பணம் ஒன்னும் மரத்துல காய்க்கல... ரூ.10 லட்சத்திற்குள் இத்தனை SUV கார்கள் கிடைக்கும்போது எதுக்கு கவலை?
இந்தியாவில் எஸ்யூவி (SUV) கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனெனில், தாழ்வான கார்களை காட்டிலும் நன்கு நிமிர்ந்த உடலமைப்புடன், விசாலமான கேபின் உடன் கார் வாங்கவே இன்றைய கால கஸ்டமர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றன.
அவ்வாறு அறிமுகம் செய்யப்படும் எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான வகைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும். 4.1 மீட்டர்களில் இருந்து 4.5 மீட்டர் வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் எனப்படுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய சிறந்த கார் மாடல்கள் சிலவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா நெக்ஸான் (Tata Punch): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பான காம்பெக்ட் எஸ்யூவி காராக நெக்ஸான் விளங்குகிறது. பாதுகாப்பான கார் என ஏன் இங்கே நாங்கள் குறிப்பிடுகிறோம் என்றால், குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Global NCAP Crash Test) 5க்கு முழு 5 நட்சத்திரங்களை பெற்ற காராக நெக்ஸான் விளங்குகிறது.
பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமின்றி, எலக்ட்ரிக்கிலும் நெக்ஸான் கிடைக்கிறது. ஆனால், நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. பல்வேறு விதமான பவர்டிரெயின் (Powertrain) ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுவதினாலேயே கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக நெக்ஸான் விளங்குகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் வெர்சனாக கடந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ்யூவி300 காரை காட்டிலும் மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காம்பெக்ட் எஸ்யூவி காரும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற கார் ஆகும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): நீடித்து உழைக்கும் தன்மைக்கும், மேம்பட்ட செயல்படுதிறனுக்கும் பெயர் பெற்றது, பிரெஸ்ஸா ஆகும். விட்டாரா பிரெஸ்ஸா என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்ட சமயத்திலேயே சிறப்பாக விற்பனையாகி வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): நெக்ஸான், பிரெஸ்ஸா கார்களை போன்று ஹூண்டாயில் எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்கு வென்யூ சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில், கிரெட்டாவின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும் வென்யூ ஆனது இந்தியர்கள் பலரது நம்பிக்கைக்குரிய காராக பல விஷயங்களில் விளங்குகிறது. வென்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.44 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டாடா பஞ்ச் (Tata Punch): பஞ்ச் ஆனது காம்பெக்ட் எஸ்யூவி கார் கிடையாது; அதனை காட்டிலும் அளவில் சிறியதான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும். அளவில் சிறியதாக இருப்பினும், இந்தியாவில் பல காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக பஞ்ச் விளங்குகிறது. அந்த அளவிற்கு இந்தியர்கள் மிகவும் விரும்பி வாங்கும் எஸ்யூவி காராக பஞ்ச் விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.10 லட்சத்திற்குள் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறைவானவையே இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏனெனில், காரின் நீளம் அதிகரிக்க, அதிகரிக்க அதற்கேற்ப காரின் விலையும் அதிகமாக உள்ளது. இதனாலேயே இந்த லிஸ்ட்டில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான டாடா பஞ்ச் காரை சேர்த்துள்ளோம்.


Click it and Unblock the Notifications









