கண்ணை மூடிட்டு இந்த காரை வாங்கி குவிச்சிட்டாங்க! காசு பத்தி கவலையே படல!
பிஎம்டபிள்யூ நிறுவனம் தான் இந்தியாவில் சொகுசு வாகன பிராண்டில் முதன் முறையாக 5000 கார்களை டெலிவரி செய்த மைல் கல்லை கடந்த முதல் நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் அதிக விலை இருந்தாலும் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த விற்பனை மைல் கல்லை கொண்டாடும் விதமாக இ்நிநறுவனம் ஜம்மு காஷ்மீர் முதல் தமிழகத்தில் உள் மதுரை வரை அதிக பவர் கொண்ட சார்ஜிங் ஸ்டேஷனவ்களை அமைக்க திட்டமிட்டுள்ளன். இந்த நகரங்களுக்கு இடையே சுமார் 300 கி.மீ தூரத்திற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்டேஷன்கள் டில்லி, ஜெய்ப்பூர், ஆமதாபாத் , மும்பை, ஹூப்ளி, பெங்களூரு, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் இந்த ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களில் 120kw முதல் 720 kW வரையிலான சார்ஜர்கள் செட்டப் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு சார்ஜ் ஏறும்போது வாடிக்கையாகள் ரிலாக்ஸ் செய்ய காபி, ஸ்னாக்ஸ், மீல்ஸ் என உணவருந்தவும், காரில் உள்ள என்டர்டெயின்மென்ட் சிஸ்டத்தில் பொழுதை கழிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஸ்டாடிக் மற்றும் ஸியோன் அகிய நிறுவனங்களுடன் இணைந்து செட்டப் செய்யப்படவுள்ளன. இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களில் பிஎம்டபிள்யூ மட்டுமல்லாமல் மற்ற இவி கார்களையும் சார்ஜ் செய்ய முடியும். பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் உள்ள பிரிமியம் ஹோட்டல்கள், ரிசார்ட்கள், மால்கள் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே 300 சார்ஜர்களை செட்டப் செய்துள்ளது.
இது போக இந்தியாவில் உள்ள 6000 சார்ஜிங் மையங்களிலும் இந்த காரை சார்ஜ் செய்ய வழி வகை செய்துள்ளுது. இந்த சார்ஜர்கள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய MY BMW என் செயலியை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் லைவ் சார்ஜ் ஸ்டேட்டஸ், சார்ஜர் அளவு கொண்டு ஃபில்டர் செய்வது, அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிவது உள்ளிட்ட தகவல்களை பெற முடியும்.
மேலும் இந்த ஆப் மூலம் இந்த துறையிலேயே முதன் முறையாக நீண்ட தூரம்பயணம் செல்லும் போது எந்த பாதை வழியாக செல்ல வேண்டும். எங்கெங்கு சார்ஜர்கள் உள்ளன. எந்த நேரத்தில் அந்த சார்ஜர்களை புக் செய்ய வேண்டும் என்பதை போன் கால் மூலம் பேசி புக் செய்ய முடியும்.
இது போக பிஎம்டபிள்யூ, மினி ஷோரூம்களில் ஃபாஸ்ட் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. அதையும் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியும். இது போக ஸ்மார்ட் இ-ரூட்டிங், டெஸ்டினேஷன் சார்ஜிங் ஸ்டேஷன், ஹோம் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களும்வழங்கப்படுகிறது. தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐ7, ஐஎக்ஸ், ஐ5, ஐ4, ஐஎக்ஸ்1 லாங் வீல் பேஸ், ஆகிய கார்களும், மினி பிராண்டில் கண்ட்ரிமேன் இ காரும், பிஎம்டபிள்யூ சிஇ04, சிஇ02 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனையாகி வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளாக இந்நிறுவனம் சொகுசு இவி செக்மெண்டில் அதிக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த 2025ம் ஆண்டு முதல் 6 மாதத்தில் மட்டும் மொத்தம் 1322 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 234 சதவீத வளர்ச்சியாகும். இந்தில் ஐஎக்ஸ்1 லாங் வீல் பேஸ் கார் தான் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் பிஎம்டபிள்யூவின் இவி கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சொகுசு கார்களை விற்பனை செய்யவே திண்டாடும் நிலையில் அதிக விலை கொண்ட இவி கார்களை இந்நிறுவனம் அசால்டாக அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து வருகிறது. இது மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








