ரூ.10 லட்சத்திற்குள் எந்த காரை தேர்வு செய்வது என்பதுதான் குழப்பமே! எஸ்யூவி கார் வாங்க பிளான் போடுறீங்களா?

தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார்களை வாங்கிய காலம் போய் இப்போது உயரமான உடலமைப்பை கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களையே மக்கள் அதிகம் வாங்க ஆரம்பித்துள்ளனர். உயரம் அதிகமாகினால் காரின் ஏரோடைனமிக்ஸ் (Aero Dynamics) பண்பு குறையும் என்றாலும், காருக்கு உள்ளே அதிக இடவசதியை பெற முடிவதால், கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், கார் நிறுவனங்களும் மக்களின் இரசனைக்கு ஏற்ப மாறி புதியது புதியதாக எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றன. அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்யூவி கார்களுள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் சில பிரபலமான எஸ்யூவி கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

best suv cars under 10 lakh rupees

டாடா பஞ்ச் (Tata Punch): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அளவில் சிறியதான கார். அதேநேரம், அதற்கேற்ப எக்ஸ்-ஷோரூம் விலைகளையும் (Ex-showroom Prices) வெறும் ரூ.7.41 லட்சத்தில் இருந்து கொண்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் இந்தியாவிலேயே அதிகம் பேர் வாங்கக்கூடிய காராக பஞ்ச் முதலிடத்தை பிடித்தது.

best suv cars under 10 lakh rupees

கியா சொனெட் (Kia Sonet): கியா நிறுவனத்தின் கொரியன் ஸ்டைல் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான சொனெட்டின் சில வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரும் விலைகள் ரூ.10 லட்சத்தை தாண்டி செல்கின்றன. ஏறக்குறைய ரூ.10 லட்சத்தில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் சொனெட் கிடைக்கிறது. அதேநேரம், கொஞ்சம் அதிக பணத்தை செலவழிக்க தயார் என்றால், இந்த லிஸ்ட்டில் உள்ள மற்ற எந்த காரிலும் இல்லாத அளவிற்கு டீசல் என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் சொனெட்டை வாங்கலாம்.

best suv cars under 10 lakh rupees

நிசான் மேக்னைட் (Nissan Magnite): ஜப்பானிய கார் நிறுவனமான நிசானில் இருந்து இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு எஸ்யூவி கார் மேக்னைட் ஆகும். 2020இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காருக்கு மக்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இதற்கு பின் மேக்னைட் போன்றதான எந்த காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய நிசான் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை.

best suv cars under 10 lakh rupees

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): மேலே கண்ட கியா சொனெட் காரை போன்ற கொரியன் ஸ்டைல் எஸ்யூவி கார் ஹூண்டாய் வென்யூ ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன. பெட்ரோல், டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைத்தாலும், குறைந்த விலையில் வென்யூ காரை வாங்க நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினை தேர்வு செய்யலாம்.

best suv cars under 10 lakh rupees

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் கார்களுள் ஒன்று, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். அசத்தலான தோற்றத்தை கொண்ட இந்த மாடர்ன் மஹிந்திரா எஸ்யூவி காரை 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வாங்குவோருக்கு காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.66 லட்சம் ஆகும்.

best suv cars under 10 lakh rupees

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): டாடா பஞ்ச் காரை போன்று மைக்ரோ-எஸ்யூவி ரக கார், ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகும். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படும் எக்ஸ்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.43 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. எக்ஸ்டர் சிஎன்ஜி கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.16 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், இன்னும் சில எஸ்யூவி கார்களும் ஏறக்குறைய ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலைகளை கொண்டுள்ளன. ஆனால், அவை இல்லாமல் சிறந்த எஸ்யூவி கார்களை தான் இங்கே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இல் இருந்து எந்தவொரு எஸ்யூவி காரும் இந்த லிஸ்ட்டில் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 6, 2025, 5:00 [IST]
English summary
Best suv cars under 10 lakh rupees tata punch to hyundai exter all details here
மேலும்... #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X