10 லட்ச ரூபாயில் கார் வாங்கி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம்! ஒவ்வொரு மாசமும் ஆயிரக்கணக்கான பேர் வாங்குறாங்க!
விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi), இன்று இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இவ்வாறான பண்டிகை சமயங்களில் புதியதாக கார் வாங்கும் எண்ணம் நம்மில் பலருக்கு உதிப்பது உண்டு. கார் நிறுவனங்களும் அதற்கேற்றாற் போன்று விற்பனையில் இருக்கும் கார்களுக்கு சலுகைகளை அறிவிக்கின்றன; மற்றும் புதியதாக ஸ்பெஷல் எடிசன் (Special Edition) கார்களை அறிமுகம் செய்கின்றன.
அவற்றின் மூலமாக கவரப்பட்டு, புதியதாக கார் வாங்க விரும்புகிறீர்களா? உயரம் அதிகம் கொண்ட எஸ்யூவி கார்களை, அளவில் சிறியதாக, ரூ.10 லட்சத்திற்குள் வாங்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு ரூ.10 லட்சத்திற்குள் விற்பனை செய்யப்படும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஏற்றவையாக இருக்கும். அவற்றுள் அதிகம் விற்பனையாகும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் சிலவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இவை 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி ரக கார்கள் ஆகும்.

டாடா பஞ்ச் (Punch): இப்படியொரு லிஸ்ட்டை பார்க்கும்போது, அதில் டாடா மோட்டார்ஸின் பஞ்ச் காரை பற்றி பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? ஏனெனில், அந்த அளவிற்கு தற்போதைய இந்திய கார்கள் மார்க்கெட்டில் பஞ்ச் தவிர்க்க முடியாத காராக உள்ளது. தற்போது இதன் விற்பனை சற்று குறைந்து இருப்பினும், கடந்த ஆண்டில் தொடர்ந்து 3 மாதங்களாக இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்தது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): பஞ்ச் காருக்கு விற்பனையில் போட்டியாக இருக்கும் ஹூண்டாய் கார் இதுவாகும். சிறப்பான தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் அதிக மைலேஜ் உள்ளிட்டவற்றின் மூலம் நகர்புறத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றதாக உள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்யும் விலை குறைவான கார்களுள் இதுவும் ஒன்றாகும்.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி கார் ஆனது பார்க்க கொஞ்சம் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் போன்றும் உள்ளது. பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமின்றி, மேற்கூறப்பட்ட பஞ்ச் & எக்ஸ்டர் கார்களை போன்று சிஎன்ஜி (CNG) ஆப்ஷனிலும் ஃபிரான்க்ஸ் கிடைக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): சமீபத்தில் மிகவும் ஸ்டைலானதாக மாறி விற்பனையில் ஜொலித்துவரும் கார் இதுவாகும். மேலும், இந்த லிஸ்ட்டில் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் மிகவும் சில கார்களுள் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஒன்றாகும். முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிசான் மேக்னைட் (Nissan Magnite): ஜப்பானிய-ஸ்டைல் எஸ்யூவி காராக இருப்பினும், முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்படும் கார் இதுவாகும். இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க பல வருடங்களாக போராடிவரும் நிசான் நிறுவனம் 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த காரான மேக்னைட்டும், விலைமிக்க எக்ஸ்-டிரைல் (X-Trail) காரும் மட்டும் தான் தற்போதைக்கு நிசானில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

ரெனால்ட் கைகர் (Renault Kiger): அளவில் சிறியதான எஸ்யூவி காராக இருப்பதாலேயே ஓரளவிற்கு சிறப்பாக விற்பனையாகி வரும் மற்றொரு கார் இதுவாகும். நிசானின் நிலைமையில் தான் ரெனால்ட்டும் இந்திய மார்க்கெட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் கார்களிலேயே விலை குறைவான கார்களுள் ஒன்றாகவும் ரெனால்ட் கைகர் விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்து வைத்து கார் வாங்குபவர்களுக்கும், முதல்முறையாக கார் வாங்கி பயன்படுத்த போகிறவர்களுக்கும் அளவில் சிறியதான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மிகவும் ஏற்றவையாக இருக்கும். அளவில் சிறிய காராக இருப்பினும், எஸ்யூவி ரக கார்கள் என்பதால் கேபினில் போதுமான இடவசதியை பெறலாம்.


Click it and Unblock the Notifications









