில் மட்டுமே கிடைக்குது!
இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் (எக்ஸ்-ஷோரூம்) சாவியில்லாமல் ஸ்மார்ட் என்ட்ரி வசதியுடன் பல கார்கள் கிடைக்கின்றன. இருப்பினும், பாரம்பரிய ஃபோப் (Fob)-ஐப் பயன்படுத்தாமல், அட்டையைப் பயன்படுத்தி செயல்படும் 'ஸ்மார்ட் ஆக்சஸ் கார்டு என்ட்ரி' (Smart Access Card Entry) வசதியானது, ரூ.10 லட்சத்திற்குள் ரெனால்ட் (Renault) கார்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
அதுவும் அனைத்து ரெனால்ட் கார்களிலும் அல்ல. ரெனால்ட் கைகர் (Kiger) மற்றும் ரெனால்ட் டிரைபர் (Triber) போன்ற குறிப்பிட்ட கார்களில் மட்டுமே பிரீமியம் அம்சமாக இது வழங்கப்படுகிறது. இந்த இரு ரெனால்ட் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ரெனால்ட் கைகர்: இது 5 இருக்கைகள் கொண்ட ரெனால்ட்டின் காம்பாக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். ஸ்டைலான வடிவமைப்பு, 205 மிமீ உயரத்திற்கு கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 405 லிட்டர் கொள்ளளவில் பெரிய பூட் ஸ்பேஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த கார் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் இணைக்கப்பட்டு, ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
அந்த வகையில் இந்த காரின் டெக்னோ மற்றும் எமோஷன் வேரியண்ட்களில் ஸ்மார்ட் ஆக்சஸ் கார்டு வசதி கிடைக்கிறது. விலைமிக்க, டாப்-ஸ்பெக் ஆர்.இசட்.எக்ஸ் (RXZ) டர்போ வேரியண்ட்டில் ஸ்மார்ட் ஆக்சஸ் கார்டு மூலம் கார் ஸ்டார்ட் மட்டுமன்றி, ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் செய்யும் வசதியும் கிடைக்கிறது.
கைகரின் வேரியண்ட்கள் ரூ.7.50 லட்சம் முதல் ரூ.10.34 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டு 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகளை கைகர் வழங்குகிறது. இதில், ஒரு நேச்சுரலி அஸ்பிரேட்டட் (NA) என்ஜின் சுமார் 72 பிஎஸ் ஆற்றலையும், மற்றொரு டர்போசார்ஜ்டு என்ஜின் சுமார் 100 பிஎஸ் ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது.

ரெனால்ட் டிரைபர்: இது 7 இருக்கைகள் கொண்ட அளவில் பெரியதான ரெனால்ட்டின் எம்பிவி (மல்டி-பர்பஸ் வெஹிக்கிள்) ரக கார் ஆகும். இதன் தனித்துவமான மாடுலர் சீட்டிங் அமைப்பு, மூன்றாவது வரிசையை அகற்றுவதன் மூலம் 625 லிட்டர் பூட் ஸ்பேஸ்-ஐ வழங்குகிறது. இது பயணிகளின் வசதியை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் டாப்-ஸ்பெக் RXZ வேரியண்ட்டில் கீலெஸ் என்ட்ரிக்கான ஸ்மார்ட் ஆக்சஸ் கார்டு வசதி உள்ளது. இந்த வேரியண்ட்டில் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் அடங்கும், இது பயணத்தை எளிதாக்குகிறது. இது 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 72 பிஎஸ் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம்.

டிரைபர் RXZ வேரியண்ட்டில் 8-இன்ச் டச் ஸ்கிரீன், இரண்டாம் மற்றும் மூன்றாம் இருக்கை வரிசைகளுக்கு தனி ஏசி வென்ட்களுடன் மேனுவல் ஏசி, கூல்டு சென்டர் கன்சோல் மற்றும் 7-இன்ச் LED இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. இதை விட விலை குறைவான எமோஷன் வேரியண்ட்டில் இருந்து க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால மாடர்ன் கார்களில் அத்தியாவசியமாகி விட்ட அம்சங்களுள் இந்த கீலெஸ் ஸ்மார்ட் ஆக்ஸஸ் கார்டு எண்ட்ரி வசதியும் ஒன்றாகி விட்டது. ஏனெனில், ஒவ்வொரு காரை பயன்படுத்தும் போதும் கீ-ஃபாப் -இன் பொத்தான்களை அழுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. இத்தகைய வசதியுடனான காரை ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம் என்பது அருமையான விஷயமாகும்.


Click it and Unblock the Notifications









