எத்தனை பேரது வாழ்க்கையை மாற்ற போகுதோ... டீசல் போட்டு பணத்தை செலவு பண்ண வேண்டாம்! மொத்தமும் எலக்ட்ரிக்
ஐச்சர் டிரக்குகள் & பேருந்துகள் (Eicher Trucks and Buses), இந்தியாவில் கனரக லாரிகள் மற்றும் பேருந்துகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம். எதிர்பார்த்ததை போல், பாரத் மொபிலிட்டி க்ளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharath Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் ஐச்சர் நிறுவனம் கலந்துக் கொண்டுள்ளது.
2025 ஆட்டோ எக்ஸ்போவில் ஐச்சர் நிறுவனத்தில் இருந்து 'புரோ எக்ஸ்' (Pro X) என்கிற பெயரில் சிறிய ரக எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. ஐச்சரின் முதல் எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களான இவை 2 டன்களில் இருந்து 3.5 டன்கள் வரையிலான எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடியவைகளாக உள்ளன.

லாஸ்ட்-மைல் டெலிவிரி பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய புதிய ஐச்சர் புரோ எக்ஸ் எலக்ட்ரிக் வாகனங்களில் ஏசி வசதி கொண்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட தொலைவு பயணங்களுக்கு ஏற்ப இந்த வாகனங்களில் மிகவும் சவுகரியான டிசைனில் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு டிரைவரின் நிலையை கண்காணிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
சிறிய இடத்திற்குள் திருப்பக்கூடிய இந்த புரோ எக்ஸ் எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களில் உள்ளே இருந்து சாலையை தெளிவாகவும், அகலமாகவும் பார்க்க முடியும் என ஐச்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களை வாங்கிய பின்பு ஐச்சர் நிறுவனத்தின் அப்டைம் செண்டர் (Uptime Centre) & FOTA-சார்ந்த டெலெமேட்டிக்ஸ் (Telematics) கண்காணிப்பு உதவியை பெறலாம்.

இதன் மூலமாக எல்லா நேரங்களிலும், எந்தவொரு இடத்திலும் வாகனம் குறித்த அப்டேட்களை பெற்று உற்பத்தி திறனை மேம்படுத்தலாம். இதற்காக, ஐச்சரின் டிஜிட்டல் டீலர்ஷிப் நெட்வொர்க் உடன் ஐச்சரின் அப்டைம் சென்டர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் டிஜிட்டல் டீலர்ஷிப்பில் வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப தனித்துவமான சேவைகளை பெறலாம்.
புரோ எக்ஸ் போன்ற எலக்ட்ரிக் வாகனங்களை வாடிக்கையாளர்கள் சார்ஜ் செய்துக் கொள்வதற்காக பல்வேறு சார்ஜிங் பாயிண்ட் ஆப்ரேட்டர்கள் உடன் ஐச்சர் நிறுவனம் கூட்டணியில் உள்ளது. புதிய புரோ எக்ஸ் வாகனங்கள் மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள ஐச்சர் நிறுவனத்தின் வெர்சன் 4.0 தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஐச்சரின் இந்த வாகன உற்பத்தி தொழிற்சாலை ஆனது 147.8 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

ஐச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் 2008ஆம் ஆண்டில் இருந்து வால்வோ க்ரூப் (Volvo Group) உடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து விஇ கமர்ஷியல் வைகல்ஸ் (VE Commercial Vehicles) என்கிற பெயரில் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக, இந்தியாவில் உருவாக்கப்படும் ஐச்சர் நிறுவனத்தின் லாரிகள் மற்றும் பேருந்துகள் உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் பல வெளிநாட்டு மக்கள் நம்பி வாங்கக்கூடிய ஐச்சர் நிறுவனத்தின் லாரிகள் தான் தற்போது ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. சிறு தொழில் செய்வோருக்கு ஏற்ற வாகனங்களான புதிய ஐச்சர் புரோ எக்ஸ் லாரிகள் விரைவில் விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஐச்சர் டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.


Click it and Unblock the Notifications









