டிரைவருக்குனு தனியா கதவு கிடையாது... உள்ளே ஏறுவதும், வெளியே வருவதும் மொத்தமா ஈஸி!!
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சியில் பல்வேறு தனித்துவமான வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக, டொயோட்டா (Toyota)-இன் எக்ஸ்-வேன் கியர் (X-Van Gear) கான்செப்ட் வாகனம் (Concept Vehicle)-ஐ சொல்லலாம். எக்ஸ்-வேன் வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 3 விதமான கான்செப்ட் வெர்சன்களில் இந்த எக்ஸ்-வேன் கியர் கான்செப்ட் ஒன்றாகும். கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்த இந்த கான்செப்ட் வாகனத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து நடைபெற்றுவந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சி இன்று (ஜன.22) உடன் நிறைவடைகிறது. மாலை 6 மணி வரையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். மோட்டார் வாகனங்கள் மட்டுமின்றி, வாகனங்கள் தொடர்பான மற்ற பொருட்கள் மற்றும் திட்டங்களுக்கான கண்காட்சிகளும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியின்கீழ் நடத்தப்பட்டன.

அதனால்தான், டெல்லியின் பாரத் மண்டபம், துவார்கா மற்றும் கிரேட்டர் நொய்டாவின் இந்தியா எக்ஸ்போ மார்ட் என 3 இடங்களில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இதில், துவார்காவில் மோட்டார் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்ட ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சி ஜனவரி 17- 22 தேதிகளில் நடத்தப்பட்டது. 2025 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா தனது பல்வேறு விதமான புதிய வாகனங்களையும், கண்டுப்பிடிப்புகளையும் காட்சிப்படுத்தியது.
அவற்றுள், எக்ஸ்-வேன் ஒன்றாகும். பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இது ஒரு வேன் வாகனம் ஆகும். எக்ஸ்-வேன் வாகனத்தை 3 விதமான உடலமைப்புகளில் உருவாக்க திட்டம் வைத்திருப்பதாக கூறும் டொயோட்டா நிறுவனம், அதற்கான 3 எக்ஸ்-வேன் கான்செப்ட்களையும் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி உள்ளது. இதில், எக்ஸ்-வேன் கோர் (Core) ஆனது அதிக இருக்கை வசதிகள் உடன் குடும்பமாக நிறைய பயணிகளுடன் பயணிப்பதற்கு ஏற்ற வாகனமாக உள்ளது.

மற்றொரு கான்செப்ட்டான எக்ஸ்-வேன் டூல் (Tool), வாகனத்திற்கு உள்ளேயே நீண்ட நாட்களுக்கு வசிப்பதற்கு தேவையான வசதிகள் உடன் உள்ளது. இதனால், இந்த டூல் கான்செப்ட்டின் மூலம் உருவாக்கப்படும் எக்ஸ்-வேன் வாகனத்தை 1 அல்லது 2 பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். மூன்றாவதும், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவதுமான எக்ஸ்-வேன் கியர் கான்செப்ட் ஆனது மேற்கூறப்பட்ட இரண்டும் கலந்த கலவையில் உள்ளது.
அதாவது, கியர் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் எக்ஸ்-வேன் வாகனத்தில் கொஞ்சம் அதிக இருக்கை வசதிகள் உடன், நன்கு போதுமான இடவசதியை பெற முடியும். 6 (அ) 7 பேர் க்ரூப்பாக சேர்ந்து பயணிக்க எக்ஸ்-வேன் கியர் ஏற்றதாக இருக்கும். எக்ஸ்-வேன் கியர் கான்செப்ட்டின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் வெறும் 2 கதவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

இதனால், முன் இருக்கைகளில் அமர ஒன்று, பின் இருக்கைகளில் அமர ஒன்று என தனித்தனியாக கதவுகளை திறந்துக் கொண்டிருக்க வேண்டாம். வேன் என்றாலும், இந்த கான்செப்ட் வாகனத்தின் நீளம் கார்களை விட கொஞ்சம் மட்டுமே அதிகமாக 4695மிமீ ஆக உள்ளது. அகலம் 1820மிமீ மற்றும் உயரம் 1855மிமீ ஆகும். மற்றப்படி, இந்த வேன் வாகனத்தில் என்ன மாதிரியான என்ஜின் (அ) எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என்பது குறித்த விபரங்களை டொயோட்டா தெரிவிக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எங்களுக்கு தெரிந்தவரையில், டொயோட்டா எக்ஸ்-வேன்கள் சாதாரணமான பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடன் வழங்கப்படாது. ஹைப்ரீட் அல்லது எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகம் செய்யப்படலாம். எக்ஸ்-வேன்கள் தற்போதைக்கு கான்செப்ட்களாகவே உள்ளன. இவை ஒரு முழு வாகனமாக உருவாக்கப்பட்டு, இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருவதற்குள் சில வருடங்கள் ஓடிவிடும்.


Click it and Unblock the Notifications









