கைமேல் பலன் கிடைக்கும்... கார் டாக்ஸி தொழிலை ஆரம்பிக்கும் முன்ன எந்த காரை தேர்வு செய்வதுனு தெளிவு வேணும்!
இந்தியா, உலகின் மிக பெரும் கார் டாக்ஸி (Car Taxi) நெட்வொர்க்கை கொண்ட நாடுகளுள் ஒன்று என சொன்னால் அது மிகையில்லை. இதனாலேயே சில கார் நிறுவனங்கள் கார் டாக்ஸி தொழிலுக்காக என்றே பிரத்யேக கார்களை உருவாக்கி வழங்குகின்றன. கார்களில் சிஎன்ஜி பவர்டிரெயின் (Powertrain) ஆப்ஷன் கொண்டுவரப்பட்டது கூட டாக்ஸி தொழிலை மனதில் வைத்தே ஆகும். இத்தகைய கார் டாக்ஸி தொழிலுக்காக இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய, அதிக மைலேஜை வழங்கக்கூடிய கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மாருதி சுஸுகி டிசைர் (டூர் எஸ்) (Maruti Suzuki Dzire (Tour S)): கார் டாக்ஸி தொழிலுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார் இதுவாகும். பெட்ரோல், சிஎன்ஜி (CNG) என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரில் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் 23.15kmpl வரையிலான மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷனில் 32.12kmpkg வரையிலான மைலேஜையும் பெற முடிகிறது. டிசைர் டூர் எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.5 லட்சத்தில் இருந்து ரூ.9.3 லட்சம் வரையில் உள்ளன.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (டூர் எச்1) (Maruti Suzuki Alto K10 (Tour H1)): மாருதி சுஸுகியில் இருந்து மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஆல்டோ கே10 கார் ஆனது கார் டாக்ஸி தொழிலுக்காக டூர் எச்1 என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. டிசைர் டூர் எஸ் காரில் பொருத்தப்படும் அதே பெட்ரோல் என்ஜின் & சிஎன்ஜி ஆப்ஷன் தான் இந்த காரிலும் பொருத்தப்படுகிறது என்றாலும், டூர் எச்1 காரின் எடை குறைவு என்பதால் கூடுதல் மைலேஜை பெறலாம்.

மாருதி சுஸுகி செலேரியோ (Maruti Suzuki Celerio): குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மற்றொரு மாருதி கார் இதுவாகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கும் செலேரியோ காரில் பெட்ரோல் என்ஜினில் 24.9kmpl வரையிலான மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷனில் 34.4kmpkg வரையிலான மைலேஜையும் பெற முடிகிறது. இந்த மாருதி ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.3 லட்சத்தில் இருந்து ரூ.7.1 லட்சம் வரையில் உள்ளன.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (டூர் எச்3) (Maruti Suzuki WagonR (Tour H3)): பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் மற்றொரு மாருதி கார் இதுவாகும். டூர் எச்3 என்கிற பெயரில் கார் டாக்ஸி தொழிலுக்காக விற்பனை செய்யப்படும் இந்த காரில் 25.4kmpl மைலேஜை பெட்ரோல் என்ஜினிலும், 34.4kmpkg மைலேஜை சிஎன்ஜி ஆப்ஷனிலும் பெறலாம்.

மாருதி சுஸுகி எர்டிகா (டூர் எம்) (Maruti Suzuki Ertiga (Tour M)): இந்த வரிசையில் நாம் பார்க்க போகும் மற்றொரு மாருதி கார் இதுவாகும். ஆனால், நாம் பார்த்த மாருதி கார்களிலேயே அளவில் பெரியது. கார் டாக்ஸி தொழிலுக்காக பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமின்றி, சிஎன்ஜி ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது. டூர் எம் எனப்படும் எர்டிகாவில் பெட்ரோல் என்ஜினில் அதிகப்பட்சமாக 21.1kmpl மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷனில் 26.56kmpkg மைலேஜையும் பெற முடிகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா (Toyota Innova Crysta): இன்னோவா கிரிஸ்ட்டாவின் விலை குறைவான வெர்சனாக தான் மேலே கண்ட எர்டிகாவை கூறுகின்றனர். இன்னோவா கிரிஸ்ட்டாவின் விலை சற்று அதிகமாக ரூ.19.1 லட்சத்தில் இருந்து ரூ.26.3 லட்சம் வரையில் உள்ளது. இந்த டொயோட்டா எம்பிவி கார் ஆனது டீசல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 15.1kmpl மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது.

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): ஹோண்டாவில் இருந்து இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களுள் அமேஸ் ஒன்றாகும். பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த ஹோண்டா செடான் காரில் அதிகப்பட்சமாக 18.6kmpl மைலேஜை பெற முடிகிறது. அமேஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.1 லட்சத்தில் ரூ.9.9 லட்சம் வரையில் உள்ளன.

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மிகவும் சில கார்களுள் டிரைபர் ஒன்றாகும். ரெனால்ட்டின் எம்பிவி ரக காரான இது பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் மூலம் 18இல் இருந்து 20kmpl வரையிலான மைலேஜை இந்த காரில் பெற முடிகிறது.

டாடா டிகோர் (Tata Tigor): இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் செடான் ரக கார்களுள் ஒன்றான டிகோர், கார் டாக்ஸி தொழிலுக்காக பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமின்றி சிஎன்ஜி ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனை செய்யப்படும் டிகோர் காரின் மைலேஜ் ஆனது பெட்ரோல் என்ஜின் உடன் 19.6kmpl மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் 28kmpkg ஆகும்.

டாடா டியாகோ (Tata Tiago): டாடா மோட்டார்ஸின் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக காரான டியாகோவிலும் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் என்ஜினில் இந்த காரில் 20kmpl மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷனில் 28kmpkg மைலேஜையும் பெறலாம். டியாகோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.6 லட்சத்தில் இருந்து ரூ.8.9 லட்சம் வரையில் உள்ளன.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): மாருதி டிசைர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கும் அவ்ரா கார் ஆனது பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த ஹூண்டாய் காரில் 20.5kmpl (பெட்ரோல் என்ஜின்) மற்றும் 28kmpkg (சிஎன்ஜி) வரையிலான மைலேஜை பெற முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் மைலேஜாக மேலே கூறப்பட்டு உள்ளவற்றை நிஜ உலகில் எட்டுவது கடினமாக இருக்கலாம். ஏனெனில், சாலையின் தரம், டிரைவிங் ஸ்டைல் என பல்வேறு விஷயங்களை பொறுத்து காரின் மைலேஜ் ஆனது மாறுப்பட கூடும். இருப்பினும், சிஎன்ஜி கார்களில் அதிகப்படியான மைலேஜை நிச்சயமாக பெறலாம். ஆதலால், கார் டாக்ஸி தொழிலுக்கு சிஎன்ஜி கார்கள் மிகவும் ஏற்றவை ஆகும்.


Click it and Unblock the Notifications









