பெட்ரோல், டீசலை விட சிஎன்ஜி தான் மைலேஜில் பெஸ்ட்!! 10 லட்ச ரூபாய்க்குள் எந்த காரை வாங்குறதுனே தெரியலயே!

சிஎன்ஜி (CNG) என சுருக்கமாக அழைக்கப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய கார்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் சமீப காலத்தில் வெகுவாக விரிவடைந்துள்ளது. மாருதி சுஸுகி, டாடா, ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களின் சிஎன்ஜி கார்கள் தற்போது 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

இந்த சிஎன்ஜி வாகனங்கள் பெட்ரோல், டீசல் மாடல்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்குகின்றன. இவை குறைந்த இயக்கச் செலவை வழங்குவதோடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்கின்றன. அவ்வாறு, இந்திய சந்தையில் 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சில பிரபலமான சிஎன்ஜி கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best cng cars under priced 10 lakhs

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி (Maruti Suzuki Swift CNG): மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஒரு பிரபலமான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும். இதன் சிஎன்ஜி மாடல் 1.2 லிட்டர் கே-சீரிஸ் என்ஜின் உடன் சிறந்த எரிபொருள் திறனை வழங்குகிறது. இந்த காரில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் எஸ்-சிஎன்ஜி கிட் மூலம், ஒரு கிலோகிராம் சிஎன்ஜி-க்கு 32.85 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது.

best cng cars under priced 10 lakhs

டாடா டியாகோ ஐ-சிஎன்ஜி (Tata Tiago iCNG): ஸ்விஃப்ட்டை போன்று, டாடா டியாகோ ஒரு மலிவு விலையிலான, உறுதியான ஹேட்ச்பேக் ஆகும். இது குளோபல் என்சிஏபி பாதுகாப்பு சோதனையில் 4 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் இந்த காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 26.49 கி.மீ மைலேஜ் வழங்குகிறது.

best cng cars under priced 10 lakhs

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி (Hyundai Grand i10 NIOS CNG): ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஒரு ஸ்டைலான மற்றும் ஏராளமான வசதிகள் கொண்ட ஹேட்ச்பேக் கார் ஆகும். நகரப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற இந்த காரின் 1.2 லிட்டர் கப்பா என்ஜின், சிஎன்ஜி மோடில் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவர் மற்றும் 95.2 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்கிறது. இது ஒரு கிலோகிராம் சிஎன்ஜி-க்கு 27 கி.மீ மைலேஜ் வழங்குகிறது.

best cng cars under priced 10 lakhs

மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி (Maruti Suzuki Dzire CNG): மாருதி சுஸுகி டிசையர், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட ஒரு நம்பகமான செடான் (Sedan) ரக கார் ஆகும். இது சௌகரியமான மற்றும் அதிக மைலேஜ் (Mileage) உடன் சிறந்த டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் 1.2 லிட்டர் கே-சீரிஸ் என்ஜினைக் கொண்டுள்ளன. இவை ஒரு கிலோகிராம் சிஎன்ஜி-க்கு 33.73 கி.மீ என்ற சிறந்த மைலேஜை வழங்குகின்றன.

best cng cars under priced 10 lakhs

டாடா டிகோர் ஐசிஎன்ஜி (Tata Tigor iCNG): டாடா டிகோர் ஆனது விலை குறைவான மற்றும் பாதுகாப்பான சிஎன்ஜி செடான் கார் ஆகும். மாருதி டிசையருக்கு போட்டியாக விளங்கும் இந்த டாடா காரின் சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் பயன்படுத்துகிறது. இது ஒரு கிலோகிராம் சிஎன்ஜி-க்கு 26.49 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. டியாகோவைப் போலவே, இதிலிலும் இரட்டை சிலிண்டர் பூட் தொழில்நுட்பம் உள்ளது.

best cng cars under priced 10 lakhs

டாடா பன்ச் ஐசிஎன்ஜி (Tata Punch iCNG): டாடா பன்ச் ஒரு மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும். இது எஸ்யூவி தோற்றத்தையும், சிஎன்ஜி வாகனத்தின் சிக்கனத்தையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது. இந்த கார் 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜினை பெறுகிறது. இது ஒரு கிலோகிராம் சிஎன்ஜி-க்கு 26.99 கி.மீ எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆரம்பத்தில் சிஎன்ஜி கார்கள் அதிகமாக டாக்ஸி (Taxi) உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக சிஎன்ஜி கார்கள் அதிகமாக தனிநபர் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட துவங்கியுள்ளன. அவ்வாறு 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சிஎன்ஜி கார்களாக மேலே கூறப்பட்டு உள்ளவற்றின் மைலேஜ் ஆக குறிப்பிடப்பட்டு இருப்பது பல்வேறு காரணிகளை பொறுத்து மாறுப்பட கூடும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 10, 2025, 5:00 [IST]
English summary
Best cng cars under priced 10 lakhs in india maruti suzuki swift and tata tiago
மேலும்... #cng car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X