காரில் 6 ஏர்பேக்ஸ் இருந்தால் எமனுக்கே சவால் விடலாம்! ரூ.10 லட்சத்திற்குள் வாங்கிடலாம்னு சொன்னா நம்ப முடியுதா?
ஏர்பேக்குகள் (Airbags), இன்றைய கால கார்களில் அத்தியாவசியமானதாக மாறிவிட்ட அம்சங்கள் ஆகும். ஆரம்பத்தில் இரு ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கார்களில் 6 ஏர்பேக்குகளை வழங்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை அடுத்து பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்ட் அம்சமாக மாற்றி உள்ளன. அந்த வகையில், 6 ஏர்பேக்குகள் உடன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் கார்களுள் சிறந்த சிலவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே சிறப்பாக விற்பனையாகி வரும் கார், ஸ்விஃப்ட் ஆகும். மாருதி சுஸுகியின் அளவில் சிறியதான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான ஸ்விஃப்ட்டில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்விஃப்ட் காரில் 6 ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): ஸ்விஃப்ட் காரை போன்று குறைந்த விலையில் கிடைக்கும் ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார், கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். ஆனால், ஸ்விஃப்ட் காரை விடவும் பாதுகாப்பான காராக விளங்கும் கிராண்ட் ஐ10 நியோஸிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்ட்டான அம்சமாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, ஆல்டோ ஆகும். கடந்த காலங்களில் இருந்து பல்வேறு விதமான பெயர்களில் அழைக்கப்பட்டுவரும் ஆல்டோ கார்கள் தற்சமயம் ஆல்டோ கே10 என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஆல்டோ கே10 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): தற்சமயம் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் தரமான எஸ்யூவி கார்களுள் நெக்ஸானும் ஒன்றாகும். நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்களும் ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பது இல்லை. ஆனால், நெக்ஸானின் சில எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன. பாதுகாப்பு மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

நிஸான் மேக்னைட் (Nissan Magnite): ஜப்பானிய ஸ்டைலில் எஸ்யூவி கார் வாங்க விரும்புபவர்களுக்கு மேக்னைட் ஏற்றதாக இருக்கும். நிஸானில் இருந்து இந்தியாவில் தற்போதைக்கு வெறும் இரு கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் மேக்னைட் ஆகும். நெக்ஸானை போல், மேக்னைட்டின் சில வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் (Ex-showroom Prices) ரூ.10 லட்சத்தை தாண்டி செல்கின்றன.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20): மேலே குறிப்பிடப்பட்ட கார்களை காட்டிலும் ஸ்டைலிஷான தோற்றத்தில் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு ஐ20 ஏற்றதாக இருக்கும். அதற்கேற்ப, இந்த ஹூண்டாய் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் விலைகள் ரூ.10 லட்சத்தை தாண்டி செல்கின்றன. இருப்பினும், ரூ.10 லட்சத்திற்குள் 6 ஏர்பேக்குகள் உடன் ஐ20 காரை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இன்றைய கால கார்களில் ஏர்பேக்குகள் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக, விபத்துகளில் உயிரிழப்புகளை ஏர்பேக்குகள் குறைக்கின்றன என்பது எப்போது உறுதியானதோ அப்போதில் இருந்து மக்கள் மட்டுமின்றி அரசாங்கமும் அதிக எண்ணிக்கைகளில் ஏர்பேக்குகளை கார்களில் வழங்குவதை ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலமாக, 6 ஏர்பேக்குகள் ஒரு காலத்தில் விலையுயர்ந்த கார்களில் மட்டுமே வழங்கப்பட்ட காலம் மாறி, இப்போது ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்களில் கூட 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









