எந்தவொரு காருக்கும் தனி அழகு கொடுக்குறதே இதுதான்! 10 லட்ச ரூபாயில் வாங்கும் காரிலும் கிடைக்குதானு கவனிக்கனும்!
இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல புதிய கார்களில், அவற்றின் குறைந்த அல்லது நடுத்தர ரக வேரியண்ட்களில் சக்கர கவர்கள் (Wheel Covers) ஸ்டாண்டர்ட் அம்சமாக வருகின்றன. அதேசமயம், உயர் ரக வேரியண்ட்களில் அலாய் சக்கரங்கள் விருப்பத்தேர்வாக வழங்கப்படுகின்றன.
டாடா பன்ச், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகியவை இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான கார் மாடல்கள் ஆகும். சிறந்த அம்சங்கள், செயல்திறன் மற்றும் மதிப்புடன், ரூ.10 லட்சத்திற்குள் (எக்ஸ்-ஷோரூம்) சக்கர கவர்களைக் கொண்ட சில சிறந்த கார்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): துடிப்பான என்ஜின் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்திற்காக நன்கு அறியப்பட்ட இந்த பிரபலமான ஹேட்ச்பேக் காரின் எல்.எக்ஸ்.ஐ (LXi), வி.எக்ஸ்.ஐ (VXi) வேரியண்ட்களில் வீல் கவர்கள் கிடைக்கின்றன. ஸ்விஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.79 லட்சத்தில் இருந்து ரூ.8.80 லட்சம் வரையில் உள்ளன.

டாடா பன்ச் (Tata Punch): குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Global NCAP Crash Test)-இல் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் பியூர் (Pure) மற்றும் அட்வென்ச்சர் (Adventure) வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள்ளான விலைகளில் வீல் கவர்கள் இடம்பெறுகின்றன.

டாடா டியாகோ/ டிகோர் (Tata Tiago/ Tigor): டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் உறுதியான ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களான இவற்றின் பெட்ரோல், சிஎன்ஜி (CNG) வேரியண்ட்களின் குறைந்த ரகங்களில் வீல் கவர்கள் இடம்பெறுகின்றன. இந்த விலை குறைவான டாடா கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.57 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): டாடா பன்ச்க்கு நேரடி போட்டியாக விளங்கும் எக்ஸ்டரின் அடிப்படை மற்றும் நடுத்தர வகை வேரியண்ட்களில் வீல் கவர்கள் தரப்படுகின்றன. ஹூண்டாயின் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.49 லட்சத்தில் இருந்து ரூ.9.33 லட்சம் வரையில் உள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்/ அவ்ரா (Hyundai Grand i10 NIOS/ Aura): ஹூண்டாயின் இந்த ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் அடிப்படை மற்றும் நடுத்தர வேரியண்ட்களில் கூட தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த உட்புறமும், வீல் கவர்களும் இடம்பெறுகின்றன. கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் அவ்ரா கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.47 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

நிசான் மேக்னைட்/ ரெனால்ட் கைகர் (Nissan Magnite/ Renault Kiger): இரண்டும் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படுவதினாலேயே இவை இரண்டையும் ஒன்றாக பார்க்கிறோம். தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபின் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விலை கொண்ட இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்களின் குறைந்த ரக வேரியண்ட்களில், வீல் கவர்கள் மற்றும் நல்ல கிரவுண்ட் கிளியரென்ஸ் உள்ளது.

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR): விசாலமான கேபின் மற்றும் சிறந்த மைலேஜ் கொண்ட இந்த மாருதி சுஸுகி காரின் குறைந்த ரக வேரியண்ட்களிலும் வீல் கவர்கள் தரப்படுகின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றாக விளங்கும் வேகன்ஆரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.6.84 லட்சம் வரை உள்ளன.

மஹிந்திரா பொலிரோ/ பொலிரோ நியோ (Mahindra Bolero/ Bolero Neo): அன்றாட பயன்பாடு மற்றும் உறுதிக்காக அறியப்படும் பின்சக்கர-டிரைவ் எஸ்யூவி கார்களில், ஸ்டாண்டர்ட் பொலிரோவில் அனைத்து வேரியண்ட்களிலும், பொலிரோ நியோ காரில் என்4, என்8 வேரியண்ட்களிலும் வீல் கவர்கள் பொருத்தப் படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வீல் கவர்கள், ஹப்கேப்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. காரின் தோற்றத்தை மெருகூட்டும் ஓர் உபகரணமாக விளங்கும் இவை காரின் அடிப்படையான இரும்பு சக்கரங்களை அழுக்கு, தூசி மற்றும் சிறு சேதங்களில் இருந்து பாதுகாக்கும் முக்கியப் பணியைச் செய்கின்றன. பொதுவாக, நீடித்து உழைக்கும் ABS பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் இவை, பல அளவுகளிலும் நேர்த்தியான ஸ்டைல்களிலும் சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன. இத்தகைய அம்சத்துடன் ரூ.10 லட்சத்திற்குள் கார் வாங்கலாம் என்பது உண்மையில் அருமையான விஷயமாகும்.


Click it and Unblock the Notifications









