10 லட்ச ரூபாயில் கார் வாங்கும்போது இதை நோட் பண்ணுங்க! நிறைய பேருக்கு வித்தியாசம் தெரியுறது இல்ல!

இந்தியச் சந்தையில், ரூ.10 லட்சம் வரையிலான விலையில் ஏராளமான முன் சக்கர-டிரைவ் (FWD) கார்கள் கிடைக்கின்றன. ஹேட்ச்பேக்குகள், காம்பாக்ட் செடான்கள் மற்றும் எஸ்யூவி கார்கள் எனப் பல வகைகளில் மாருதி, டாடா, ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரபல மாடல்கள் இந்தப் பிரிவில் உள்ளன. எரிபொருள் சிக்கனமான நகர்ப்புறக் கார்கள் முதல் பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கார்கள் வரை இதில் அடங்குகின்றன. இந்த விலை வரம்பிற்குள் வரும் சில சிறந்த FWD கார்களை இங்கு காணலாம்.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்: ஸ்விஃப்ட் ஒரு ஸ்டைலான மற்றும் பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இது அதன் துடிப்பான செயல்திறன் மற்றும் சிறந்த மறுவிற்பனை மதிப்புக்கு பெயர் பெற்றது. 2024 ஸ்விஃப்ட் மாடலில், ஆறு ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்ட பிறகு, குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

மாருதி சுஸுகி பலேனோ: ஸ்விஃப்ட்டை போன்று பலேனோவும் ஒரு ஹேட்ச்பேக் கார் தான். ஆனால், பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக விற்பனை செய்யப்படுகிறது. ஸ்விஃப்ட்டை விட அதிக இடவசதியையும், அம்சங்களையும் கொண்ட கேபினை இது வழங்குகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார் 339 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

டாடா அல்ட்ரோஸ்: மேலே கண்ட பலேனோவுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் அல்ட்ரோஸ் அதன் உறுதியான கட்டுமானத் தரம் மற்றும் பிரீமியம் தரத்திலான உட்புற அம்சங்களுக்குப் பெயர் பெற்றது. இது ஒரு மென்மையான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. மேலும், பாதுகாப்பிற்கான குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டிலும் 5 நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

மாருதி சுஸுகி டிசையர்: இவ்வளவு நேரம் முன் சக்கர டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கும் ஹேட்ச்பேக் கார்களை பார்த்து வந்த நிலையில், தற்போது செடான் கார்களை பார்க்கலாம். இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் எரிபொருள் சிக்கனமான செடான் கார், டிசையர் ஆகும். வசதியான கேபின் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகளைக் கொண்டுள்ள டிசையர், சமீபத்திய அப்டேட்டின் மூலம் 5 நட்சத்திர குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டையும், ஆறு ஏர்பேக்குகளையும் பெற்றுள்ளது.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

டாடா டிகோர்: டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் அதே பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டு, பாதுகாப்புமிக்க மற்றும் ரீ-சேல் மதிப்பை கொண்ட ஒரு பட்ஜெட்-ஃப்ரெண்ட்லி செடான் காராக டிகோர் விளங்குகிறது. பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக இது 4 நட்சத்திர குளோபல் என்சிஏபி மதிப்பீட்டைப் பெற்று உள்ளது.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

ஹூண்டாய் அவ்ரா: மென்மையான என்ஜின் மற்றும் வசதியான உட்புறங்களுக்காக அறியப்படும் ஒரு சுத்திகரிக்கப்பட்ட காம்பாக்ட் செடான் கார் இது ஆகும். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் உடன் வரும் அவ்ரா காரில் குறைந்த இயக்கச் செலவுகளுக்காக தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் வழங்கப்படுகிறது.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

டாடா பன்ச்: டாடா மோட்டார்ஸின் மைக்ரோ-எஸ்யூவி காரான டாடா பன்ச், உறுதியான தோற்றத்தையும், வலுவான பாதுகாப்பு அம்சங்களையும் ஒரு காம்பாக்ட் பேக்கேஜில் வழங்குகிறது. மற்ற டாடா கார்களை போன்று பன்ச் காரும் பயணிகளின் பாதுகாப்பிற்காக 5 நட்சத்திர குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

நிசான் மேக்னைட்: நிசானில் இருந்து ஒரு மலிவான மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி கார் இது ஆகும். கொடுக்கும் பணத்திற்கான மதிப்புக்கு மேக்னைட் தனித்து நிற்கிறது. 4 நட்சத்திர குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ள இந்த கார் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கிறது.

front-wheel-drive cars priced under 10 lakhs rupees

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ: மஹிந்திராவின் இந்த காம்பாக்ட் எஸ்யூவி அதன் பிரீமியம் தரத்திலான அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த என்ஜினுக்காக அறியப்படுகிறது. 5 நட்சத்திர குளோபல் என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ள எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் டாப் வேரியண்ட்கள் லெவல் 2 ADAS அம்சங்களையும் வழங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன் சக்கர டிரைவ் சிஸ்டம் ஆனது காரின் மைலேஜை அதிகரிக்கப்பது மட்டுமின்றி, வழுக்கக்கூடிய சாலைகளிலும் சிறந்த டிராக்‌ஷன் கண்ட்ரோலை வழங்குகிறது. இத்தகைய அம்சத்துடன் ரூ.10 லட்சத்திற்குள் FWD இத்தனை கார்கள் கிடைப்பது சிறப்பான விஷயம் ஆகும். இதன் மூலமாக, மிடில்-கிளாஸ் மக்களும் முன்-சக்கர-டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களை பயன்படுத்த முடியும். மேலும், இந்த கார்களில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் எந்த குறையும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, October 18, 2025, 5:00 [IST]
English summary
Best front wheel drive cars in india priced under 10 lakhs maruti suzuki swift and baleno
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X