ஆட்டோ எக்ஸ்போ-2025 இன்று ஆரம்பம்! மோடி துவக்கி வைக்கிறார்! அப்டேட்களுக்கு டிரைவ்ஸ்பார்க்-ஐ பின் தொடருங்கள்

இந்தியாவே பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி இன்று டில்லியில் துவங்குகிறது. பிரதமர் மோடி இந்த கண்காட்சியை துவங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் கலந்து கொள்கின்றன? முக்கியமான என்ன வாகங்கள் எல்லாம் அறிமுகமாகின்றன? எந்த வாகனங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்படுகின்றன என்பது உள்ளிட்ட முக்கியமான விபரங்களை எல்லாம் இங்கே காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் பிரியர்களுக்கு தீபாவளி என்றால் இன்று தான் சொல்லலாம். ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் துறையும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி டில்லியில் 3 இடங்களில் நடக்கிறது. பாரத் மண்டபம், யசோபூமி, இந்தியா எக்ஸ்போ சென்டர் ஆகிய இடங்களில் நடக்கிறது. இன்று துவங்கும் இந்த கண்காட்சி வரும் 22 ம் தேதி வரை நடக்கிறது.

bharat mobility auto expo 2025

இன்று முதல் நாள் மீடியாக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. நாளை டீலர்களுக்கு அனுமதி வழங்கப்படும். வரும் 19ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் ஆன்லைனில் புக்கிங் செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த கண்காட்சியில் மாருதி, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, உள்ளிட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஹீரோ மோட்டா கார்ப், டிவிஎஸ், சுஸூகி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட முன்னணி டூவீலர் தயாரிப்பு நிறுவனங்களும் இடம் பெறுகிறது. இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வாகனங்களை தயாரித்து இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் சர்வதேச நிறுவனங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.

இதற்கு முன்னர் நடந்த ஆட்டோ எக்ஸ்போ போல அல்லாமல் ஆட்டோமொபைல் துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவையும் ஒருங்கிணைத்து ஒரே கூரையில் கீழ் நடக்கும் கண்காட்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெறும் வாகனங்கள் மட்டுமல்லாமல் ஆட்டேமொபைல் உதிரிபாகங்கள், டயர்கள், பேட்டரி தொழிற்நுட்பம், ஆட்டோமொபைல் டெக்னாலஜி உள்ளிட்ட பல உட்பிரிவை சேர்ந்த நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பை இங்கு காட்சிப்படுத்துகின்றன.

இந்த நிகழ்வில் மிக முக்கியமாக மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா காரும், ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் காரும் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல வாகனங்கள் மற்றும் புதிய வாகனங்கள், அப்டேட் செய்யப்பட்ட வாகனங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பல நிறுவனங்கள் இந்த தருணத்தை பயன்படுத்தி தங்கள் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு அதன் விலைகளையும் விற்பனை குறித்த விபரங்களையும் அறிவிக்கவுள்ளனர். இதனால் இந்த நிகழ்வின் மீது ஆட்டோமொபைல் பிரியர்கள் அதிகமான கவனம் செலுத்தி வருகின்றனர். நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் இந்த நிகழ்வை நேரடியாக டில்லியிலிருந்து கவர் செய்து நமது வாசகர்களுக்கு வழங்கவுள்ளோம். இது குறித்த முழு அப்டேட்களை நீங்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

இது குறித்த லைவ் பிளாக்கை ஆங்கிலத்தில் நீங்கள் இங்கே கிளிக் செய்து படிக்கலாம். இது போக அவ்வப்போது அறிமுகமாகும் வாகனங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான விபரங்களை எல்லாம் நீங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சமூகவலைதள பக்கங்களை பின்தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம். இது குறித்த முழு விபரங்களை நாங்கள் அவ்வப்போது உங்களுக்கு வழங்கிக்கொண்டே இருப்போம். தொடர்ந்து டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் இணைந்திருங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 9:18 [IST]
English summary
Bharat mobility auto expo 2025 starts today pm modi inauguration tickets venue details
மேலும்... #auto expo 2025 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+