குடும்பங்களுக்கான எம்பிவி ரக கார்கள்... 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்குறதை நம்பவே முடியல!!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மல்டி பர்ப்பஸ் வாகனங்கள் (MPV) பிரிவில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) 2025 நவம்பர் மாதத்திலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது. இதன் சில உயர் வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் விலையைத் தாண்டினாலும், பட்ஜெட் விலையில் கார் வாங்குபவர்கள் மத்தியில் இதன் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. 2025 நவம்பர் மாத விற்பனை அடிப்படையில், சுமார் ரூ.10 லட்சத்திற்கு கீழ் விலையிலான வேரியண்ட்கள் கொண்ட எம்பிவி கார்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga): 2025 நவம்பர் மாதத்தில் 16,197 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 6.91% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் 'எல்.எக்ஸ்.ஐ (ஆப்ஷ்னல்) (LXi (O)) வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

இது இந்தியாவின் ஒட்டுமொத்த சிறந்த விற்பனை கொண்ட டாப் 10 கார்களில் தொடர்ந்து இடம் பிடிக்கும் ஒரே எம்பிவி கார் ஆகும். எரிபொருள் சிக்கனமான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், விசாலமான 7 இருக்கை அமைப்பு மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன் ஆகியவை இதன் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco): மாருதி சுஸுகியின் இந்த எம்பிவி வடிவமைப்பிலான வேன் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் 13,200 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 25% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.5.21 லட்சம் முதல் ரூ.6.36 லட்சம் வரை உள்ளது.

மிகவும் இறுக்கமான பட்ஜெட்டில் தங்களது குடும்பங்களுக்கான வாகனத்தை வாங்க விரும்புபவர்களுக்கு இது மலிவு விலையிலான 7 இருக்கை வாகனமாக தொடர்கிறது. பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமன்றி, கமர்ஷியல் பயன்பாட்டிற்கும் ஏற்றதாக ஈக்கோ விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் பன்முகத்தன்மை காரணமாக இது வணிக மற்றும் ஃபிலீட் துறைகளில் தவிர்க்க முடியாத தேர்வாக உள்ளது.
ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இந்த பிரெஞ்சு-ஸ்டைல் ரெனால்ட் எம்பிவி காரின் விலைகள் ரூ.5.76 லட்சம் முதல் ரூ.8.60 லட்சம் வரை உள்ளன. ரூ.10 லட்சத்திற்குக் குறைவான விலையிலான சிறந்த 7 இருக்கை கார்களில் இது தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட எம்பிவி கார்கள் பிரிவில், மாடுலர் 7 இருக்கை வசதியுடன் கூடிய மிகவும் மலிவான காராக டிரைபர் கருதப்படுகிறது.

2025 நவம்பர் மாத விற்பனையில் டாப் 10 பட்டியலில் டிரைபர் இடம்பெறவில்லை என்றாலும், இந்த 2025ஆம் ஆண்டு உள்பட வருடத்திற்கு சராசரியாக சுமார் 20,000 யூனிட்கள் விற்பனையாகி, நிலையான பிரபலத்தைத் தக்கவைத்து வருகிற
து. மேலும், இது 4-நட்சத்திர குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி எர்டிகா டூர் (Maruti Suzuki Ertiga Tour): எர்டிகா காரின் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான மாடலாக விற்பனை செய்யப்படும் எர்டிகா டூர் காரின் ஆரம்ப விலை ரூ.9.68 லட்சம் ஆகும். இது குறிப்பாக வணிக டாக்சி (Taxi) பிரிவை இலக்காகக் கொண்டுள்ளது. வணிக உரிமையாளர்களுக்கு மிகவும் கட்டுப்படியாகக்கூடிய விலையில், எர்டிகாவின் நம்பகத் தன்மையை இந்த கார் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலிவு விலை மற்றும் செயல் திறனை முதன்மைப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த எம்பிவி கார்கள் சிறந்த தேர்வுகளாக விளங்குகின்றன. இதில் குறிப்பாக, எர்டிகாவின் ஆதிக்கத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். கடந்த நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை பட்டியலில் எர்டிகா 6வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், டிரைபர் ஆனது குறைந்த விலையிலான எம்பிவி காராக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications









