மக்கள் அதிகம் பேர் வாங்கும் ஹேட்ச்பேக் காரில் ஒன்றை வாங்க விரும்புகிறீர்களா? இவை எல்லாமே விலை 10லட்சத்திற்குள்

2025 நவம்பர் மாதத்தில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையிலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் பிரிவில், மாருதி சுஸுகி மற்றும் டாடா நிறுவன கார் மாடல்களின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிந்தது. குறிப்பாக, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆகிய ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன. கடந்த மாத விற்பனையில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை விவரங்கள் இதோ...

best hatchback cars priced under 10 lakh rupees

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): 2025 நவம்பர் மாதத்தில் சுமார் 19,733 யூனிட்கள் விற்பனையாகி, ஸ்விஃப்ட் இந்த வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் விலை ரூ.5.79 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. ஸ்போர்ட்டியான டிசைன் மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் நகரப் பயணங்களுக்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன், இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள் கிடைக்கிறது.

best hatchback cars priced under 10 lakh rupees

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR): நீண்டகாலமாகவே பலரால் விரும்பப்படும் மாருதி ஹேட்ச்பேக் காரான வேகன் ஆர், கடந்த நவம்பரில் சுமார் 14,619 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.95 லட்சம் வரை உள்ளது. இதன் "டால்-பாய்" டிசைன் விசாலமான கேபினையும், அதிக ஹெட்ரூமையும் வழங்குகிறது.

best hatchback cars priced under 10 lakh rupees

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno): பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில், பலேனோ 2025 நவம்பரில் தோராயமாக 13,784 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.10 லட்சம் வரையிலான (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் இந்த கார், 9-இன்ச் 'ஸ்மார்ட்பிளே புரோ+' (SmartPlay Pro+) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

best hatchback cars priced under 10 lakh rupees

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki K10): பல ஆண்டுகளாக முதல்முறையாக கார் வாங்குபவர்களின் தேர்வாக உள்ள ஆல்டோ, கடந்த நவம்பரில் சுமார் 10,600 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கே10 என அழைப்பதற்கு ஏற்ப ஒரேயொரு கே10 பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.70 லட்சம் முதல் ரூ.5.45 லட்சம் வரை உள்ளன.

best hatchback cars priced under 10 lakh rupees

டாடா டியாகோ (Tata Tiago): மாருதி அல்லாத போட்டியாளர்களில் டாடா டியாகோ வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. நவம்பரில் இதன் விற்பனை சுமார் 5,988 யூனிட்களாக பதிவாகியுள்ளது. ரூ.4.57 லட்சம் முதல் ரூ.7.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் இது கிடைக்கிறது. பிரிவிலேயே பாதுகாப்பான கார்களில் ஒன்றாகத் திகழும் டியாகோ, பிரீமியம் தரத்திலான கேபின் அனுபவத்தை வழங்குகிறது.

best hatchback cars priced under 10 lakh rupees

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): 2025 நவம்பர் மாதத்தில் 4,559 யூனிட்கள் விற்பனையாகி, கிராண்ட் i10 நியோஸ் நகர்ப்புறவாசிகளுக்கு மிகவும் ஏற்ற ஹேட்ச்பேக்காக உள்ளது. இதன் விலை ரூ.5.47 லட்சம் முதல் ரூ.7.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. தரமான உட்புற வடிவமைப்பிற்கும், 20.25 செமீ (8-இன்ச்) டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின் ஏசி வென்ட்கள் போன்ற அதிக வசதிகளுக்கும் இது பெயர் பெற்றது.

best hatchback cars priced under 10 lakh rupees

டொயோட்டா கிளான்சா (Toyota Glanza): டொயோட்டாவின் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற கிளான்சா, மாருதி சுஸுகி பலேனோவின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். 2025 நவம்பரில் 5,032 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.39 லட்சம் முதல் ரூ.9.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. பலேனோவுடன் பெரும்பாலான அம்சங்களை இந்த கார் பகிர்ந்து கொள்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிமிர்ந்த எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கும், தாழ்வான செடான் கார்களுக்கும் இடைப்பட்டவையாக ஹேட்ச்பேக் ரக கார்கள் விளங்குகின்றன. குறிப்பாக, பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார்கள் இந்த வடிவத்தில்தான் உள்ளன. எனவே, இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை சில மாடல்கள் தான். இவற்றை காட்டிலும் குறைந்த எண்ணிக்கையில் இன்னும் பல ஹேட்ச்பேக் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 13, 2025, 5:00 [IST]
English summary
Best hatchback cars priced under 10 lakhs that sold most in november maruti suzuki swift wagonr
மேலும்... #hatchback car #car sales #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X