கார்களில் டேஸ்போர்டுக்கு மேலே மறைவா இப்படியொரு மிரர் வழங்கப்படுதா? 10 லட்ச ரூபாய் கார்களிலும் கிடைக்குது!!
கார்களில் வேனிட்டி மிரரை பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா? காருக்குள் முன் இருக்கைகளுக்கு எதிராக சன்ஷேடிற்கு உள்ளே வழங்கப்படும் கண்ணாடியை தான் இவ்வாறு அழைக்கின்றனர். பெரும்பாலும் இது முக ஒப்பனையை சரிபார்க்கவும், தலைமுடியைச் சீர்படுத்தவும் தான் அதிகமாக பயன்படுகிறது. இருப்பினும், சில ஓட்டுநர்கள் இவற்றை காரின் பக்கவாட்டில் பார்க்க முடியாத பகுதிகளைக் கவனிக்க உதவும் இரண்டாம் நிலை ஓட்டுநர் உதவி கருவியாகவும் பயன்படுத்துகின்றனர்.
மேலும், சில கார்களில் இந்த மிரர் இரவு நேரப் பயன்பாட்டிற்கான விளக்கையும் கொண்டுள்ளது. சில நவீன கார்களில் எல்இடி விளக்குகளும், ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளும் இடம்பெறுகின்றன. இந்தியாவில் பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் சில கார்கள், வேனிட்டி மிரர் வசதியுடன் வருகின்றன. இவற்றில் சில கார்களில் முன் இருக்கை பயணிக்கான வேனிட்டி மிரரும், டாப் வேரியண்ட்களில் கூடுதலாக ஓட்டுநருக்கான வேனிட்டி மிரரும் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இந்த மைக்ரோ-எஸ்யூவி கார், அடிப்படை வேரியண்ட்டில் இருந்தே முன் இருக்கை பயணிக்கான வேனிட்டி மிரரை வழங்குகிறது. இந்த காரின் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) (SX(O)) போன்ற டாப் வேரியண்ட்களில் ஓட்டுநருக்கான வேனிட்டி மிரரும் கிடைக்கிறது. ஆறு ஏர்பேக்குகள் போன்ற வலுவான பாதுகாப்பு அம்சங்களுடன் இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

டாடா பன்ச் (Tata Punch): குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு பெயர் பெற்ற இந்த காரின் பெரும்பாலான வேரியண்ட்களில் முன் இருக்கை பயணிக்கான வேனிட்டி மிரர் வழங்கப்படுகிறது. பன்ச் காரின் கிரியேட்டிவ் ட்யூயல்-டோன் (Creative DT) வேரியண்ட், பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): இந்த மஹிந்திரா காரின் எம்.எக்ஸ்2 புரோ வேரியண்ட், பத்து லட்சம் ரூபாய்க்கும் சற்று குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த காரின் பெரும்பாலான வேரியண்ட்களில் முன் இருக்கை பயணிக்கான வேனிட்டி மிரர் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் நிலையில், சில வேரியண்ட்களில் ஓட்டுநருக்கான வேனிட்டி மிரரும் மற்ற அம்சங்களுடன் இடம்பெறுகிறது. இந்த விலைப் பிரிவில் பனோரமிக் சன்ரூஃப் உள்ள ஒரே மாடல் இதுதான்.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): இந்த மாருதி செடான் காரின் இசட்.எக்ஸ்.ஐ+ (ZXi+) போன்ற உயர் ரக வேரியண்ட்கள் முன் இருக்கை பயணிக்கான வேனிட்டி மிரர் உடன் பத்து லட்சம் ரூபாய்க்குள் வருகின்றன. இந்த கார், அதன் சிறந்த எரிபொருள் திறன் மற்றும் தொழிற்நுட்ப வசதிக்களுக்காக அறியப்படும் ஒரு பிரபலமான காம்பெக்ட் செடான் கார் ஆகும்.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடா மோட்டார்ஸின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான இதன் எக்ஸ்.இசட் வேரியண்ட் உட்பட உயர்-ஸ்பெக் வேரியண்ட்களில் வேனிட்டி மிரர் வழங்கப்படுகிறது. இந்த வேரியண்ட் பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. அல்ட்ராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.30 லட்சத்தில் இருந்து ரூ.10.51 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில், ஹூண்டாய் எக்ஸ்டர், டாடா பன்ச் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போன்ற பிரபலமான கார்களில் இந்த வசதி, குறைந்த விலை வேரியண்ட்களிலேயே கிடைக்கிறது. ஆகையால், இந்த கார்களுள் ஒன்றை இத்தகைய மிரர் உடன் ரூ.10 லட்சத்திற்குள் வாங்கலாம். வேனிட்டி மிரர் ஆனது அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுவது மட்டுமின்றி, சில சமயங்களில் காரை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான மிரர் ஆகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications









