ரூ.10 லட்சத்தில் கார் வாங்குபவர்களில் பலரது சாய்ஸ் இதில் ஒன்றாகவே இருக்கும்! லட்சக்கணக்கான மக்கள் வாங்குறாங்க!

இந்தியா உள்பட உலகளவில் கார்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. எஸ்யூவி (SUV), செடான் (Sedan) என்பன அவற்றுள் முக்கியமானவை ஆகும். இந்த வகையில், ஹேட்ச்பேக் (Hatchback) என்கிற உடலமைப்பிலும் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதால், ஹேட்ச்பேக் கார்கள் ஏழைகளுக்கு ஏற்ற நெல்லிக்கனியாக விளங்குகின்றன. அவ்வாறு ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை (Ex-showroom Price) கொண்ட சில சிறந்த ஹேட்ச்பேக் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): இந்த லிஸ்ட்டில் நாம் முதலாவதாக பார்க்கும் அளவிற்கு சூப்பரான கார், பலேனோ ஆகும். சற்று பிரீமியம் தரத்திலான டிசைனில் உருவாக்கப்பட்டாலும், பலேனோவின் சில வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் கீழ் உள்ளன. மற்ற மாருதி கார்களை போன்று அதிக மைலேஜ் (Mileage) வழங்குவதுடன், சவுகரியமான பயணம் மற்றும் தொழிற்நுட்ப வசதிகள் அடங்கியதாக பலேனோ உருவாக்கப்படுகிறது.

best hatchback cars priced under rupees 10 lakh

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): மாருதி சுஸுகி பலேனோ காரை போன்று பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக டாடா அல்ட்ராஸ் விளங்குகிறது. இருப்பினும், இந்த டாடா காரின் சில வேரியண்ட்களும் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன. ஆனால், பலேனோவில் கூட இல்லாத ஒரு சிறப்பம்சம் அல்ட்ராஸ் காரில் உள்ளது. அதுதான், 5-ஸ்டார் ரேட்டிங் (Rating) ஆகும்.

best hatchback cars priced under rupees 10 lakh

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவில் முதல்முறையாக கார் வாங்குபவர்களில் பலர் விரும்பி வாங்கக்கூடியது, ஸ்விஃப்ட் ஆகும். அந்த அளவிற்கு, ஒரு சமயத்தில் மாருதி ஆல்டோ கார் இருந்தது போல், கடந்த சில வருடங்களாகவே ஸ்விஃப்ட் காருக்கு மக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. மாருதியின் அளவில் சிறியதான & எடை குறைவான ஹேட்ச்பேக் காராக விளங்கும் ஸ்விஃப்ட்டில் அதற்கேற்ப ஹேண்ட்லிங்கும் சிறப்பாக உள்ளது.

best hatchback cars priced under rupees 10 lakh

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): பலேனோ, அல்ட்ராஸ் கார்களுக்கு போட்டியாக ஹூண்டாயில் இருந்து விற்பனை செய்யப்படும் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காராக ஐ20 விளங்குகிறது. இதனாலேயே, மாருதி & டாடா கார்களுக்கு இணையான ஸ்டைலிஷான தோற்றத்தில், தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்ததாக ஐ20 உருவாக்கப்படுகிறது. ஐ20 காரிலும் ஆரம்ப-நிலை வேரியண்ட்களின் விலைகள் மட்டுமே ரூ.10 லட்சத்திற்கும் கீழ் உள்ளன.

best hatchback cars priced under rupees 10 lakh

சிட்ரோன் சி3 (Citroen C3): குறைந்த விலையில், ஸ்டைலிஷான தோற்றத்தில் ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்புபவர்களுக்கு சிட்ரோன் சி3 ஆனது சரியான தேர்வாக இருக்கும். ஹேட்ச்பேக் கார் என சொன்னாலும், இந்த சிட்ரோன் கார் எஸ்யூவி கார்களை போன்று உயரமான தோற்றம் கொண்டதாக உள்ளது. இதனாலேயே சிட்ரோன் சி3 ஹேட்ச்பேக் காரில் மிகவும் சவுகரியமான பயணத்தை பெறலாம்.

best hatchback cars priced under rupees 10 lakh

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): ஐ20 காரை காட்டிலும் குறைந்த விலையில் ஹூண்டாய் விற்பனை செய்யும் ஹேட்ச்பேக் கார், கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். அதற்கேற்ப போதுமான அடிப்படை வசதிகள் உடன் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் உருவாக்கப்படுகிறது. மேலும், இந்த ஹூண்டாய் காரில் மைலேஜும் சிறப்பாக கிடைக்கிறது.

best hatchback cars priced under rupees 10 lakh

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹேட்ச்பேக் கார்களில் போதுமான அளவிற்கு இடவசதியும் கிடைக்கும்; அதேநேரம் செடான் கார்களில் கிடைப்பது போன்று ஏற்கக்கூடிய மைலேஜும் கிடைக்கும். இதனாலேயே, ஹேட்ச்பேக் கார்களை அதிகமாக மிடில்-கிளாஸ் (Middle-Class) மக்கள் வாங்குகின்றனர். இந்தியாவில் இன்னும் பல ஹேட்ச்பேக் ரக கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன, அவற்றுள் சிறந்தவற்றை பற்றி மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 8, 2025, 23:04 [IST]
English summary
Best hatchback cars in india priced under rupees 10 lakh check full list here
மேலும்... #hatchback car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X