ரூ.12 லட்சத்தை வெச்சிக்கிட்டு எந்த காரை வாங்குவது என குழம்பி போய் இருக்கீங்களா? மைலேஜ் பத்தின கவலை இல்லை!!

நாம் புதியதாக கார் வாங்கும்போது முதலாவதாக கவனிக்கக்கூடிய விஷயம், அதன் மைலேஜ் ஆகும். இந்த கார் எவ்வளவு மைலேஜ் கொடுக்கக்கூடியது என்பதை கேட்டறிந்த பின்பே, காரின் விலை என்ன என்பதை அறிய முற்படுவோம். அந்த அளவிற்கு காரின் மைலேஜ் விபரம் ஆனது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், காரை வாங்கிய பின்பு அதன் எரிபொருளுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை தீர்மானிப்பது அதன் மைலேஜ் ஆகும். பொதுவாகவே, விலை குறைவான கார்களில் அதிக மைலேஜ் கிடைப்பது வழக்கம்.

ஏனெனில், அவற்றின் எடை குறைவாக இருக்கும் மற்றும் அவற்றில் பொருத்தப்படும் என்ஜினும் சற்று ஆற்றல் குறைந்ததாக இருக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக அவற்றின் விலை குறைவானதாக இருக்கும். அதேநேரம், ரூ.12 லட்சத்திற்குள் சிறப்பான மைலேஜை தரக்கூடிய எஸ்யூவி கார்களும் மாடர்ன் தொழிற்நுட்பங்கள் உடன் கிடைக்கின்றன என சொன்னால் நம்ப முடிகிறதா? அத்தகைய எஸ்யூவி கார்களுள் சிலவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best mileage suv cars

டாடா பஞ்ச் (Tata Punch): 5 பேர் பயணிக்கக்கூடிய டாடா மோட்டார்ஸின் அளவில் சிறியதான எஸ்யூவி கார். ரூ.6.20 லட்சத்தில் இருந்து ரூ.10.32 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும் பஞ்ச் கார் ஆனது 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், பெட்ரோல் என்ஜின் உடன் அதிகப்பட்சமாக 18.8kmpl மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷனில் 26.99kmpkg வரையிலான மைலேஜையும் பெறலாம்.

டாடா பஞ்ச்சில் ஏகப்பட்ட மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

best mileage suv cars

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): டாடா பஞ்ச் காருக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும் ஹூண்டாய் கார் இதுவாகும். பஞ்ச் காருக்கு இணையாக ரூ.6.31 லட்சத்தில் இருந்து ரூ.10.51 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும் இந்த ஹூண்டாய் காரும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் பெட்ரோல் என்ஜின் ஆனது 19.2kmpl வரையிலான மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷனில் 27.1kmpkg வரையிலான மைலேஜையும் பெறலாம். எக்ஸ்டர் எஸ்யூவி காரிலும் 8 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே உள்ளிட்ட மாடர்ன் வசதிகள் வழங்கப்படுகின்றன.

best mileage suv cars

கியா சைரோஸ் (Kia Syros): கியா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார்களுள் ஒன்றான சைரோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.99 லட்சத்தில் இருந்து ரூ.17.80 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன. இந்த கியா காரில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மைலேஜ் முறையே 17.65kmpl மற்றும் 20.75kmpl ஆகும்.

best mileage suv cars

ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq): இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், கைலாக் ஆகும். ரூ.7.89 லட்சத்தில் இருந்து ரூ.14.40 லட்சம் வரையிலான விலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கைலாக் காரில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது, 15kmpl-இல் இருந்து 18kmpl வரையிலான மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது.

best mileage suv cars

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் இந்த ஹூண்டாய் காரும் ஒன்றாகும். 5 இருக்கைகளை கொண்ட கிரெட்டா எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மைலேஜ் ஆனது 17.4kmpl-இல் இருந்து 21.8kmpl வரையில் கிடைக்கிறது.

best mileage suv cars

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): மாருதி சுஸுகியின் பிரபலமான பலேனோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிராஸ்ஓவர் கார், ஃபிரான்க்ஸ் ஆகும். ரூ.7.51 லட்சத்தில் இருந்து ரூ.13.04 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும் ஃபிரான்க்ஸ் காரில் இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் ஒரு சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம், 20.1kmpl-இல் இருந்து 28.51kmpl வரையிலான மைலேஜை பெறலாம்.

best mileage suv cars

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): இந்தியாவின் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்று. ரூ.8.69 லட்சம்- ரூ.14.14 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும் பிரெஸ்ஸா கார் ஆனது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் 17.38kmpl-இல் இருந்து 25.51kmpl வரையிலான மைலேஜை பெறலாம்.

best mileage suv cars

ஹோண்டா எலிவேட் (Honda Elevate): இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் மிகவும் சில ஹோண்டா கார்களுள் இதுவும் ஒன்றாகும். ரூ.11.91 லட்சம்- ரூ.16.73 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் இந்த ஹோண்டா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது 15.31kmpl-இல் இருந்து 16.92kmpl வரையிலான மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை தான் தற்போதைக்கு இந்திய மார்க்கெட்டில் அதிக மைலேஜை வழங்கக்கூடிய எஸ்யூவி கார்கள் ஆகும். இவற்றில் பல கார்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் கார்களாக இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். ஆக... இந்த கார்களுள் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம் ரூ.12 லட்சத்திற்குள் லேட்டஸ்ட் கார் ஒன்றை வாங்க முடியும்.

இந்த எஸ்யூவி கார்களின் மைலேஜாக மேலே குறிப்பிடப்பட்டவை ARAI மூலமாக ஆய்வு செய்யப்பட்டதில் பெறப்பட்ட விபரங்கள் ஆகும். அதாவது, ஓர் மூடிய வளாகத்திற்குள் புத்தம் புதியதாக காரை ஓட்டிப் பார்க்கப்பட்டு பெறப்பட்ட மைலேஜ் விபரங்கள் இவை ஆகும். ஆதலால், மேற்கூறப்பட்ட மைலேஜ் விபரங்களை நிஜ உலகில் பெற முடியாமல் போகலாம்.

ஏனெனில், நிஜ உலகில் பல்வேறு காரணிகளால் கார் மட்டுமில்லாமல், எந்தவொரு வாகனத்தின் மைலேஜும் பாதிக்கப்பட கூடியது ஆகும். கார் இயங்கும் சூழல், டிரைவிங் ஸ்டைல், கார் பராமரிப்பு உள்ளிட்டவை அந்த பல்வேறு காரணிகளுள் சில ஆகும். ஆதலால், அவ்வப்போது பராமரித்து, முறையாக கார் ஓட்டினாலே மேற்கூறப்பட்ட மைலேஜில் பெரும் சதவீதத்தை நிஜ உலகில் தாராளமாக பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 31, 2025, 23:59 [IST]
English summary
Best mileage suv cars under rupees 12 lakhs in india
மேலும்... #suv car #mileage #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X