பள்ளம், மேடுகளை லெஃப்ட் ஹேண்டில் கையாளலாம்! 10 லட்ச ரூபாய் கார்களில் கூட இந்த சஸ்பென்ஷன் கிடைக்குதா?

கார்களில் பல்வேறு விதமான சஸ்பென்ஷன் (Suspension) செட்-அப்கள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான விலை குறைவான கார்களில் முன்பக்கத்தில் மக்பெர்சன் ஸ்ட்ரட் (MacPherson Strut) சஸ்பென்ஷன் தான் வழங்கப்படுகிறது என்றும், இந்த சஸ்பென்ஷன் உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த கார்கள் என்னென்ன என்பதை பற்றியும் ஏற்கனவே முந்தைய தொகுப்பில் பார்த்து இருந்தோம்.

இந்த தொகுப்பில் என்ன பார்க்க போகிறோம் என்றால், பரவலாக பெரும்பாலான கார்களில் பின்பக்க சஸ்பென்ஷனுக்கு வழங்கப்படும் டார்சன் பீம் (Torsion Beam) உடன் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களை பற்றி ஆகும். மற்ற பின்பக்க கார் சஸ்பென்ஷன் செட்-அப்களை போன்று குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியதாகவும், நீண்ட காலத்திற்கு உழைக்கக் கூடியதாகவும் உருவாக்கப்படும் டார்சன் பீம் ஆனது அதன் காம்பெக்ட்டான வடிவத்தினால் காரின் கேபினிலும், பூட் ஸ்பேஸ் (Boot Space) பகுதியிலும் அதிக இடவசதியை வழங்குகிறது.

cars with torsion beam rear suspension

டாடா பஞ்ச்/ பஞ்ச் இவி (Tata Punch/ Punch EV): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் அளவில் சிறியதான எஸ்யூவி (SUV) ரக காரான பஞ்ச் காரின் எலக்ட்ரிக் வெர்சனிலும் பின்பக்க சஸ்பென்ஷனுக்கு டார்சன் பீம் வழங்கப்படுகிறது. பெட்ரோல் & சிஎன்ஜி (CNG) ஆப்ஷனில் கிடைக்கும் பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.6.20 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் நிலையில், பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

cars with torsion beam rear suspension

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காரான எக்ஸ்டர், அதற்கேற்ப மக்கள் பலரால் வாங்கக்கூடிய அளவிற்கு விலை குறைவானதாக உள்ளது. எக்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.6.21 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

cars with torsion beam rear suspension

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மற்றொரு கார் இதுவாகும். எக்ஸ்டர் சில வருடங்களுக்கு முன்னர் தான் அறிமுகம் செய்யப்பட்டது; ஆனால் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆனது பல வருடங்களாக மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது.

cars with torsion beam rear suspension

டாடா டியாகோ/ டியாகோ இவி (Tata Tiago/ Tiago EV): டாடா பஞ்ச் காரை போன்று, டாடா டியாகோ காரும் அதன் எலக்ட்ரிக் வெர்சன் உடன் சேர்ந்து பின்பக்கத்தில் டார்சன் பீம் சஸ்பென்ஷனை பெறுகிறது. டியாகோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் நிலையில், டியாகோ இவி எலக்ட்ரிக் காரின் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

cars with torsion beam rear suspension

ரெனால்ட் கைகர் (Renault Kiger): முன்பக்கத்தில் மக்பெர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் உடன் உருவாக்கப்படும் கைகர் காரின் பின்பக்கத்தில் டார்சன் பீம் சஸ்பென்ஷனுக்கு வழங்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் காம்பெக்ட்டான எஸ்யூவி காரான கைகரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.30 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் உள்ளன.

cars with torsion beam rear suspension

நிசான் மேக்னைட் (Nissan Magnite): இந்தியாவில் நிசான் நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த கார் மேக்னைட் ஆகும். ஆனால், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இரண்டே இரண்டு நிசான் கார்களுள் ஒன்று மேக்னைட் ஆகும். கைகரும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டவை தான். ஆனால், கைகரை காட்டிலும் மேக்னைட் விலை குறைவானதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு காரிலும் முன்பக்க சஸ்பென்ஷன் எந்த அளவிற்கு முக்கியமானதோ அந்த அளவிற்கு பின்பக்க சஸ்பென்ஷனும் சிறந்த தரத்தில் இருப்பது முக்கியமாகும். ஆதலால், சிறந்த டார்சன் பீம் சஸ்பென்ஷன் உடன் காரை வாங்க மேலே குறிப்பிடப்பட்ட கார்களுள் ஒன்றை தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 5, 2025, 5:00 [IST]
English summary
Best cars with torsion beam rear suspension under 10 lakhs tata punch and hyundai exter
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X