10 லட்ச ரூபாய்க்குள் எலக்ட்ரிக் கார்கள் கிடைப்பதே பலருக்கு தெரியல! விலையை பார்த்து எடை போடாதீங்க!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மூன்று முதன்மையான எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) எம்ஜி கோமெட் இவி (MG Comet EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா பன்ச் இவி (Tata Punch EV) என்பன ஆகும்.

டாடா பன்ச் இவி மற்றும் டியாகோ இவி எலக்ட்ரிக் கார்களின் டாப்-எண்ட் வேரியண்ட்கள் பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் கிடைத்தாலும், அவற்றின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் இந்த பட்ஜெட்டிற்குள் வருகின்றன. இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் இந்த மூன்று எலக்ட்ரிக் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best electric cars priced under 10 lakhs

எம்ஜி கோமெட் இவி: இரண்டு கதவுகள் மட்டுமே கொண்ட சிறிய அளவிலான ஹேட்ச்பேக் வகையைச் சேர்ந்த எலக்ட்ரிக் கார் இதுவாகும். நகர்ப்புற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.6.24 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 17.3kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இது ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 230கிமீ வரை செல்லும் என எம்ஜி கூறுகிறது.

இந்த காரின் உட்புறத்தில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே கொண்ட இரட்டைத் திரை அமைப்பு உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், நான்கு பேர் அமரக்கூடிய வசதியுடன், பின் இருக்கைகளுக்கு எளிதாகச் செல்ல முன்பக்க இருக்கைகள் சாய்ந்து நகரும் வசதியைக் கொண்டுள்ளன. நகர்ப்புற பயணிகளுக்கும், பட்ஜெட் விலையில் ஒரு சிறிய காரை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

best electric cars priced under 10 lakhs

டாடா டியாகோ இவி: டாடா நிறுவனத்தின் நான்கு கதவுகள் கொண்ட எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இதுவாகும். இதன் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்கள் பத்து லட்ச ரூபாய்க்குள் கிடைக்கிறது. விலை குறைவான எண்ட்ரீ-லெவல் எக்ஸ்.இ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

19.2kWh பேட்டரியுடன் வரும் இந்த எலக்ட்ரிக் கார் 250கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது. இது டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஏற்பதால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே 10% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும்.

best electric cars priced under 10 lakhs

ஏழு அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன் வரும் டியாகோ இவி கார் "சிட்டி" மற்றும் "ஸ்போர்ட்" என இரு டிரைவிங் மோட்களை வழங்குகிறது. எம்ஜி கோமெட் இவியை விட நடைமுறைப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற நான்கு கதவுகள் கொண்ட எலக்ட்ரிக் காரை விரும்புபவர்களுக்கும், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை எதிர்பார்ப்பவர்களுக்கும் டியாகோ இவி சிறந்த தேர்வாகும்.

டாடா பன்ச் இவி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டி.இவி (Acti.ev) பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட ஒரு மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) ரக கார் பன்ச் இவி ஆகும். இதன் ஸ்மார்ட் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் 25kWh பேட்டரி பொருத்தப்படுகிறது.

best electric cars priced under 10 lakhs

இது 315 கி.மீ. வரை ரேஞ்ச் வழங்கும் என டாடா நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 190மிமீ உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸை (தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம்) கொண்டுள்ளது. இதனால் கரடுமுரடான சாலைகளிலும் இந்த எலக்ட்ரிக் காரில் எளிதாகச் செல்ல முடியும்.

"சிட்டி", "ஈக்கோ" மற்றும் "ஸ்போர்ட்" என 3 டிரைவிங் மோட்களை இந்த கார் வழங்குகிறது. பன்ச் இவி பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆதலால், எஸ்யூவியின் உறுதியான கட்டமைப்பையும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸையும் விரும்புபவர்களுக்கு பன்ச் இவி ஒரு சிறந்த தேர்வாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல மார்க்கெட் பெரியதாகி வருகிறது. இதனால், கார் நிறுவனங்கள் முடிந்தவரையில் பலரால் வாங்கக்கூடிய விலையில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றன. அந்த வகையில், ரூ.10 லட்சத்திற்குள் விற்பனையில் இருக்கும் இந்த மூன்று எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றை விருப்பப்படுபவர்கள் வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 24, 2025, 5:00 [IST]
English summary
Best electric cars under price 10 lakhs in india mg comet ev tata tiago ev and punch ev
மேலும்... #electric car #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X