வாய்ஸ் கண்ட்ரோல் பண்ணாமல் போதும்... 10 லட்ச ரூபாயில் இப்படிப்பட்ட கார்களை கூட வாங்கலாமா!!
வாய்ஸ் கண்ட்ரோல் (Voice Control) மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய சன்ரூஃப் (Sunroof) என்பது எலெக்ட்ரிக்கில் செயல்படும் ஒரு அமைப்பாகும். கார் ஓட்டும் போது, வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் கைகளை பயன்படுத்தாமல் சன்ரூஃப்பை திறக்கவோ அல்லது மூடவோ முடியும். ரூ.10 லட்சத்திற்குட்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலையில், வாய்ஸ் கண்ட்ரோல் சன்ரூஃப் வசதி கொண்ட சிறந்த கார்களின் பட்டியல் இதோ...

ஹுண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): சன்ரூஃப் அம்சத்துடன் இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த காரின் எஸ் ஸ்மார்ட் (S Smart) வேரியண்ட் முதல் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப் கிடைக்கிறது. எக்ஸ்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.68 லட்சம் முதல் ரூ.9.61 லட்சம் வரை உள்ளன.

டாடா பன்ச் (Tata Punch): எக்ஸ்டருக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் அக்கம்பிளிஷ்ட் எஸ் (Accomplished S) வேரியண்ட் வாய்ஸ் கண்ட்ரோல் கட்டுப்பாட்டு எலக்ட்ரிக் சன்ரூஃபை வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.71 லட்சம் முதல் ரூ.9.24 லட்சம் வரை உள்ளன.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): டாடா மோட்டார்ஸின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான இதன் ப்யூர் எஸ் (Pure S) வேரியண்ட்டில் இருந்து வாய்ஸ் கண்ட்ரோல் எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதியைப் பெறலாம். இந்த காரின் விலைகள் ரூ.7.36 லட்சம் முதல் ரூ.10.51 லட்சம் வரை உள்ளன. இதன் சில உயர் வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் எல்லையைத் தாண்டக்கூடும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திராவின் இந்த காம்பாக்ட் எஸ்யூவி காரின் எம்.எக்ஸ்2 புரோ (MX2 Pro) வேரியண்ட்டில் இருந்து சிங்கிள்-பேன் சன்ரூஃப் கிடைக்கிறது. ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட வேரியண்ட்களில் பனோராமிக் சன்ரூஃப் உண்டு. இதன் விலை சுமார் ரூ.8.99 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை உள்ளன.

ஹுண்டாய் வென்யூ (Hyundai Venue): இந்த ஹூண்டாய் சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரின் இ+ மற்றும் எஸ்.எக்ஸ் (SX) வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதியுடன் வருகின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சுமார் ரூ.8.32 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரை உள்ளன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): பிரபல டாடா காம்பாக்ட் எஸ்யூவி காரான நெக்ஸானின் ஸ்மார்ட்+ எஸ் (Smart+ S) வேரியண்ட்டில் இருந்து வாய்ஸ் கண்ட்ரோல் எலக்ட்ரிக் சன்ரூஃபை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.20 லட்சம் முதல் ரூ.9.80 லட்சம் வரை உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சன்ரூஃப் வசதி பொதுவாக இந்த கார்களின் நடுத்தர முதல் உயர் ரக வேரியண்ட்களில் இடம்பெறுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டவை காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே. நகரங்களை பொறுத்து காரின் ஆன்-ரோடு விலை (RTO கட்டணம், காப்பீடு, உள்ளூர் வரிகள் உள்பட) ரூ.10 லட்சத்தைத் தாண்டக்கூடும். காரின் விலை மற்றும் அம்சங்களை பற்றிய கூடுதல் விபரங்களுக்கு, உற்பத்தி நிறுவனத்தின் இணையதளங்கள் அல்லது உள்ளூர் டீலர்களை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









