இந்தியாவை நம்பி களம்புகுந்த கார் கம்பெனி இலாபத்தை அறுவடை செய்யுது! ஏழை நாடுனு சொன்னா இனி நம்பாதீங்க!
2025ஆம் ஆண்டிற்கான தனது செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ள பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியா (BMW Group India), நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) இதுவரை இல்லாத அளவிலான கார் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இந்த 2025ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ குழுமம் மொத்தம் 11 ஆயிரத்து 978 கார்களையும், 3 ஆயிரத்து 976 மோட்டார்சைக்கிள்களையும் விற்பனை செய்துள்ளது.
11,978 கார்களில், பிஎம்டபிள்யூ நிறுவனம் 11 ஆயிரத்து 510 கார்களையும், பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் செயல்படும் மினி (MINI) நிறுவனம் 468 கார்களையும் விற்பனை செய்துள்ளன. குறிப்பாக, 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவில் மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் இதே மூன்றாம் காலாண்டை விட இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 21% வளர்ச்சி கண்டு, இந்தியாவில் பிஎம்டபிள்யூ குழுமத்தின் வரலாற்றில் மிக உயர்ந்த காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளனர். புதிய ஜிஎஸ்டி (GST) விலை நிர்ணயம் மற்றும் பண்டிகைக் கால (Festival time) தேவை அதிகரித்ததால், செப்டம்பர் மாத விற்பனையும் இதுவரை இல்லாத அளவு சிறப்பாக இருந்தது.
இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் சொகுசு எலெக்ட்ரிக் கார் பிராண்டாக பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நிறுவனம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை மீண்டும் அதிக எண்ணிக்கையிலான சொகுசு எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்றுள்ளது. இந்த 9 மாதங்களில் மட்டும் மொத்தம் 2,509 பிஎம்டபிள்யூ மற்றும் மினி எலெக்ட்ரிக் கார்கள் விற்கப்பட்டுள்ளன.

இது முந்தைய ஆண்டை விட 246% அபார வளர்ச்சி ஆகும். மேலும், பிஎம்டபிள்யூ குழுமத்தின் மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் கார்களின் பங்கு 21% ஆக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் பிஎம்டபிள்யூ குழுமத்தில் இருந்து அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் காராக ஐஎக்ஸ்1 (iX1) முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து ஐ7 (i7) இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களையும் சேர்த்து, பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா, மூன்றாம் காலாண்டில் (ஜூலை- செப்டம்பர்) 5,000 எலெக்ட்ரிக் வாகனங்கள் டெலிவிரிகளை (Deliveries) தாண்டியுள்ளது. இலவச வால்பாக்ஸ் (Wallbox) சார்ஜர்கள் மற்றும் 51 நகரங்களில் உள்ள நாடு தழுவிய விரைவு சார்ஜிங் (Fast Charging) டீலர் நெட்வொர்க் ஆகியவை வாடிக்கையாளர்களுக்குச் சிரமமில்லாமல் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் வாகன அனுபவத்தை உறுதி செய்கின்றன.

மேலும், பிஎம்டபிள்யூ மற்றும் மினி வாடிக்கையாளர்கள் 3ஆம் தரப்பு நிறுவனங்களின் 6,000-க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்ட்களையும் பயன்படுத்தலாம். பிஎம்டபிள்யூ ஐ7, ஐஎக்ஸ், ஐ5, ஐ4, ஐஎக்ஸ்1 லாங் வீல்பேஸ், மினி கண்ட்ரிமேன் இ, பிஎம்டபிள்யூ சிஇ 04 (CE 04) மற்றும் பிஎம்டபிள்யூ சிஇ 02 என ஆறு எலெக்ட்ரிக் கார்களும், இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் (Electric Scooters) தற்சமயம் பிஎம்டபிள்யூ குழுமத்தில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களாக விற்பனை செய்யப்படுகின்றன.
எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, ஜனவரி முதல் செப்டம்பர் வரை பிஎம்டபிள்யூ குழுமத்தின் நீண்ட வீல்பேஸ் (Long Wheelbase) கொண்ட கார்களும் விற்பனையில் 169% வளர்ச்சி கண்டு 5,720 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், 5 சீரிஸ், 3 சீரிஸ் மற்றும் ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் கார் ஆகியவை அடங்குகின்றன. இந்த காலகட்டத்தில் பிஎம்டபிள்யூ குழுமத்தின் மொத்த கார்கள் விற்பனையில் நீண்ட வீல்பேஸ் கார்களின் பங்கு 50% ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நாட்டில் 15,000-க்கும் மேற்பட்ட நீண்ட வீல்பேஸ் கார்களை விற்றுள்ளது. மினி நிறுவனத்தின் விற்பனையை மட்டும் தனியாக எடுத்து பார்த்தால், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 468 கார்களை இந்தியாவில் மினி விற்றுள்ளது. அதிகம் விற்பனையான மினி கூப்பர் எஸ் (Cooper S) கார், முந்தைய ஆண்டை விட 90%க்கும் மேல் விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 3,976 மோட்டார்சைக்கிள்களை விற்றுள்ளது. பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்.ஆர் (G 310RR) மிகவும் பிரபலமான பிஎம்டபிள்யூ பைக்காக விளங்குகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாமல், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பைக்குகளில், பிஎம்டபிள்யூ 1300ஜிஎஸ்/ ஜிஎஸ்ஏ ஆகியவை அதிகம் விற்பனையான பைக்குகளாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிஎம்டபிள்யூ விளங்குகிறது. பிஎம்டபிள்யூ கார்கள் மட்டுமின்றி, விலையுயர்ந்த மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ பைக்குகளும் விற்பனை செய்யப்படுவதுதான் பிஎம்டபிள்யூ குழுமத்தின் விற்பனை ஒன்பதே மாதங்களில் 12 ஆயிரம் யூனிட்களை நெருங்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.


Click it and Unblock the Notifications









