மாருதிகிட்ட இருந்து கடன் வாங்குனாலும், மேக்கப் போட்டு சூப்பர் ஃபிகரா மாத்திட்டாங்க!

2025 ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா அர்பன் க்ரூஸர் BEV, 2023 ஆம் ஆண்டு பெல்ஜியல் நாட்டில் முதன்முதலில் பொது வெளியீட்டுக்குப் பிறகு, டொயோட்டா மற்றும் மாருதி சுஸூகி இடையேயான உள்ள கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக உருவாக்கியுள்ளது. மாருதி e விட்டாரா காரின் மறுபெயரிடப்பட்ட இந்த எலெக்ட்ரிக் வாகனம், நேர்த்தியான மற்றும் செயல்பாட்டுத்தன்மை கொண்ட வடிவமைப்பை கொண்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

இந்த வாகனத்தின் உட்புறத்தில், அர்பன் க்ரூஸர் BEV, e விட்டாராவில் காணப்படும் பண்புகளால் கொண்ட கேபினைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கண்ட்ரோல்கள் அலங்கரிக்கப்பட்ட இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல், சதுர வடிவ ஏசி வென்ட்கள் மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட டேஷ்போர்டு கூறுகள். எனினும், இது சிறிய காண்செப்ட் சில மாற்றங்கள் மூலம் மாருதி இ- விட்டாரா காரிலிருந்து தன்னை வேறுபடுத்து காட்டுகிறது.

toyota urban cruiser bev

இந்த கார் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயை சப்போர்ட் செய்யும் இரட்டை டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜர், பனோரோமிக் சன் ரூஃப் மற்றும் ஆட்டோமொட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகளுடன் வர வாய்ப்புள்ளது.

அந்த காரின் பாதுகாப்பு அம்சங்களாக பல ஏர்பேக்குகள், லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட மேம்பட்ட டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), 360-டிகிரி கேமரா சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் போன்ற சில அம்சங்களை உள்ளடக்கியதாக எதிர்பார்க்கப்படுகிறது.

toyota urban cruiser bev

செயல்திறன் அடிப்படையில், அர்பன் க்ரூஸர் BEV இரண்டு பேட்டரி கட்டமைப்புகளை வழங்க உள்ளது. ஒன்று 49 kWh திறன் கொண்டது மற்றொன்று 61 kWh. இந்த ஆப்ஷன்கள் 144 முதல் 174 பவர் வரையிலான பல்வேறு எலெக்ட்ரிக் வெளியீட்டை வழங்குவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் 189 முதல் 300 Nm வரையிலான டார்க் திறனை வழங்குவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் 550 கிமீயை விட அதிகமான ரேஞ்சை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மார்கெட்டிற்கான குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படாவிட்டாலும், இந்த வாகனம் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் MG ZS EV, டாடா கர்வ் EV மற்றும் விரைவில் டெலிவிரிக்கு தயராகும் ஹூண்டாய் கிரெட்டா இவி போன்ற வாகனங்களுக்கு போட்டியாக உள்ளது. இது சுமார் ரூ. 18 லட்சம் விலை நிர்ணயத்துடன் மார்கெட்டில் நுழைய வாய்ப்புள்ளது.

toyota urban cruiser bev

நீல நிறத்தில் கவர்ச்சிகரமான கலரில் வழங்கப்பட்ட அர்பன் க்ரூசர் BEV இன் கான்செப்ட் எடிசன், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், வலுவான போனட், வீல் ஆர்ச்சுகள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட ஏர்பைக் கொண்ட ஒரு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த காரின் பின்புறத்தில் ஒரு ஒருங்கிணைந்த ஸ்பாயிலர் மற்றும் டெயில் லைட்கள் உள்ளன.

பின்புற பம்ப்பரின் பெரும்பகுதி எடையை குறைக்க காலியாக விடப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு நெறிமுறை உட்புறத்திற்கும் நீட்டிக்கப்படுகிறது. அங்கு இது eVitara காரின் அமைப்பை பிரதிபலிக்கிறது. ADAS பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் இ விட்டாரா காரில் உள்ளது போன்ற தொகுப்பையே ஒருங்கிணைக்க வாய்ப்புள்ளது.

இந்த கார் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களிலும் கிடைக்கும், அதிகமான 61 kWh பேக் இரட்டை மோட்டார் நான்கு வீல் டிரைவ் (4WD) சிஸ்டத்தின் கூடுதல் நன்மையை வழங்கும். மாறாக, இரண்டு வீல் டிரைவ் (2WD) வேரியன்ட்கள் முன்பக்க வீல் டிரைவ் சிஸ்டத்தை பயன்படுத்தும்.

பெரிய பேட்டரியால் இயக்கப்படும் 4WD ஆப்ஷனில் 181 bhp பவர் மற்றும் 300 Nm டார்க் திறனை ஒருங்கிணைந்த வெளியீட்டை கொண்டிருகு்கும். தயாரிப்பு மாடல் 2025ம் ஆண்டே வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மாருதி சுசுகியின் குஜராத் தொழிற்சாலையில் இந்த காரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜப்பான் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட சர்வதேச மார்கெட்டிலும் இந்த வாகனம் விற்பனையாகவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா அர்பன் க்ரூசர் BEV டொயோட்டா மற்றும் மாருதி சுஸூகி இடையேயான கூட்டு முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக உள்ளது. அதன் புதுமையான வடிவமைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பல்வேறு சந்தைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட செயல்திறன், எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் ஒரு போட்டியை ஏற்படுத்தும். இந்த கார் இந்தியாவிலும் உலகளாவிய களத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 13:45 [IST]
English summary
The Toyota Urban Cruiser BEV, revealed at the Bharat Mobility Global Expo 2025, features advanced specifications, safety technologies, and two battery configurations. It aims to compete in the electric vehicle market, with an anticipated launch price of Rs 18 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X