டீசல் கார்களை வாங்கலாம்னு சொல்றது இதுக்குதான்! 10 லட்ச ரூபாய் தான் உங்க பட்ஜெட்டா?

இந்தியச் சந்தையில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் அதிக டார்க் (Torque) கொண்ட டீசல் எஸ்யூவி (Diesel SUV) கார்களைத் தேடுபவர்களுக்கு சில சிறந்த தேர்வுகள் உள்ளன. இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV300) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) கார்கள் வலுவான செயல்திறனுடன் முன்னிலை வகிக்கின்றன.

இவை முறையே 300 என்.எம் (Nm) மற்றும் 260என்எம் என்கிற உச்சப்பட்ச டார்க்கை வழங்குகின்றன. இவை உள்பட இன்னும் சில கார்களும் சிறந்த டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய டீசல் என்ஜின் உடன் வருகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best diesel cars with highest torque

மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo): இந்த மஹிந்திரா காரும் 260என்எம் என்கிற சிறந்த டார்க் திறன் உடன் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு கார் ஆகும். 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது. இந்த டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 100பிஎஸ் குதிரையாற்றலையும், 260என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த எஸ்யூவி (SUV) கார் ஏழு பயணிகள் அமரக்கூடிய இடவசதியுடன் அதிக டார்க் திறனை வழங்குகிறது. முன்பு விற்பனையில் இருந்த டியூவி300 (TUV300) காரின் பரிணாம வளர்ச்சியாக சில வருடங்களுக்கு முன் பொலிரோ நியோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் என்4 (N4) வேரியண்ட் 10 லட்சம் ரூபாய் வரம்பிற்குள் வருகிறது.

best diesel cars with highest torque

கியா சொனெட் (Kia Sonet): 240என்எம் டார்க் திறனை வழங்கும் டீசல் என்ஜின் உடன் இந்த வரிசையில் மற்றொரு சக்திவாய்ந்த போட்டியாளராக சொனெட் உள்ளது. இந்த கியா காரின் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 100பிஎஸ் ஆற்றலையும், 240என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

இதன் எண்ட்ரீ-லெவல் மற்றும் மிட் வேரியண்ட்கள் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகின்றன. இந்த கியர்பாக்ஸ் ஆனது சிறப்பான டார்க் விநியோகத்தை உறுதி செய்கிறது. கியா சொனெட் டீசல் காரின் மிட் வேரியண்ட்களை 10 லட்சம் ரூபாய் விலைக்குள் வாங்க முடியும்.

best diesel cars with highest torque

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ: இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது 117பிஎஸ் ஆற்றலையும், 300என்எம் வரையிலான உச்சப்பட்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த மஹிந்திரா காம்பாக்ட் எஸ்யூவி கார் அதன் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக பாராட்டப்படுகிறது.

குளோபல் என்சிஏபி (Global NCAP) பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ள எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் சில டீசல் வேரியண்ட்கள் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கின்றன. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக கடந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

best diesel cars with highest torque

டாடா நெக்ஸான்: 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினுடன் வருகிறது. இது 110எச்பி சக்தியையும், 260என்.எம் என்கிற உச்ச டார்க்கையும் வழங்குகிறது. இதன் சிறப்பம்சங்களில் தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்கள், 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் பல்துறை ஓட்டுநர் அனுபவத்திற்கான டிரைவ் மோடுகள் ஆகியவை அடங்கும். நெக்ஸான் டீசல் வேரியண்ட்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎஸ்6 (BS6) விதிமுறைகளினால் பெட்ரோல் என்ஜின் கார்களின் பயன்பாடு சமீப ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இருப்பினும், டீசல் கார்கள் மீதான ஈர்ப்பு இப்போதும் உள்ளது. அத்தகையவர்களுள் ஒருவராக நீங்கள் இருந்தால், மேற்கூறப்பட்ட அதிக டார்க் திறன் வழங்கும் டீசல் கார்களுள் ஒன்றை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2025, 5:00 [IST]
English summary
Best diesel cars with highest torque under 10 lakhs mahindra xuv3xo and tata nexon
மேலும்... #diesel cars #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X