ஹூண்டாய் காரால் விற்பனையில் கிட்ட கூட நெருங்க முடியல.. இந்த மாருதி காரை மட்டும் எல்லாரும் வாங்கி குவிக்குறாங்க

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் பலரால் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் கார்களை பற்றி தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த தொகுப்பில் ரூ.10 லட்சத்திற்குள்ளான விலையில் கிடைக்கும் தாழ்வான செடான் (Sedan) ரக கார்களின் கடந்த 2025 நவம்பர் மாத விற்பனை நிலவரத்தை பற்றி பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): 2025 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் செடான் கார்கள் பிரிவில் 21,082 யூனிட்டுகள் விற்று இந்த மாருதி செடான் கார் முதலிடம் பிடித்துள்ளது. அதேநேரம், இந்தியாவில் அனைத்து வகையிலான ஒட்டுமொத்த கார்களில் அதிகம் விற்பனையான காராக டாடா நெக்ஸான் (Tata Nexon)-க்கு அடுத்து இரண்டாவது இடத்தை டிசைர் பெற்றுள்ளது.

best sedan cars under 10 lakh rupee cars

ரூ.6.26 லட்சம் முதல் ரூ.9.31 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் டிசையர் எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுக்காக மிகவும் பிரபலமானது. டிசையர் சிஎன்ஜி (CNG) காரும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அதிகப்பட்சமாக 33.73 கி.மீ மைலேஜ் தரக்கூடியதாக டிசையர் சிஎன்ஜி விளங்குகிறது.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura): டிசையர் அளவிற்கு இல்லையென்றாலும், கடந்த நவம்பர் மாதத்தில் 5,731 யூனிட்கள் விற்பனையாகி, இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கார்கள் பட்டியலில் 27வது இடத்தை இந்த கார் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரை விட விற்பனையில் 35% வளர்ச்சி கண்டுள்ள அவ்ரா, ரூ.5.98 லட்சம் முதல் ரூ.8.42 லட்சம் விலையில் கிடைக்கிறது.

best sedan cars under 10 lakh rupee cars

இதன் சுத்திகரிக்கப்பட்ட என்ஜின் மற்றும் பிரீமியம் உட்புறம் தனிச் சிறப்பானது ஆகும். 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில், முன்பு விற்பனையில் இருந்த ஹூண்டாய் எக்ஸ்செண்ட் (Xcent) காருக்கு மாற்றாக அவ்ரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 4 மீட்டர் நீளம் கொண்ட இந்த கார் கடைசியாக 2023இல் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடை பெற்றது.

ஹோண்டா அமேஸ் (Honda Amaze): இந்திய சந்தையில் ஜப்பான் கார் நிறுவனமான ஹோண்டா தற்சமயம் பெரிதும் நம்பியிருக்கும் கார் இதுவாகும். அதற்கேற்ப, இந்தியாவில் ஓரளவிற்கு சிறப்பாக விற்பனையாகும் காராக அமேஸ் உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் 2,763 அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 நவம்பரில் விற்பனையான 2,628 அமேஸ் கார்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகம் என்றாலும், கடந்த அக்டோபரில் 3,630 அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

best sedan cars under 10 lakh rupee cars

ரூ.7.45 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கும் ஹோண்டா அமேஸ் நிலையான செயல்திறன் தருகிறது. 2025 நவம்பரில் அதன் உள்நாட்டு விற்பனை முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருப்பினும், பிரீமியம் உணர்வுள்ள காம்பாக்ட் செடானை விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

டாடா டிகோர் (Tata Tigor): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான செடான் ரக காரான டிகோர் கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 488 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 நவம்பரை விட இது 43.19%-மும், 2025 அக்டோபரை விட சுமார் 59.20%-மும் குறைவாகும்.

best sedan cars under 10 lakh rupee cars

ஏனெனில் அந்த மாதங்களில் முறையே 859 மற்றும் 1,196 டிகோர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதனாலேயே கடந்த மாத கார்கள் விற்பனையில் முதல் 25 இடங்களுக்குள் டிகோர் வரவில்லை என்றாலும், ரூ.5.49 லட்சம் முதல் ரூ.8.74 லட்சம் விலையில் மலிவான போட்டியாளராக உள்ளது. தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி ஆப்ஷனும் இதற்கு உண்டு.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரியும், மாருதி சுஸுகி டிசையர் எந்த அளவிற்கு பலரால் விரும்பி வாங்கப்படும் காராக உள்ளது என்பது. எந்த அளவிற்கு என்றால், இந்த லிஸ்ட்டில் முதல் இரு இடங்களில் உள்ள டிசையர் மற்றும் ஹூண்டாய் அவ்ரா கார்களுக்கு இடையேயான விற்பனை எண்ணிக்கைகள் சுமார் 15 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் வேறுப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 14, 2025, 14:40 [IST]
English summary
Best sedan cars priced under 10 lakh rupees that sold most in november 2025 maruti suzuki dzire
மேலும்... #sedan car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X